search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தயிர் விற்ற பெண்ணுக்கு மோட்சம் கிடைக்க சிபாரிசு செய்த ராமானுஜர்
    X

    தயிர் விற்ற பெண்ணுக்கு மோட்சம் கிடைக்க சிபாரிசு செய்த ராமானுஜர்

    • ஒன்றும் புரியாமல் அர்ச்சகர்களை இதென்ன ராமானுஜர் விநோதம் செய்கிறார் என்று எண்ணியவராய்
    • அந்த சீட்டை ஸ்ரீவேங்கடாசலபதி முன் வைக்கப்போனபோது பெருமாள் அதனை கை நீட்டி பெற்றுக்கொண்டார்.

    திருமலை திருப்பதியில் ஸ்ரீராமானுஜர் மற்றும் சீடர்குழாம் தங்கியிருந்தபோது ஒரு இடைச்சி தயிர் கொண்டுவந்தாள்.

    அவளிடம் இவர்கள் தயிரை வாங்கிக்குடித்தனர். தயிர் என்ன விலை என்று கேட்டனர்.

    அவர்கள் குடிக்க குடிக்க கொடுத்துக்கொண்டே இருந்தாள். அவருக்கு அந்த வைஷ்ணவர்களைப் பார்த்து பரவசம் உண்டாயிற்று.

    பக்தி ஞானப்பற்றுதல் உண்டாயிற்று.

    "எனக்கு பணம் எதுவும் வேண்டாம். எனக்கு சம்சாரபந்தம் விட்டு நல்ல மோட்ச மார்க்கம் கிடைக்க வழிசெய்யுங்கள்" என்று அவள் அவர்களைக் கேட்டுக் கொண்டாள்.

    "உன்னால் மோச கதி அடைய முடியும், நாங்கள் மோட்சம் கொடுக்கும் தகுதியற்றவர்கள் அதனைக்கொடுப்பவர் திருமலையின் மீது அமர்ந்திருக்கிறார். அவரிடம் போய் கேள்" என்றார் யதிராஜர் என்ற ஸ்ரீராமானுஜர்.

    உங்களைப்பார்த்ததும் உங்களால் எனக்கு மோட்சம் கொடுக்க முடியும் என்று முதலில் கருதிவிட்டேன்.

    ஆனால் திருமலை மீது இருப்பவர் பேசமாட்டாரே. தாங்கள் ஒரு சீட்டெழுதி சிபாரிசு செய்து மோசமளிக்கும்படி செய்யுங்கள். என்றாள் அவள்.

    ஸ்ரீயதிராஜரும் அவ்வாறே இசைந்து ஸ்ரீவேங்கடாசலபதிக்கு ஒரு சீட்டு எழுதிக்கொடுத்தார்.

    யதிராஜர் எனும் ராமானுஜரை சுற்றி நின்று கொண்டிருந்த அனைவரும் இது என்ன வேடிக்கையும் விநோதமுமான செயலாய் இருக்கிறது என்று எண்ணினார்கள்.

    ஆனால் கொண்டி எனும் அந்த இடைச்சியோ அந்த சீட்டோலையை சந்தோஷமாக ராமாஜரிடமிருந்து பெற்றுக்கொண்டு ஸ்வாமி புஷ்கரணியில் சநானம் செய்துவிட்டு பிரதட்ஷண்யமாக வந்து ஸ்ரீவேங்கடாசலபதியைத் தொழுதாள் ஸ்ரீராமானுஜர் கொடுத்த சீட்டோலையை பெருமான் சன்னதியில் சமர்ப்பித்தாள்.

    "இது என்ன சீட்டு" என்று அர்ச்சகர்கள் கேட்டனர்.

    ஸ்ரீயதிராஜ சாமி பெருமாளுக்கு கொடுக்கச் சொன்ன சீட்டுதான் இது" என்றாள் கொண்டி.

    ஒன்றும் புரியாமல் அர்ச்சகர்களை இதென்ன ராமானுஜர் விநோதம் செய்கிறார் என்று எண்ணியவராய் அந்த சீட்டை ஸ்ரீவேங்கடாசலபதி முன் வைக்கப்போனபோது பெருமாள் அதனை கை நீட்டி பெற்றுக்கொண்டார்.

    ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த ஸ்ரீஉடையவராகிய ராமானுஜரின் சீட்டு என்று அறிந்த மாத்திரத்தில் கொண்டியைப் பார்த்து "உனக்கு மோட்சம் கொடுத்தேன்" என்றருளினார்.

    அப்போது பிரகாசமான ஒளியுடன் ஒரு விமானம் வந்தது இடைச்சி கொண்டி அதில் ஏறி அமர, அது பறந்து பரமபதம் சேர்ந்தது.

    தயிர் விற்ற பெண்ணுக்கு மோட்சமா? ஆம் ஸ்ரீயதிராஜர் எழுதிக் கொடுத்த சீட்டுக்கு அத்தகைய மகத்துவம் இருந்தது.

    Next Story
    ×