search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "speeches"

    • தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
    • பா.ஜ.க. கூட்டணி எம்.பி. மதுரையில் வெற்றி பெற வேண்டும் என அண்ணாமலை பேசினார்

    மதுரை

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" பயணத்தை ராமேசுவரத்தில் தொடங்கி னார். ராமநாதபுரம், சிவ கங்கை மாவட்டங்களை தொடர்ந்து நேற்று மதுரை மாவட்டத்தில் அவர் பய ணத்தை மேற்கொண்டார்.

    இன்று காலை ஒத்தக்கடை நரசிங்க பெருமாள் கோவில் பகுதியில் அண்ணாமலை நடை பயணத்தை தொடங்கி னார். ஒத்தக்கடை தேவர் சிலை அருகே நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஊழல் மிகுதியாக இருக்கிறது. "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல தமிழகத்தில் நடைபெறும் மொத்த ஊழலுக்கு கிழக்கு தொகுதி சாட்சியாக இருக்கிறது. அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை செயல்பட்டிருந்தால் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.

    மற்ற மாநிலங்களில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 22 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

    ஆண்டிற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை தருகிறோம் என்று கூறிய தி.மு.க. குரூப் 4 தேர்வு நடைபெற்று 13 மாதங்கள் ஆகியும் 2 ஆயிரம் பேருக்கு தான் வேலை கொடுத்தி ருக்கிறார்கள். மதுரை அரசு மருத்துவமனையில் 1300 நர்சுகளுக்கு பற்றாக்குறை உள்ளது. அதேபோல் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதிகளவில் பற்றாக்குறை உள்ளது.

    மதுரையில் நெசவா ளர்கள் அதிகமாக உள்ள னர். ஆனால் தி.மு.க. அரசு அவர்களுக்காக திட்டங்கள் எதுவும் கொண்டு வர வில்லை. ஆனால் மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்து விருது நகரில் ஜவுளி பூங்கா திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இதனால் 25 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

    மதுரை எம்.பி. மோடியை பற்றி மட்டும் குறை கூறுகிறார். காவிரி நீர் குறித்து பேசவில்லை. கேரளாவில் இருந்து மருந்து கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்து பேசவில்லை. எனவே மதுரை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி. வெற்றி பெற வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் தமிழகம், பாண்டிச் சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர் ராஜசிம்மன், கிழக்கு மாவட்ட தலைவர் நாகராஜன், கிழக்கு மண்டல் தலைவர் பூமிநாதன், ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், பொதுச்செய லாளர்கள் மூவேந்திரன், கண்ணன், நிர்வாகிகள் கட்கம் ரவி, கல்வாரி தியாகராஜன், வெள்ளைச்சாமி, குறிஞ்சி அரவிந்த், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திர பாண்டியன், செல்வமாணிக்கம், வழக்கறிஞர் பிரிவு பிரபாகரன், நெசவாளர் பிரிவு கிருஷ்ணகுமார், சோலை மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து நத்தம் ரோடு ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பொதுச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மதுரை மாநகர் பகுதியில் அண்ணாமலை பயணத்தை தொடங்கினார்.

    ×