என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "student struggle"
திருவண்ணாமலை:
ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேராட்டத்துக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்தனர். கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்றகோரியும், அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு ஆதரவாக கல்லூரி பேராசிரியர்களும் பணியை புறக்கணித்து புறப்பட்டு சென்றனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல், ஒரு ஆசிரியர் பல வகுப்புகளை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பல தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில கிராமங்களில் உள்ள பள்ளிகளில் அந்த ஊரில் உள்ள பட்டதாரி இளைஞர்கள், பெண்கள் வகுப்புகளை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 66 அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10 ஆயிரத்து 900 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இவர்களில் 4 ஆயிரத்து 456 ஆசிரியர்கள் நேற்று முன்தினம் வரை பணிக்கு வராததால் அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சை தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் இதில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண கோரியும் இன்று காலை சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோஷ மிட்டப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களது பள்ளியில் 17 ஆசிரியர்களில் 7 ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வருகிறார்கள். இதனால் பாடங்கள் நடத்துவதில் சிரமம் உள்ளது. ஆசிரியர்களின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பிப்ரவரி 1-ந் தேதி செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 1-ந் தேதி பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை மாவட்ட இந்திய மாணவர் சங்க செயலாளர் பிடல் காட்ரோ, பிரவீண் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். #JactoGeo
மாணவ-மாணவிகள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பஸ்சில் பள்ளிக்கு சென்று வர இலவச பயண அட்டைகளை அரசு வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் புதிய பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான புதிய இலவச பயண அட்டை வழங்கும் வரை பழைய அட்டைகளை காண்பித்து பஸ்களில் பயணம் செய்யலாம் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மாணவர்கள் இன்று காலை பஸ்சில் வந்தனர். அவர்களிடம் புதிய இலவச பயண அட்டை இல்லை என்று கூறிய கண்டக்டர், மாணவர்களை கீழே இறக்கி விட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் உள்ள பஸ்களை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கிருந்து பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கண்டக்டர்கள் மீது மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து பஸ் கண்டக்டர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அரசு உத்தரவுப்படி மாணவர்களை பஸ்சில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்