search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாடுகளில் மீண்டும் ஒன்றுசேரும் விடுதலைப்புலிகள் - இலங்கை அதிபர் சிறிசேனா அலறல்
    X

    வெளிநாடுகளில் மீண்டும் ஒன்றுசேரும் விடுதலைப்புலிகள் - இலங்கை அதிபர் சிறிசேனா அலறல்

    விடுதலைப் புலிகள் அடையாளத்தை அழிக்க முடியவில்லை. அவர்கள் வெளிநாடுகளில் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளார். #LTTE #MaithripalaSirisena
    கொழும்பு:

    இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் முடிந்த 9-வது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் நடந்தது. அதில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம். ஆனால் அவர்களது அடையாளத்தை அழிக்க முடியவில்லை. அவர்கள் வெளிநாடுகளில் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இலங்கையில் சுதந்திரம் (தமிழ் ஈழம்) பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

    அதற்காக வெளிநாடுகளில் மிகவும் தீவிரமாக உள்ளனர். காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க கடந்த மாதம் லண்டன் சென்று இருந்தேன். அப்போது அங்கு எனக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

    விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் 2009-ம் ஆண்டு மே 18-ந்தேதி போரில் கொல்லப்பட்டார். அதன்பிறகு வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா கடந்த 2015-ம் ஆண்டு ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு தமிழர்கள் பெரும் ஆதரவு அளித்தனர். #LTTE #SrilankanPresident #MaithripalaSirisena
    Next Story
    ×