search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sports hall"

    • 7 ஏக்கர் பரப்பளவில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க இடத்தை தேர்வு செய்தும் விரைவில் பணிகளை தொடங்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.
    • சிறப்பாக விளையாட்டு அரங்கம் செயல்பட முழு ஒத்துழைப்பை பஞ்சாயத்து மூலம் கொடுப்போம் என்றார்.

    காங்கயம் :

    தமிழகத்தில் விரைவில் 10 சட்டமன்ற தொகுதியில் அரசின் பொது நல புதிய திட்டங்களில் ஒன்றான சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் காங்கயம் சட்டமன்ற ெதாகுதிக்குட்பட்ட சிவன்மலை ஊராட்சி எல்லையான கல்லேரி ரோட்டில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க அதற்கான இடத்தை தேர்வு செய்தும் விரைவில் பணிகளை தொடங்கவும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து திருப்பூர் கலெக்டர் வினீத் இடத்ைத நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது காங்கயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் மகேஷ்குமார் தலைமையில் சிவன்மலை பஞ்சாயத்து தலைவர் துரைசாமி, துைண தலைவர் சண்முகம், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், படியூர் பஞ்சாயத்து தலைவர் ஜீவிதா சண்முக சுந்தரம், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் பாலசுப்பிரமணியம், சிவன்மலை கிளை தி.மு.க. செயலாளர் சிவகுமார் முன்னிலையில் கலெக்டருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சிவன்மலை பஞ்சாயத்து செயலாளர் காளியம்மாள் நன்றி கூறினார். இது பற்றி சிவன்மலை பஞ்சாயத்து தலைவர் கே.கே.துரைசாமி கூறும் போது, தமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தொடங்கப்படும் தமிழக அரசின் சிறு விளையாட்டு அரங்கம் எங்களது காங்கயம் தொகுதியில் அதுவும் குறிப்பாக நமது சிவன்மலை பஞ்சாயத்து எல்லையில் அமைய உள்ளதை வரவேற்கிறோம். இளைஞர்கள், இளம்பெண்களின் உடல், மனநலம் மற்றும் எதிர்கால நலன் கருதி சிறப்பாக விளையாட்டு அரங்கம் செயல்பட நாங்கள் முழு ஒத்துழைப்பை எங்களது பஞ்சாயத்து மூலம் கொடுப்போம் என்றார். 

    • தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
    • வீராங்கனைகளுக்கான விடுதி நேரு விளையாட்டு அரங்கத்திலும், கூடைப்பந்து, ஆக்கி, கபடி வீராங்கனைகளுக்கான விடுதி காட்பாடியிலும் உள்ளன.

    சேலம்:

    தமிழக கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவி கள் விளையாட்டு துறைகளில் சாதனை படைப்பதற்கு ஏற்ப அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதி கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, வாலிபால், பளு தூக்குதல், வாள்வீச்சு வீரர்களுக்கான விடுதி சென்னை நேரு விளை யாட்டு அரங்கத்திலும், ஆக்கி வீரர்க ளுக்கான விடுதி கோவில்பட்டி யிலும் செயல்பட்டு வருகிறது.

    தடகளம், குத்துச்சண்டை, வாலிபால், கால்பந்து, பளு தூக்குதல், ஜீடோ வீராங்க னைகளுக்கான விடுதி நேரு விளையாட்டு அரங்கத்திலும், கூடைப்பந்து, ஆக்கி, கபடி வீராங்கனைகளுக்கான விடுதி காட்பாடியிலும் உள்ளன.

    இந்த விடுதிகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையாக விளங்குவதற்கு 17 வயது நிரம்பிய பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்றும் கல்லூரியில் இளநிலை, முதுநிலை படிக்கும் மாணவ, மாணவிகள் தகுதியுடையவர் ஆவர். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாண விகள் சிறப்பு விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையத்தள முகவரியில் விண்ணப்பிக்க லாம். இதற்கான கடைசி நாள் வருகிற 1-ந் தேதி ஆகும். இதையடுத்து சிறப்பு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 3-ந் தேதி முதல் நடைபெறுகிறது. இந்த தகவலை சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.

    ×