search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sub Inspector Dead"

    • தலைமை தபால் அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தபோது பின்னால் வந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான தென்காசி மாவட்டம் குறிஞ்சிகுளம் வடக்கு தெருவை சேர்ந்த மாரிமுத்தை என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சுபா நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 53). இவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இன்று காலையில் கிழக்கு காவல் நிலையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் தலைமை தபால் அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தபோது பின்னால் வந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், கிங்ஸ்லி தேவானந்த், மங்கையர்கரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான தென்காசி மாவட்டம் குறிஞ்சிகுளம் வடக்கு தெருவை சேர்ந்த மாரிமுத்தை (33) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாதையனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாதையன் இன்று அதிகாலை 2 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மாதையன் (வயது 59). இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர்.

    இறந்து போன மாதையனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு மட்டுமே திருமணம் ஆகி உள்ளது. மற்றவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×