search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State govts"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உள்ளூர் அளவில் கொரோனா தொற்று பரவலை நிர்வகிப்பதற்கு வட்ட அளவில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பு இருப்பது அவசியம்.
    • பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நோய்த்தொற்று அதிகரிப்பு காணப்படுவது குறித்தும் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

    புதுடெல்லி:

    கொரோனா தொற்று தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து சுகாதார மதிப்பாய்வு செய்ய பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறையினர் பங்கேற்று மதிப்பீடுகளை மேற்கொண்டனர். நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பு, தளவாடங்கள், மருந்துகள் போன்றவை தயார் நிலையில் வைப்பது மற்றும் தடுப்பூசி பிரசாரத்தில் கவனம் செலுத்துவது ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

    நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், சர்வதேச அளவிலும் கொரோனா நிலைமையைப் பற்றிய விரிவான விளக்கத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நலச் செயலர் ராஜேஷ் பூஷண் வழங்கினார்.

    நாட்டில் பதிவான கொரோனா தொற்றுகளில் பெரும்பான்மையாக தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் பதிவாகி உள்ள புள்ளிவிவரத் தகவல்களை அவர் எடுத்துரைத்தார்.

    மேலும், பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நோய்த்தொற்று அதிகரிப்பு காணப்படுவது குறித்தும் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

    பின்னர் பிரதமரின் முதன்மை ஆலோசகர் பி.கே.மிஸ்ரா கூறுகையில், உள்ளூர் அளவில் கொரோனா தொற்று பரவலை நிர்வகிப்பதற்கு வட்ட அளவில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பு இருப்பது அவசியம். மாநிலங்களுடன் கலந்தாலோசித்து அதை உறுதிப்படுத்தலாம் என்று தெரிவித்தார்.

    மேலும், இன்புளூயன்சா வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்ட பரிசோதனை மாதிரிகளை முழு மரபணு வரிசை முறைக்கான ஆய்வுகளுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்தவும் கேட்டுக்கொண்டார்.

    மத்திய சுகாதார அமைச்சகத்தின் எந்த முன் அனுமதியும் இல்லாமல் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தேவையான கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு, மாநில அரசுகளின் மீது பழி போடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். #TNMinister #KadamburRaju #CentralGovt
    கோவில்பட்டி:

    தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

    எல்லா இடத்திலும் லஞ்சம், ஊழல் நடக்கிறது என்று பொதுவாக டி.டி.வி.தினகரன் பேசக்கூடாது. அவர் ஆதாரத்துடன் பேச வேண்டும். லஞ்சம், ஊழல் பற்றிய ஆதாரம் இருந்தால், அதுகுறித்து சட்டமன்றத்தில் பேசலாம். ஆதாரம் இல்லாமல் புகார் கூறக்கூடாது.

    நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகளவு வெற்றி பெறும் வகையில், தமிழக அரசு சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய பாடத்திட்டம் தற்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் வெற்றியால் அடுத்த ஆண்டு அனைவரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்கள்.

    தமிழகத்தில் எந்த நெருக்கடி நிலையும் இல்லை. அதனால்தான் சிலர் அரசுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகின்றனர். ஜனநாயக ரீதியாக கருத்துகளை தெரிவிக்கவும், போராட்டங்களை நடத்தவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. இங்கு சட்டம்-ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மின்வெட்டு இல்லை.

    காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்து உள்ளது. மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் மின் உற்பத்தியில் சிறிது தடங்கல் ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது. மத்திய அரசு சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தியபோது, மாநில அரசுகளை முறையாக கலந்து ஆலோசிக்கவில்லை. எந்த பொருளையும் சரக்கு, சேவை வரிக்குள் கொண்டு வருவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு, மாநில அரசுகளின் மீது பழி போடுகிறது. தங்க தமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் சேருவதற்கு தூது விட்டு கொண்டிருக்கிறார். இங்கிருந்து அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே அவர் அ.தி.மு.க.வில் சேருவதற்கு காரணம் தேடுகிறார். அதனால்தான் அவர் தேர்தல் குறித்து சவால் விடுத்து, அதில் தோற்கும்போது, தானாகவே அ.தி.மு.க.வில் சேருவதற்கு வழி தேடுகிறார்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #TNMinister #KadamburRaju #CentralGovt
    ×