search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suryanar Temple"

    • திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது சூரியனார் கோவில்.
    • கருவறையில் சூரியனார் மேற்கு முகமாக நின்று காட்சி தருகிறார்.

    இந்தியாவில் மட்டுமின்றி, ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலும் சேதம் அடைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் காணப்படுவதாக அறிய முடிகிறது. சூரியனை முழுமுதற் தெய்வமாகக் கொண்டதுதான் சவுமார மதம் ஆகும். இந்தியாவில் ஒடிசாவில் பூரி நகருக்கு அருகில் கோனார்க் சூரியனார் கோவில் உள்ளது.

    தமிழ்நாட்டிலும் மகாபலிபுரத்தில் சூரியனுக்கு சிலை உள்ளது. மார்க்கண்டேய புராணத்தில் `ஓம்' என்ற ஒலி உலகத்தில் முதலில் தோன்ற, அவ்வொலியின் விளைவாக `ஒளி' தோன்றியதாகக் கூறப்படுகிறது. பன்னிரண்டு ராசிகளில் சிம்ம ராசிக்கு அதிபதி, சூரியன்.

    பன்னிரண்டு ராசிகளில் சூரியன் வலம் வருவதைக் கொண்டு, 12 சூரியர்கள் இருப்பதாகவும் சொல்வதுண்டு. சூரியனை வணங்க அகத்தியரால், `ஆதித்ய ஹிருதயம்' என்ற மந்திரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மந்திரத்தை, ராம- லட்சுமணர்களுக்கு விஸ்வாமித்திரர் உபதேசித்ததாக ராமாயணம் மூலம் அறிகிறோம்.

    தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது, சூரியனார் கோவில். மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயத்தின், கருவறையில் சூரியனார் மேற்கு முகமாக நின்று காட்சி தருகிறார். இவருக்கு இடதுபுறம் உஷாதேவியும், வலதுபுறம் பிரத்யுஷா தேவி என்னும் சாயாதேவியும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். சூரிய பகவான் தன்னுடைய இரு கரங்களிலும் செந்தாமரை மலரை ஏந்தி புன்சிரிப்புடன் அருள்கிறார்.

    இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர், காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சியை தரிசித்த பின் சூரியனாரை வணங்குதல் முறையாகும். இந்த கோவிலில் சூரியனைத் தவிர, மற்ற கோள்களான சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோருக்கும் தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன.

    • நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலம்.
    • தயிர் சாதம் புசித்து தங்களின் சாபம் நீங்கி விமோசனம் பெற்றனர்.

    நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலமாகவும் திருமங்கலக்குடி விளங்குகிறது. நவக்கிரக நாயகர்கள் இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கி தங்களது சாபம் நீங்கப் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. காலவ முனிவர் என்பவர் தன் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த போது தனக்கு தொழுநோய் வர இருப்பதை உணர்ந்தார். நவக்கிரகங்களை வழிபட்டால் அந்த நோயிலிருந்து விடுபடலாம் என்றுணர்ந்து நவகிரகங்களை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார்.

    முனிவரின் தவத்திற்கு இரங்கி நவகிரகங்கள் அவருக்கு காட்சி தந்து முனிவரை தொழு நோய்தாக்காதிருக்க வரமும் அளித்தனர்.

    நவகிரகங்களின் இந்த செயலை அறிந்த பிரம்மா கோபம் கொண்டார். நவகிரகங்களுக்கு வரம் கொடுக்கும் உரிமை கிடையாது என்றும், முற்பிறவியில் அனைத்து உயிர்களும் செய்த பாவ புண்ணியத்தின் பலனை மட்டுமே அவர்கள் தர வேண்டும் என பணித்திருந்தும் காலவ முனிவருக்கு தொழுநோய் தாக்காத வரம் அளித்ததால் நவகிரகங்களுக்கு தொழுநோய் ஏற்பட்டு வருந்தும்படி பிரம்மா சாபமிட்டார்.

    பின்னர் நவகிரகங்கள் பிரம்மா கூறியபடி திருமங்கலக்குடி அருகே உள்ள வெள்ளெருக்கு காட்டில் (இவ்விடம் தற்போது சூரியனார்கோவில் என்று அழைக்கப்படுகிறது) கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு முதல் 12 ஞாயிற்றுக்கிழமைகள் அங்குள்ள ஒன்பது தீர்த்தத்தில் நீராடி, பின்னர் திங்களன்று காவிரியில் நீராடி பிராண நாதேஸ்வரரையும், மங்களநாயகியையும் வழிபட்டு, பிறகு வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் புசித்து தங்களின் சாபம் நீங்கி விமோசனம் பெற்றனர்.

    நவக்கிரகங்கள் தங்கள் பாவங்களை இப்புண்ணிய தலத்து இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டமையால், நவக்கிரக கோவில்களுக்கு தரிசனம் செய்யச் செல்லுவோர், இத்தலத்து ஸ்ரீபிராணநாதேஸ்வரரையும் இறைவி மங்களாம்பிகையையும் முதலில் தரிசித்த பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டுமென்பது நியதி!

    • வடநாட்டில் மூலஸ்தானத்தில் உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பட்டது.
    • தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    ஒருநாள் கிருஷ்ணரை சந்திக்க நாரதர் வருகிறார். அவையில் உள்ள அனைவரும் எழுந்து நின்று நாரதருக்கு மரியாதை செலுத்தினர்.

    ஆனால் சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் கோபமடைந்த நாரதர் அதனை வெளிக்காட்டாது சென்றுவிட்டு, பின்னொருநாள் வந்து தனது கலகத்திறமையால் சாம்பனுக்கு கிருஷ்ணனாலேயே சாபம் இட வைத்தார்.

    பின்னர் தன் தவறை உணர்ந்த சாம்பன், நாரதரிடம் மன்னிப்பு கேட்டு வேண்ட, நாரதர், அவனுக்கு சூரிய புராணத்தை உரைத்தார். அதனை கேட்டு அவன் நோய் நீங்கியதாக புராணம் கூறுகிறது. வடநாட்டில் `மூலஸ்தானத்தில்' உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பட்டது என்பர்.

    தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.

    திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் `திருக்கண்டியூர்' மற்றும் விழுப்புரம்-முண்டியம்பாக்கம் அருகில் உள்ள`பனையபுரம்' ஆகியன சூரியனை வழிபட ஏற்ற தலங்களாகும்.

    உதயாசலம் (கொனாரக்), முல்தானம், மோகேரா, லக்குண்டி (ஹப்ளி அருகில்) அலம்பூர், ஆரவல்லி (இரண்டும் ஆந்திரா), சிரோரா, ஜயபுரி, உதயபுரி, மார்த்தாண்டபுரம், கேரளாவில் வைக்கம் அருகில் உள்ள `ஆதித்யபுரம், கும்பகோணம்-கஞ்சனூருக்குக்கருகில் உள்ள திருயோகியில் சூரிய கோடீஸ்வரர், மற்றும் `சூரியமூலை' ஆகிய இடங்களும், குடந்தை நாகேஸ்வரன் ஆலயத்தில் உள்ள சூரிய சன்னதி ஆகியவையும் வழிபட ஏற்றதாகும்.

    • சூரியனார் கோயில் ஆதீனம் வாமதேவ சந்தானம் 28 -வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தொடக்கி வைத்தார்.
    • கரந்தை பூக்களம் அமுத மொழியால் சீதா நந்தீஸ்வரர் கோயில் ரிஷப வாகனம் வீதி உலாவில் இடம் பெற்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் திருக்கயிலாய காட்சி திருவிழா மற்றும் ஆடி தீர்த்தவாரி விழாவினை திருக்கைலாய ஸ்ரீகந்தப் பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் வாமதேவ சந்தானம் 28 -வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தொடக்கி வைத்தார்.

    ரிஷப வாகன புறப்பாட்டில் தஞ்சாவூர் கரந்தை, பழைய திருவையாறு ரோடு வேதவல்லி அம்மை உடன்மர் நாக நாகேஸ்வரர் கோவில், அன்னகாமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோவில், கரந்தை செல்லியம்மன் கோயில், வடக்கு வாசல் வடபத்ரகாளி, கரந்தை பூக்களம் அமுத மொழியால் சீதா நந்தீஸ்வரர் கோயில் ரிஷப வாகனம் வீதி உலாவில் இடம் பெற்றன.

    இந்நிகழ்ச்சியில் சிதநந்தீஸ்வரர் சுவாமிகள் திருக்கோயில் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள், துணைத் தலைவர் டாக்டர் பழனி குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் கண்ணன் ,அன்ன காமாட்சி அம்மன் நிர்வாக டிரஸ்ட் நாக நாரேஸ்வரர் வழிபாட்டு குழுவினர் தர்மரக்ஷண சமாதி உள்ளிகள், சமூக நல அமைப்பு, தஞ்சை பெருவுடையார் சிவகங்கை கூட்டம் ஆகிய அமைப்பினர் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ண்டனர்.

    ×