என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "South Africa T20 League"
- சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 76 ரன்கள் வித்தியாசத்தில் MI கேப் டவுன் -யிடம் தோற்றது.
- 16வது ஓவரில் ஐடன் மார்க்ரம் வீசிய பந்தில் கானர் எஸ்டெர்ஹுய்சென் ஒரு சிக்ஸர் அடித்தார்.
தென் ஆப்பிரிக்காவின் SA20 2025 கிரிக்கெட் பிரீமியர் லீக் சீசன் பரபரப்பான முடிவை எட்டியுள்ளது.
நேற்று முன் தினம் நடந்த இறுதிப்போட்டியில் MI கேப் டவுன் வெற்றி பெற்று தங்கள் முதல் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. இரண்டு முறை சாம்பியனான சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 76 ரன்கள் வித்தியாசத்தில் MI கேப் டவுன் -யிடம் தோற்றது.
இந்நிலையில் போட்டியின் போது ஹோவர் மைதானத்தில் நடந்த ஒரு வினோத சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆட்டத்தின் 16வது ஓவரில் ஐடன் மார்க்ம் வீசிய பந்தில் கானர் எஸ்டெர்ஹுய்சென் ஒரு சிக்ஸர் அடித்தார். பார்வையாளர்கள் அரங்கை நோக்கி வந்த அந்த பந்தை தீவிர ரசிகர் ஒருவர் பிடிக்க பிரயர்த்தனப்பட்டார்.
ஆனால் அவர் நின்றிருந்த மேல் டெக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். அவ்வாறு அவர் விழும்போது அவரின் கால் சட்டை (டவுசர்) அவிழ்ந்து விலகி நிலைமையை மேலும் மோசமாகியது. இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
???? this man tried going for a catch and his pants came off. @SA20_League #SA20League pic.twitter.com/47f0sgQLck
— GQ(Querida) (@GostosaMN) February 8, 2025
- இன்று இரவு 9 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ்-ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.
- ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை பிரிடோரியோ கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தி 3-வது வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அந்நாட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் ஈஸ்டர்ன் கேப் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் எம்.ஐ.கேப்டவுன் அணியை வீழ்த்தியது.
172 ரன் இலக்கை 19.3 ஓவரில் ஈஸ்டர்ன் கேப் அணி எடுத்தது. இரவு நடந்த ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை பிரிடோரியோ கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தி 3-வது வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் அணி 15.4 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய பிரிடோரியோ அணி 13 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இன்று இரவு 9 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ்-ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி கலர்ஸ் தமிழ் சேனலில் தமிழில் வர்ணனை செய்யப்படுகிறது.