search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smirti Mandana"

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 187 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா கடைசி ஓவரில் 187 ரன் எடுத்ததால் சமனில் முடிந்தது.

    மும்பை:

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, அலிசா ஹீலி தலைமையிலான உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.

    இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை மூனி 82 ரன்னும், மெக்ராத் 70 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடினார். அவர் 49 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    மற்றொரு தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 34 ரன்னும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ரிச்சா கோஷ் 13 பந்தில் 3 சிக்சர் உள்பட 26 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் உள்ளார்.

    கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தியா 13 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் ஆடிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 2 சிக்சர் உள்பட 20 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 16 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் இந்திய அணி டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 227 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஹோவ்:

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. ஹோவ் நகரில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் அரை சதமடித்து 50 ரன்னுடன் களத்தில் இருந்தார். டேனி வியாட் 43 ரன் அடித்தார்.

    இந்தியா சார்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவுடன் விக்கெட் கீப்பர் யஸ்திகா பாட்டியா ஜோடி சேர்ந்தார். பாட்டியா அரை சதம் அடித்த நிலையில் அவுட்டானார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து இறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இந்திய மகளிர் அணி 44.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் 74 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகி விருது பெற்றார்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 142 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 16.4 ஓவரில் 146 ரன்கள் எடுத்து வென்றது.

    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டெர்பியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து பெண்கள் அணி 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கெம்ப் அதிரடியாக ஆடி 37 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பவுச்சர் 34 ரன்கள் எடுத்தார்.

    இந்திய பெண்கள் அணி சார்பில் ஸ்னே ரானா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 20 ரன்னிலும், ஹேமலதா 9 ரன்னிலும் அவுட்டாகினர்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா அதிரடி காட்டினார். அவர் 53 பந்தில் 13 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 29 ரன்கள் எடுத்துள்ளார்.

    இறுதியில், இந்திய பெண்கள் அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    ×