search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "south Kashmir"

    • குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தென்காசி பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மலை அடிவாரத்தில் உள்ள அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்றும் காலை முதலே குற்றாலம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில், அருவிகளில் மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ஆற்றுப்படுகையின் ஓரமாக யாரும் இறங்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    மழை குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் பகுதி அருவிகளில் ஆனந்த குளிக்க முடியாததால் ஏமாற்றத்துடனே திரும்பி சென்றனர். இன்று காலை முதல் மழை நீடித்து வருவதால் தென்காசி பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் சிலர் பாதுகாவலர்கள் இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறித்து சென்றனர்.
    ஜம்மு:

    காஷ்மீரில் ரோந்து பணிகளில் ஈடுபடும் ராணுவவீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களின் பாதுகாவலர்களிடம் இருந்து, பயங்கரவாதிகள் துப்பாக்கிகளை பறித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

    இந்நிலையில், குல்காம் மாவட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவரும், வக்கீலுமான கவ்ஹார் என்பவர் அங்கு உள்ள கிராமத்தில் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றார். அவருடைய பாதுகாப்புக்காக 2 பாதுகாவலர்கள் சென்றிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் பாதுகாவலர்கள் இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறித்து சென்றனர். இதுதொடர்பாக போலீசில் கவ்ஹார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர். 
    தெற்கு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். #KashmirAttack #KashmirJawanKilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  அவ்வகையில் புல்வாமா மாவட்டம் தாக்கியா வாங்கம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கிடைத்து, மத்திய ரிசர்வ் படை போலீசார் இன்று காலையில் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

    பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை நோக்கி பாதுகாப்பு படையினர் முன்னேறியபோது, தானியங்கி துப்பாக்கிகள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்திக்கொண்டே முன்னேறினர். இந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர் மன்ஜித் குமார் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இந்த பதற்றமான சூழ்நிலையை பயன்படுத்தி பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #KashmirAttack #KashmirJawanKilled
    ×