search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srilankan president"

    சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலைப் புலிகள் முன்னர் திட்டமிட்டதாக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார். #LTTE #planefromChennai #MaithripalaSirisena
    கொழும்பு:

    ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்த இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அங்கு வாழும் சிங்களத்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலைப் புலிகள்  திட்டமிட்டதாக அப்போது மைத்ரிபாலா சிறிசேனா குறிப்பிட்டார்.

    அந்த காலகட்டத்தில் இலங்கையின் அந்நாள் அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் ராணுவ தளபதி அனைவருமே வெளிநாடுகளுக்கு சென்றிருந்தனர். தற்காலிக ராணுவ மந்திரியாக அப்போது நான் பொறுப்பேற்றிருந்தேன்.


    சென்னையில் இருந்தோ, வேறேதாவது காட்டுப் பகுதியில் இருந்தோ கொழும்பு நகரில் உள்ள சில முக்கிய பகுதிகளில் விடுதலைப் புலிகள் வான்வழியாக வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப் போவதாக உளவுத்துறை மூலம் தகவல் வந்தது. இதை தொடர்ந்து அனைவரும் வெளியேறி விட்டனர்.

    தாக்குதலுக்கு பயந்து நானும் கொழும்புவை விட்டு வெளியேறி வெவ்வேறு பகுதிகளில் அப்போது தங்கி இருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2007 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் கொழும்பு நகரின்மீது இருமுறை விமான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LTTE #planefromChennai #MaithripalaSirisena
    விடுதலைப் புலிகள் அடையாளத்தை அழிக்க முடியவில்லை. அவர்கள் வெளிநாடுகளில் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளார். #LTTE #MaithripalaSirisena
    கொழும்பு:

    இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் முடிந்த 9-வது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் நடந்தது. அதில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம். ஆனால் அவர்களது அடையாளத்தை அழிக்க முடியவில்லை. அவர்கள் வெளிநாடுகளில் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இலங்கையில் சுதந்திரம் (தமிழ் ஈழம்) பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

    அதற்காக வெளிநாடுகளில் மிகவும் தீவிரமாக உள்ளனர். காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க கடந்த மாதம் லண்டன் சென்று இருந்தேன். அப்போது அங்கு எனக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

    விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் 2009-ம் ஆண்டு மே 18-ந்தேதி போரில் கொல்லப்பட்டார். அதன்பிறகு வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா கடந்த 2015-ம் ஆண்டு ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு தமிழர்கள் பெரும் ஆதரவு அளித்தனர். #LTTE #SrilankanPresident #MaithripalaSirisena
    ×