என் மலர்
நீங்கள் தேடியது "Southern Railway announced"
- வேலூர், விழுப்புரத்திலிருந்து இயக்கப்படுகிறது
- ஆடி மாத பவுர்ணமி முன்னிட்டு ஏற்பாடு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் மெமு ரெயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது.
வேலூர் கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து 1-ந் தேதி இரவு 9.50 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை நள்ளிரவு 12.05 மணிக்கு அடைகிறது.
பின்னர் 2-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தை காலை 5.35 மணிக்கு அடைகிறது.
மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து 1-ந் தேதி காலை 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை முற்பகல் 11 மணிக்கு வந்தடையும்.
பின்னர், திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு,விழுப்புரம் ரெயில் நிலையத்தை பிற்பகல் 2.15 மணிக்கு சென்றடையும். தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் மெமு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து 1-ந் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாகதிருவண்ணாமலை ரெயில்நிலையத்தை இரவு 10.45 மணிக்குச் சென்றடையும்.
பின்னர் திருவண்ணா மலை ரெயில் நிலையத்தில் இருந்து ஆக. 2-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, மீண்டும் விழுப்புரம் ரெயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடையும்.
திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் மூலம் வேலூர் வழியாக சென்னை கடற்கரைக்கும், விழுப்புரம் வழியாக தாம்பரம் மற்றும் மயிலாடுதுறைக்கும் பயணிக்கலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- 19 ரெயில்களின் இயக்க நேரம் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையில் மாற்றம்.
- புதிய ரெயில்வே கால அட்டவணை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கோவை:
தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2025-ம் ஆண்டுக்கான புதிய ரெயில்வே கால அட்டவணை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சேலம் ரெயில்வே கோட்டத்தில் 19 ரெயில்களின் இயக்க நேரம் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அட்டவணையின் படி கரூர்-சேலம் ரெயில் சேலத்துக்கு காலை 9.45 மணிக்கும், ராஜ்கோட்-கோவை ரெயில் கோவைக்கு இரவு 8.55 மணிக்கும், பொள்ளாச்சி-கோவை ரெயில் கோவைக்கு இரவு 10.50 மணிக்கும், பொள்ளாச்சி-கோவை ரெயில் கோவைக்கு காலை 9.25 மணிக்கும், திருச்சி-கரூர் ரெயில் கரூருக்கு இரவு 8 மணிக்கும், கட லூர் துறைமுகம்-சேலம் ரெயில் சேலத்துக்கு காலை 9.10 மணிக்கும், சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேலத்துக்கு காலை 6.15 மணிக்கு வந்து சேரும்.
சொரனூர்-கோவை ரெயில் கோவைக்கு மாலை 5.35 மணிக்கும், மங்க ளூரு-கோவை ரெயில் கோவைக்கு மாலை 6.25 மணிக்கும், சில்சார்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் கோவைக்கு முற்பகல் 11.55 மணிக்கும், பெங்க ளூரு-கோவை ரெயில் கோவைக்கு இரவு 9.05 மணிக்கும், சேலம்-கரூர் ரெயில் கரூருக்கு காலை 7.15 மணிக்கும் வந்தடையும்.
அதேபோல 7 ரெயில்களின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் மாலை 5.35 மணிக்கும், மேட்டுப்பாளையம்-போத்தனூர் ரெயில் மதியம் ஒரு மணிக்கும், கோவை-சொரனூர் ரெயில் மாலை 4.25 மணிக்கும், கோவை-ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12.45 மணிக்கும், கரூர்-சேலம் ரெயில் இரவு 8.05 மணிக்கும், ஈரோடு-பாலக்காடு டவுன் ரெயில் காலை 7 மணிக்கும், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரெயில் இரவு 7.45 மணிக்கும் புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






