search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suspicion behavior"

    கமுதி அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

    கமுதி:

    கமுதி அருகேயுள்ள அபிராமம் நகரத்தார் குறிச்சியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராக்கி (38). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகனும் உள்ளனர்.

    கடந்த சில மாதமாக செல்லப்பாண்டி சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் அவரால் வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ராக்கியின் நடத்தையில் செல்லப்பாண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ராக்கியை அவதூறாக பேசினார்.

    இந்த நிலையில் ராக்கி இன்று வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆவேசமாக வந்த செல்லப்பாண்டி சரமாரியாக ராக்கியை அரிவாளால் வெட்டினார்.

    இதைப்பார்த்த அவர்களது குழந்தைகள் அலறித்துடித்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த ராக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை குறித்து அபிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் அபிராமம் இன்ஸ் பெக்டர் ஜெயராணி, சப்-இன்ஸ் பெக்டர்கள் முருகன், சித்ராதேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று ராக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த செல்லப்பாண்டியை கைது செய்தனர்.

    நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக் கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள கோம்பை அமுல்நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). கூலி வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பழனியம்மாள் (40).

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பழனியம்மாளும், அவரது தாய் முத்தம்மாள் (60) என்பவரும் தோட்ட வேலைக்கு சென்று வந்தனர். நேற்று இரவு பழனியம்மாள் மற்றும் முத்தம்மாளை மணிகண்டன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.

    இது குறித்து கோம்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கொலை செய்யப்பட்ட பழனியம்மாள் மற்றும் முத்தம்மாளின் உடல்களை கைப்பற்றி உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான் எனது மனைவியை உறவுக்கு அழைக்கும் போதெல்லாம் மறுத்து வந்தார். இதனால் அவருடன் நான் அடிக்கடி தகராறு செய்தேன். அப்போது என் மனைவியும், மாமியாரும் சேர்ந்து என்னை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவார்கள்.

    என் மனைவி வேலை செய்யும் தோட்டத்தில் அவரை பார்க்க சென்ற போது அவர் அங்குள்ள வேறு ஒருவரிடம் சிரித்து பேசி பழகிக் கொண்டு இருந்தார். இதனால் வீட்டுக்கு வந்த என் மனைவியிடம் என்னுடன் இருக்க உனக்கு பிடிக்கவில்லையா? தோட்டத்தில் வேலை பார்க்கும் வேறு ஒருவருடன் சிரித்து பேசுகிறாய்? அவனுடன் உனக்கு தொடர்பு உள்ளதா? என சத்தம் போட்டேன். நேற்று இரவும் இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு வந்தது. பின்னர் என் மனைவி தூங்கச் சென்று விட்டார். ஆனால் ஆத்திரம் அடங்காமல் இருந்த நான் என் மனைவியை வெட்டிக் கொன்றேன். சத்தம் கேட்டு அருகில் தூங்கிக் கொண்டு இருந்த என் மாமியார் எழுந்து அதை தடுத்தார். அவரையும் வெட்டி கொன்றேன். 

    இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆப்பக்கூடல் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை மண் வெட்டியால் வெட்டி படுகொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள பெரிய கள்ளியூர் காமநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது 47). விவசாயி டிப்பர் லாரி வைத்தும் ஓட்டி வருகிறார்.

    இவரது மனைவி விஜயசாந்தி (24). கடந்த 1 ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. ஒரு கைக்குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் தர்மன் சந்தேகப்பட்டார். மனைவி விஜயசாந்தி அடிக்கடி தனது செல்போனில் பேசிக் கொண்டே இருப்பாராம். இதனால் சந்தேகத்தை உறுதிபடுத்திய கணவர் மனைவியை கண்டித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர்களிடையே தகராறு இருந்து வந்தது. அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று இரவு வெளியே சென்று விட்டு இன்று அதிகாலை தர்மன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி விஜயசாந்தி செல்போனில் பேசி கொண்டிருந்தாராம்.

    இதனால் கடும் கோபம் அடைந்த தர்மன் மனைவியை திட்டினார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.

    ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தர்மன் வீட்டில் உள்ள தோட்டத்தில் களை எடுக்கும் சிறிய மண்வெட்டியால் தலை மற்றும் கழுத்தில் ஓங்கி வெட்டினார்.

    இதில் ரத்தம் பீறிட்ட நிலையில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே விஜயசாந்தி பரிதாபமாக இறந்தார். இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் கொலையாளி தர்மனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    விஜயசாந்தி எதற்காக கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    கம்பம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அரிவாள் மனையால் வெட்டிய கணவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    கம்பம்:

    கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 42). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பகவதி (33). கணேசனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பகவதி தனது கணவர் மீது சுடு நீரை ஊற்றினார். இதனால் அரிவாள் மனையால் தனது மனைவியின் தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் கணசேன் வெட்டினார்.

    இவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பகவதியை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கணேசனும் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக் கொல்ல முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

    பழனி:

    பழனி தேரடி தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூணன் (வயது 48). தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கண்ணகி என்பவருக்கும் கடந்த 22 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    கண்ணகி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பாகவே அர்ஜூணன் செல்வி (வயது 36) என்பவரை திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்த்து வந்தார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அர்ஜூணன் தினசரி குடித்து விட்டு வந்து செல்வியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் செல்வி தனது மகனுடன் வேறு வீட்டில் வசித்து வந்தார். நேற்று தனியாக நடந்து சென்ற செல்வியை யாருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளாய்? என கேட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.

    படுகாயமடைந்த அவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து பழனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேனி அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு சகோதரியை தம்பி கத்தியால் குத்திக்கொன்றார்.

    தேனி:

    தேனி அருகே கோட்டூர் காளியம்மன கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு ஜெயந்தி மாலா (வயது 25) என்ற மகளும், செல்வக்குமார் (23) என்ற மகனும் உள்ளனர். ஜெயந்தி மாலாவுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தை கருப்பையா வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    இவரது தம்பி செல்வக்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

    கணவரை பிரிந்து வாழ்ந்த ஜெயந்தி மாலா நடத்தையில் செல்வக்குமார் மற்றும் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்றும் இது குறித்து வாக்குவாதம் நடத்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் மற்றும் அவரது பெற்றோர் அருகில் இருந்த கத்தியை எடுத்து ஜெயந்தி மாலாவை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயந்தி மாலா பலியானார். இது குறித்து கோட்டூர் வி.ஏ.ஓ. தங்கமுத்து அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பையா மற்றும் பேச்சியம்மாளை கைது செய்தனர். தப்பி ஓடிய செல்வக்குமாரை தேடி வருகின்றனர்.

    ×