என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Special Tax Collection Camp"
- நெல்லை மாநகராட்சி சார்பாக 4 மண்டல பகுதிகளில் வரிவசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக பொதுமக்களின் நலன் கருதி நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
- 4 மண்டல உதவி கமிஷனர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து, கிறிஸ்டி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
நெல்லை மாநகராட்சி சார்பாக 4 மண்டல பகுதிகளில் வரிவசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக பொதுமக்களின் நலன் கருதி நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது. 4 மண்டல உதவி கமிஷனர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து, கிறிஸ்டி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
நெல்லை மண்டலத்தில் வார்டு 21-ல் உள்ள பேட்டை உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள சேனைத்தலைவர் சமுதாய நலக்கூடத்திலும், தச்சநலல்லூர் மண்ட லத்தில் வார்டு 29-ல் உள்ள மீனாட்சிபுரம் நகர்மன்ற மகளிர் மேல்நிலைப்பள்ளி யிலும், மேலப்பாளையம் மண்டலத்தில் வார்டு 31-ல் உள்ள புனித தோமையார் பள்ளி வளாக கூட்டரங்கிலும் பாளையங்கோட்டை மண்டலத்தில் வார்டு 55-ல் உள்ள 8-வது வடக்கு தெரு விக்னவிநாயகர் கோவில் எதிரில் உள்ள கலையரங்கிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாம்களில் அந்தந்த வார்டு பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள், வணிகவளாக உரிமையாளர்கள், தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாளச்சாக்கடை சேவை கட்டணம் போன்ற நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வரியினங்களை உடனடியாக செலுத்திடவும், மேலும் சொத்துவரி, குடிநீர் கட்டணவரி விதிப்பு பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவை களுக்கும் கோரிக்கை மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
பின்தங்கியுள்ள வரிவசூல் மேம்படுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான வரியினங்களை அன்றைய தினமே நிலுவையின்றி செலுத்திட மாநகராட்சி சார்பில் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது
- மாநகராட் சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்த வேண்டும்.
கோவை,
கோவை மாநகரில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் 2 நாட்கள் நடை பெற உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
2022- 2023 நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர்க் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக, மக்களின் வசதிக்காக நாளை (21-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (22-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் கீழ்க்கண்ட இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறவுள்ளன.
சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்: கிழக்கு மண்டலம் 56, 57-வது வார்டுக்கு உள்பட்ட ஒண்டிப்புதூர் அரசுப் பள்ளி, திருச்சி சாலை மற்றும் 24-வது வார்டுக்கு உள்பட்ட கொடிசியா சாலையில் உள்ள மாநகராட்சி பிரிவு அலுவலகம்.மேற்கு மண்டலம் 35-வது வார்டுக்கு உள்பட்ட நீலியம்மன் நகர் 3-வது வீதி மற்றும் நாகாத்தம்மன் கோயில் வளாகம், 40-வது வார்டில் பொங்காளியூர் மாநகராட்சிப் பள்ளி, 34-வது வார்டில் பூம்புகார் நகர், மணி மகால் மண்டபம்.
தெற்கு மண்டலம் 76-வது வார்டில் பாரதி சாலை, சாஸ்தா நகர், 77ஆவது வார்டில் ராம மூர்த்தி சாலை, இ.பி.காலனி, 89-வது வார்டில் பள்ளிக்கடை வீதி மாநகராட்சி வார்டு அலுவலகம்.வடக்கு மண்டலம் 28-வது வார்டுக்கு உள்பட்ட காமதேனு நகர் மாநகராட்சி வார்டு அலுவலகம், 19-வது வார்டு மணியகா ரன்பாளையம் அம்மா உணவ கம். மத்திய மண்டலம் 32-வது வார்டு சிறுவர் பூங்கா, ரத்தினபுரி, 63-வது வார்டு ஒலம்பஸ் 80 அடி சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம், 84-வது வார்டு ஜி.எம்.நகரில் உள்ள தர்க்கத் இஸ்லாம் பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெறும் முகாமை மக்கள் பயன்ப டுத்தி, மாநகராட் சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்த கேட்டுக் கொள்ள ப்படுகிறது. இவ்வாறு அவர் கூற உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்