என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 198680
நீங்கள் தேடியது "முயற்சி"
சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தின்னப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன். இவர் இன்று காலை தனது மனைவி முத்துமாரி, மகன் சிலம்பரசன் ஆகியோருடன் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தார்.
அப்போது மறைத்து வைத்திருந்த மண் எண்ணையை ஊற்றி 3 பேரும் தீக்குளிக்க முயற்சி செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீரை பீச்சி அடித்து அவர்களை மீட்டனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்த சக்திவேல் என்பவர் நிலத்தை கேட்டபோது பா.ம.க. பிரமுகர் சேகர் என்பவரிடம் 1.50 லட்ச ரூபாய்க்கு நிலத்தை விலைக்கு வாங்கி விட்டதாக கூறி இருவரும் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணை தாக்க முயற்சி செய்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள எல்லிங்க நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் சுமித்ரா (வயது32), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் குறிப்பிட்ட தெரு வழியாக வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
சம்பவத்தன்று அந்த தெரு வழியாக சென்றபோது சுமித்ராவை வழிமறித்த அந்த பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், ஜெயகுமார், பசுபதி, முத்துலட்சுமி, ராமலட்சுமி மற்றும் 10 பேர் இந்த வழியாக வரக்கூடாது என தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சுமித்ராவை அவர்கள் தாக்க முயன்றனர்.
இது தொடர்பாக சுமித்ரா ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×

X