search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகையாறு"

    • மானாமதுரையில் வைகையாறு சுத்தப்படுத்தும் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
    • நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் வைகையாற்றை சுத்தப்படுத்தும் பணி நீர்நிலை பாதுகாப்புக்குழு சார்பில் நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள், இந்தோ திபெத் எல்லைப் படை வீரர்கள், நீர்நிலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே வைகையாற்றுக்குள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அங்கு வளர்ந்திருந்த அமலைச்செடிகளை அகற்றினர். மேலும் குப்பைகளையும் அப்புறப் படுத்தினர். அமைச்சர் பெரியகருப்பன் நேரில் வந்து இந்த பணிகளை பார்வையிட்டார். பின்னர் ஆற்றங்கரையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகை யில், சிவகங்கை மாவட்டத் தில் வைகையாறு சுத்தப் படுத்தும் பணி ஏற்கனவே திருப்புவனத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதே போன்று மாவட்டம் முழு வதுமுள்ள நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் இந்த பணியில் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தை அணுகி தங்கள் பங்க ளிப்பை வழங்க வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ரங்க நாயகி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா அண்ணா துரை, நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை வைகையாற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    மதுரை

    மதுரை ஆழ்வார்புரம், வைகை வடகரையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). கூலித் தொழிலாளி.  சில நாட்களாக இவரை காணவில்லை. இந்த நிலையில் வைகை ஆற்றுக்குள் நாகராஜனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக மனைவி சங்கீதா விளக்குத்தூண் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை வில்லாபுரம், மீனாட்சி நகர், துளசிராம் தெருவைச் சேர்ந்தவர் குமரன் (வயது 42), கூலித் தொழிலாளி. நேற்று மாலை இவர் முனியாண்டி புரம் தனியார் கல்லூரி முதல் மாடியில் கண்காணிப்பு காமிரா பொருத்தும் வேலையில் ஈடுபட்டார். 

    அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே குமரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மீனாம்பாள்புரம், இயேசுநாதர் தெருவைச் சேர்ந்த பாலாஜி மனைவி பாண்டிச்செல்வி (40). இவருக்கு குடும்ப பிரச்சினை காரணமாக வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர் தத்தனேரி சுடுகாட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். 

    அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டிச்செல்வி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    ×