search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Steps should"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய், கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் எடுத்துரைத்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் விவசாயி கள் வேளாண்மை சார்ந்த கோரிக்கைகள், பயிர்க்கடன் தள்ளுபடி, கண்மாய்கள் தூர்வாருதல், வயல்வெளி களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதை சரி செய்தல், ஊரணி தூர்வாரு தல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் எடுத்துரைத்த னர்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மூலமாக பல்வேறு திட்டங் களை அறிவித்து அதன் மூலம் விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகின்றது. மேலும் விவசாயிகளின் குறைகளையும், கோரிக்கை களையும் கேட்டறியும் வகை யில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு விவசாயி களின் கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டு வருகின்றன.

    மேலும் வறட்சி நிவாரண மாக நமது மாவட்டத்திற்கு வரப்பெற்ற ரூ.132 கோடி விவசாயிகளுக்கு வழங்கப் பட்டு வருகிறது. ஓரிரு தினங்களில் மீதமுள்ள பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.

    வடகிழக்கு பருவ மழையையொட்டி கண்மாய்களை தூர்வாருதல், கால்வாய்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் வழியாக செல்லக்கூடிய தாழ்வான மின் கம்பங்களை சரி செய்யவும், சேதமான மின் கம்பங்களை சரி செய்திட வும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசி னார்.முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற தென்னை மற்றும் கரும்பு விவசாயிக ளுக்கான ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்யப்பட்டு 3 விவசாயிகளுக்கு கரும்பு பயிர் கடனாக ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 457-ஐ மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் ராமநாத புரம் வருவாய் கோட்டாட்சி யர் கோபு, வேளாண்மை துறை இணை இயக்குநர் (பொ) தனுஷ்கோடி, கூட்டு றவு சங்க மண்டல இணை பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கல்யாணசுந்தரம் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தாளவாடி தாலுகா கேர்மாளம் பஞ்சாயத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
    • மலைப் பகுதியில் டவர் இல்லாததால், போன் பயன்படுத்த முடியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா கேர்மாளம் பஞ்சாயத்து, திங்களூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்து மனு வழங்கினர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கேர்மாளம் பஞ்சாயத்தில் கேர்மாளம், சி.கே.பாளையம், ஜோகனூர், ஜெ.ஆர்.எஸ்.புரம், கானகரை, குடியூர், சி.பி.தொட்டி, ஒருத்தி, தலுதி போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம்.

    இப்பகுதியில் தொலைதொடர்பு வசதி இல்லை. இங்கு, 10-ம் வகுப்பு வரை உள்ள 5 பள்ளிகள் செயல் படுகின்றன. கொரோனா காலத்தில் இங்குள்ள பள்ளி குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் கூட பங்கேற்க முடியவில்லை.

    அங்கிருந்து 12 கி.மீ., தூரம் சென்றால் கர்நாடகா மாநிலத்தின் டவர் இணைப்பு கிடைக்கும். அல்லது 9 கி.மீ. மலைப்பகுதியை கடந்தால் சத்தியமங்கலம் டவர் கிடைக்கும். 

    ஆனால், மலைப் பகுதியில் டவர் இல்லாததால், போன் பயன்படுத்த முடியவில்லை. குன்றி, திங்களூர் பகுதியில் தனியார் டவர் தற்போது அமைத்துள்ளனர்.

    திங்களூரில் 'ஏ' கிராமப் பகுதியில் தனியார் டவர் இருந்தும், கேர்மாளம் பகுதியில் பயன்படாது. எனவே இப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் செல்போன் டவர் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி ஓசூர் கிராமத்தில் செயல்படாத கல்குவாரி உள்ளது. இதன் அருகே ஓசூர் கிராமம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
    • புதர் மண்டி கிடப்பதால் மீண்டும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் புகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் இந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு, ஜூலை. 5-

    சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி ஓசூர் கிராமத்தில் செயல்படாத கல்குவாரி உள்ளது. இதன் அருகே ஓசூர் கிராமம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

    வருவாய் துறைக்கு சொந்தமான இந்த கல்குவாரியின் உரிமம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் காலாவதியானது. இதனால் குவாரியை சுற்றியுள்ள பட்டா நிலங்களில் கற்கள் மலை போல் குவிந்துள்ளது.

    பல வருடங்களாக குவிந்துள்ள கற்குவியல்களில் செடி, கொடி வளர்ந்து புதர் நிறைந்து காடு போன்று காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் ஒரு சிறுத்தை இந்த கல்குவாரியில் தஞ்சம் புகுந்து கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் புகுந்த ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வந்தன.

    தொடர்ந்து போக்கு காட்டி வந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் கூண்டு வைத்து கடந்த மாதம் 30-ந் தேதி சிறுத்தையை பிடித்தனர்.

    பின்னர் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. இதை அடுத்தே அப்பகுதி மக்கள், விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இருந்தாலும் மீண்டும் கல்குவாரியில் வேறு ஏதாவது வன விலங்குகள் பதுங்கி மீண்டும் அச்சுறுத்தக் கூடாது என பயந்து வருகின்றனர்.

    இது குறித்த அப்பகுதி மக்கள் கூறியதாவது:

    இந்த செயல்படாத கல்குவாரி 1.25 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே உள்ளது. ஆனால் இதனை சுற்றியுள்ள பட்டா நிலங்களில் கற்கள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் தரிசு இடத்தில் விவசாயம் செய்ய முடிவதில்லை.

    புதர் மண்டி கிடப்பதால் மீண்டும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் புகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் இந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது தவிர இந்த பகுதியில் உள்ள புதர்களை அகற்றி சுத்தமாக வைத்திருந்தால் வனவிலங்குகள் ஊருக்குள் வராது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×