என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "special police"
- காருக்குள் கட்டிப்போட்டு ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.
- காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது சந்தேகத்திற்கு இடமாக பேசியுள்ளனர்.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனம் அதே பகுதியில் ஈங்கூர் பாலப்பாளையம் பிரிவு அருகே உள்ளது. கடந்த 23-ந் தேதி மாலையில் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் சத்தியமூர்த்தி (47) என்பவர் பாலப்பாளையம் பிரிவு கிளை நிறுவனத்தில் பண பரிவர்த்தனை முடிந்த பிறகு ரூ.23 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு ஈங்கூரில் உள்ள நிறுவனத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாலப்பா ளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது வேறு ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் சத்திய மூர்த்தியை வழிமறித்து காருடன் கடத்தி சென்றனர். பின்னர் ஈரோடு அருகே ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் காட்டு பகுதியில் சத்தியமூர்த்தியை காருக்குள் கட்டிப்போட்டு ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.
இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் மகேந்திரன் என்பவர் சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் செ ன்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். மேலும் பல்வேறு பகுதி களில் கண்காணிப்பு கேமரா க்களையும் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே நால்ரோடு என்ற இடத்தில் தனிப்படை போலீசார் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது சந்தேகத்திற்கு இடமாக பேசியுள்ளனர். பின்னர் அவர்களை சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுக்கா, கண்ணங்குடி அருகே கள்ளர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மனோகர் (வயது 29) என்பதும், மற்றொருவர் அதே ஊரைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகன் நவநீதன் (வயது 27) என்பதும் தெரிய வந்தது. இதில் மனோகர் கடந்த 8 வருடங்களாக சத்தியமூர்த்தி வேலை செய்யும் அதே நிறுவனத்தில் ஸ்டோர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். மற்றொருவரான நவநீதன் என்பவரும் அதே நிறுவனத்தில் 6 மாதங்கள் வேலை செய்து பின்னர் கடந்த 3 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
மனோகரும், நவநீதனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாக இருந்துள்ளனர். தற்போது மனோகர் தொடர்ந்து அதே நிறுவனத்தில் வேலை செய்து வருவதால் அந்த நிறுவனத்தில் தினமும் சத்தியமூர்த்தி பண பரிவர்த்தனைக்காக அதே பகுதியில் உள்ள கிளை நிறுவனத்திற்கு சென்று வந்ததை மனோகர் கண்கா ணித்து ள்ளார். இது பற்றி தனது நண்பர் நவநீதனுக்கு தெரிவித்துள்ளார். பின்னர் இந்த தகவலை மனோகரும், நவநீதனும் தங்களது உறவி னர்களுக்கு தெரிவித்து ள்ளனர். அவர்கள் இந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து மனோகர் மற்றும் நவநீத னின் உறவினர்கள் 4 பேர் சத்தியமூர்த்தியை கண்கா ணித்து அவர் வரும்போது காருடன் கடத்தி சென்று ரூ.23 லட்சம் பணத்தை பறித்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து பணம் கொள்ளை போன தற்கு உடந்தையாக இருந்த மனோகர் மற்றும் நவநீதனை சென்னிமலை போலீசார் கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று இரவு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மனோகர் மற்றும் நவநீதன் கொடுத்த தகவலின் பேரில் பணத்தை கொள்ளை யடித்து சென்ற தலை மறைவான 4 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வட மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(வயது18) என்பவர் கொலை செய்யப்பட்டார்.
- இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் காவலர் ரமேஷ் தலைமையிலான தனிப்படையினர் ெரயில் மூலம் பீகார் சென்றுள்ளனர்.
சூலூர்,
சூலூர் அருகே செங்கோடகவுண்டன் புதூர் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வட மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(வயது18) என்பவர் கொலை செய்யப்பட்டார்.
போலீசாரின் விசாரணையில் அவருடன் தங்கி இருந்த சங்கர் மாஞ்சி, உதான் சவுத்ரி மற்றும் பிண்டு மாஞ்சி ஆகிய 3 பேர் அவரை தலையில் கல்லை போட்டு செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக சங்கர் மாஞ்சி என்பவர் கைது செய்தனர். தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மற்ற 2 பேரும் தப்பியோடி விட்டனர்.
தலைமறைவான 2 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பீகாருக்கு சென்று கயா, நாளந்தா உள்ளிட்ட மாவட்டத்தில் ேதடினர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை.
இந்த நிலையில் முக்கிய குற்றவாளான உதான் சவுத்ரி இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் காவலர் ரமேஷ் தலைமையிலான தனிப்படையினர் ெரயில் மூலம் பீகார் சென்றுள்ளனர்.
- முத்துசாமி வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு யாரோ சிலர் வீட்டின் பின்புறத்தில் ஏணி வைத்து ஏறி குதித்து உள்ளே புகுந்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
- தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் அருகே உள்ள அவினாசி கவுண்டர் பாளையம் பகுதியை சேர்ந்த வர் முத்துசாமி (வயது 68). விவசாயி. இவரது விவசாய நிலம் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அருகே உள்ள இந்திரா நகரில் உள்ளது.
வக்கீல் தோட்டம் என்று அழைக்கப்படும் அவரது தோட்டத்தில் பண்ணை வீடும் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீட்டில் முத்து சாமி தங்கி விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த 9-ந் தேதி பண்ணை வீட்டின் படுக்கை அறையில் உள்ள பீரோவில் ரூ.27 லட்சம் வைத்து விட்டு பீரோவை பூட்டி வைத்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி முத்துசாமி பண்ணை வீட்டை பூட்டி விட்டு திருப்பூர் சென்று விட்டார். அப்போது அவர் பீரோவை பூட்டாமல் சென்று விட்டதாக கூறப்படு கிறது.
இதற்கிடையே நேற்று முன் தினம் பண்ணை வீட்டு தோட்டத்தில் வேலை செய்யும் தங்கராஜ் என்பவர் முத்துசாமிக்கு போன் செய்து வீட்டின் பின்புறம் உள்ள ஏணி சாய்ந்து கிடப்பதாக கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த முத்துசாமி உடனடியாக பவானிசாகர் பண்ணை வீட்டுக்கு வந்து பார்த்தார்.
அப்போது படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த ரூ.27 லட்சம் மாயமாகி இருந்ததும் தெரிய வந்தது.
முத்துசாமி வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு யாரோ சிலர் வீட்டின் பின்புறத்தில் ஏணி வைத்து ஏறி குதித்து உள்ளே புகுந்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து முத்துசாமி பவானிசாகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்து விசா ரணை நடத்தினர்.
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கபட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தாளவாடி போலீஸ் இன்ஸ் பெக்டர் செல்வம், கோபிசெட்டிபாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், பவானிசாகர் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் தனி தனியாக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்