search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீப்பிடித்த கார்"

    அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை போராடி அணைத்தனர்.
    பாலையம்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பீர்முகமது(வயது 34). வாடகை கார் டிரைவர். இவர் நேற்று வாடகை காரில் பாலக்காடு சென்றுவிட்டு பயணியை இறக்கிவிட்டு மீண்டும் காயல்பட்டிணம் திரும்பிக் கொண்டிருந்தார்.

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வந்து கொண்டிருக்கும்போது தூக்கம் வந்ததால் மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலை கஞ்சநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே காரை ஓரமாக நிறுத்திவிட்டு பீர்முகமது காரில் தூங்கியுள்ளார். அப்போது திடீரென காரில் இருந்து புகை கிளம்பி தீ பிடித்தது.

    இதில் சுதாரித்துக்கொண்ட பீர்முகமது உடனடியாக காரில் இருந்து வெளியேறி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் கார் முழுவதும் தீ பரவியது.

    அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை போராடி அணைத்தனர்.

    ஆனால் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது. இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாருதி வேனில் ஏற்பட்ட தீ குறித்து தகவல் அறிந்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு மற்றும் அஸ்தம்பட்டி காவல் துறையினர் விரைந்து வந்து துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த கோடை விழாவிற்காக தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர்.

    இந்த நிலையில் மகுடஞ்சாவடியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் நண்பர் நியாசுடன் ஏற்காடு கோடை விழாவிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருவாகவுண்டனூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு ஏற்காடு நோக்கிச் சென்றனர்.

    சேலம் மாவட்ட கலெக்டர் பங்களா அருகே மாருதி வேன் வரும்போது திடீரென கரும்புகை எழுந்தது. இதை அறிந்த டிரைவரான சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் மாருதி வேனை ஓரமாக நிறுத்தி விட்டு வெளியே வந்துவிட்டனர். இதனை அடுத்து மாருதி வேன் மளமளவென தீ பிடித்து தீப்பற்றி எரிந்தது.

    இதனால் சாலையில் சென்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு மற்றும் அஸ்தம்பட்டி காவல் துறையினர் விரைந்து வந்து துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

    எனினும் மாருதி வேன் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாருதி வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×