search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudalai Madaswamy Temple"

    • சிறுநாடார்குடியிருப்பு ஆலமரத்து சுடலைமாட சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடைபெற்றது.
    • குழந்தைவரம் வேண்டி மற்றும் குழந்தைவரம் பெற்ற ஏராளமான தம்பதியினர் பொம்மைகளை வாங்கி சுவாமிக்கு சமர்ப்பித்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள சிறுநாடார்குடியிருப்பு ஆலமரத்து சுடலைமாட சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடைபெற்றது.

    பல்வேறு நிகழ்ச்சிகள்

    கும்பாபிஷேக விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமமம், ஆஸ்திர ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், தனபூஜை, கஜபூஜை, கன்யா பூஜை, கோபூஜை, கும்ப ஆலங்காரம், நான்கு கால யாகசாலை பூஜைகள், விசேஷ சாந்தி ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல், சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு யந்தர ஸ்தாபனம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கடந்த 28-ந்தேதி காலை 6 மணிக்கு நாடி சந்தானம், நாமகரணம், ஹோமம், யாத்ரா தானதத்தை தொடர்ந்து காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடம் புறப்பட்டு ஆலமரத்து ஸ்ரீசுடலைமாட சுவாமி மற்றும் பரிவார தெய்வங்க ளின் விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    குழந்தைவரம்

    குழந்தைவரம் வேண்டி மற்றும் குழந்தைவரம் பெற்ற ஏராளமான தம்பதியினர் பொம்மைகளை வாங்கி சுவாமிக்கு சமர்ப்பித்தனர். பிற்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மகேஸ்வர பூஜை, தொடர்ந்து ஆலயத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபி ஷேக நிகழ்ச்சிகளை ஹரிஷ் பட்டர் நடத்தினார்.

    நிகழ்ச்சிகளில் உடன்குடி பேரூராட்சிமன்றத் துணைத் தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி ஊராட்சி ஓன்றிக்குழு உறுப்பினர் ஜெய கமலா, உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் சாரதா, தொழிலதிபர்கள் சகாதேவன், மால்முரளி, சிறுநாடார்குடியிருப்பு ஊராட்சிமன்றத் தலைவி கமலம், தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பொதுமக்கள், விழாக்கு ழுவினர் செய்திருந்தனர்.

    • குரங்கணி சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை குரங்கணி 60 பங்கு நாடார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    தென்திருப்பேரை:

    குரங்கணி 60 பங்கு நாடார்களுக்கு பாத்தியப்பட்ட குரங்கணி தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் காலை 6 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், காலை 7 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், 8 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

    மதியம் 12 மணிக்கு பெண்கள் பொங்கலிடும் நிகழ்ச்சியும், அதை தொ டர்ந்து மதியக்கொடையும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் நடைபெ ற்றது. இரவு 7மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சாமக் கொடை நடைபெற்றது.கொடை விழாவிற்கான ஏற்பாடு களை குரங்கணி 60 பங்கு நாடார்கள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

    விழாவில் சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன், முத்து மாலை, ஜெக தீசன், ராஜேந்திரன், சந்திர சேகரன், கல்யாண சுந்தரம், ஜெயசங்கர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தை சேர்ந்த மகாசப்தசாகரன் மற்றும் செல்வராஜ், குரங்கணி ஊராட்சி மன்ற தலைவர் ஜெய முருகன், ராஜாராம், குணசேகரன், ரவி, முத்துக்குமார், பெரியசாமி, ராகவன், கேசவ மூர்த்தி, முத்து லிங்கம், ஈஸ்வரன், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×