என் மலர்
நீங்கள் தேடியது "செந்தில் பாலாஜி"
- 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணி நவம்பர் 11-ந் தேதி தொடங்குகிறது.
- 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
கரூரில் வருகிற 11-ந் தேதி 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:
பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி வழங்கியிருந்தது. சட்டபேரவையில வெளியிடப்பட்ட அறிவிப்புகளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின்சாரத்திற்கு பதிவு செய்திருந்து காத்திருந்தனர்.
அதில் முதல் ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணிகள் அரவகுறிச்சியில் உள்ள தடாகம் பகுதியில் நவம்பர் 11-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் கரூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணைகள் வழங்கப்படும். பதிவு செய்யப்பட்டு காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் படிப்படியாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஒரு நுகர்வோர் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட 100 யூனிட் மானிய மின்சாரம் தொடரும்.
- 100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எல்லா இடங்களிலும் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என்று கூறினார்.
100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரித்தார்.
மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட 100 யூனிட் மானிய மின்சாரம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானிய மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மின்சாரத்துறைய அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
- மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக தவறான தகவலை பரப்ப வேண்டாம்
கோவை:
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு சிக்கல் ஏற்படும் என தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. ஆதார் இணைப்பு தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மின் வாரியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆதார் எண் இணைப்பு என்பது முக்கியம். மின் கட்டண விவகாரத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மின்சாரத்துறைய அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளலாம். அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் அரசு மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஆதார் எண் இல்லை என்றாலும் தற்போது கட்டணம் செலுத்தலாம். தவறான தகவலை பரப்ப வேண்டாம்.
ஆதார் எண் கொடுப்பது நல்லது. மின் இணைப்பு பெற்றவர்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். யார் பேரில் மின் இணைப்பு இருக்கிறதோ அந்த நபர் இறந்திருக்கும் பட்சத்தில் அதற்கான அவகாசங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன. தங்கள் மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் விரைவில் நடைபெற இருக்கின்றன. ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. கண்டிப்பாக 100 சதவீதம் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். மின்சார துறையை சீர்திருத்தம் செய்யும் போது ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின்சார வாரியத்தை புதிய பரிணாமத்தோடு மேம்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது.
- தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் உள்ளது.
சென்னை:
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இன்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் முகாமை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்கும் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். மொத்தம் உள்ள 2.33 கோடி நுகர்வோர்களில் இதுவரை 15 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.
ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்தாகிவிடும் என பலர் உண்மைக்கு மாறான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். மின்துறையை மேம்படுத்தவே மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது. நடைமுறையில் இருக்கும் அனைத்து இலவச மின்சார திட்டம், மானியம் தொடரும். வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படாது. ஒருவர் 5 இணைப்பு வைத்திருந்தாலும் சரி, 100 இணைப்பு வைத்திருந்தாலும் சரி, தற்போதுள்ள நடைமுறையே தொடரும். பல மின் இணைப்புகளை ஒரே ஆதாரில் இணைத்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.11 ஆயிரம் கோடி வட்டி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு.
- சென்னையில் 1,100 பணியாளர்களும், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 11,000 பணியாளர்களும் களத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
சென்னை.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று கடுமையான மழையும், காற்றும் இருந்தது. நள்ளிரவு வரை எங்கும் மின்தடை இல்லை.
நள்ளிரவுக்குப் பிறகு காற்று அதிகமானதால் எந்தவித உயிர்ச்சேதமோ, பாதிப்போ ஏற்படா வண்ணம் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 355 துணைமின் நிலையங்களில், 10 துணை மின் நிலையங்களில் மட்டுமே மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 33கி.வோ., 11 33கி.வோ.,.22 கி.வோ., 110 கி.வோ.,230 கி.வோ., மற்றும் 400 கி.வோ., உட்பட மொத்தம் 622 பீடர்களில் கன மழை மற்றும் வேகமான காற்று வீசியதின் காரணமாக மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சென்னையில் சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, நேற்று இரவு முழுவதும் சென்னையில் 1,100 பணியாளர்களும், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 11,000 பணியாளர்களும் களத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்று அதிகாலை தொடங்கி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்ட இடங்களில் களஆய்வு செய்து எந்த இடத்தில் பாதிப்புகள் உள்ளதோ அவற்றை எல்லாம் உடனுக்குடன் சரி செய்து இன்று மதியத்திற்கு முன்னதாகவே சீரான மின் விநியோகம் வழங்கப்படக் கூடிய வகையில் களத்தில் பணியாளர்கள், அலுவலர்கள் என அனைவரும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
எனவே, இன்று மதியத்திற்கு முன்னதாகவே அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்விநியோகம் வழங்கப்படும். சென்னையைப் பொறுத்தவரையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. அவற்றை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மீதம் இருக்கக்கூடிய புறநகர் பகுதிகளில் எந்தெந்த இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது என்பதை களத்திலே சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
- திருவண்ணாமலையைச் சேர்ந்த பாலாஜி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
புதுடெல்லி:
கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த பாலாஜி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
- வருமானம், சொத்து விவரங்களையும் பொது வெளியில் வெளியிடவுள்ளதாக அண்ணாமலை தகவல்.
- தி.மு.க தலைவர்கள் வெளியிட தயாரா? என அண்ணாமலை கேள்வி.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் கடிகாரம் வெளிநாட்டு நிறுவனத்தை சேர்ந்தது என்றும், ரஃபேல் விமான பாகத்தில் இருந்து செய்யப்பட்டது எனவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
இது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தி.மு.க-வினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். நான் பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றதற்கு முன்பு, மே மாதம் 2021-ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுக்கால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் என என்னுடைய ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்.
ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது பிரதமர் மோடி அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.
அன்றைய தினம் நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் பொது வெளியில் வெளியிடவுள்ளேன். நான் அறிவித்ததைவிட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டு பிடித்தால், எனது சொத்துகள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார். இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் தி.மு.க-வினர் மற்றும் தி.மு.க தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை என்ற கேள்வியை தவிர்த்து விடலாம் என புத்திசாலித்தனமாக மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா? வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரஃபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான்.
பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் மேட் இன் இந்தியா வா? சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து பல்பு வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
- கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
- மின்சார வாரியத்தில் கடன் நிலை, நிதி சுமை உள்ளதை மேம்படுத்தப்பட வேண்டி உள்ளது.
சென்னை :
தமிழக சட்டசபையில் நடப்பு ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளில் மின்சார வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பணிகளின் முன்னேற்றம் குறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஒரு லட்சமாவது விவசாயியின் மின்சார இணைப்பு உத்தரவையும் வழங்கினார். அதேபோல் இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கான மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சரின் வழிகாட்டுதல் படி சட்டசபையில் அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் 11-ந் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் முதல்-அமைச்சர் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவதற்கான உத்தரவை வழங்கினார்.
தற்போது 34 ஆயிரத்து 134 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து 866 விவசாயிகளுக்கு வருகிற பொங்கல் திருநாளுக்கு முன்பு முழுவதுமாக மின்சார இணைப்பு வழங்கப்படும். தேவையான உதிரி பாகங்கள் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு வாங்கப்பட்டு உள்ளது. தேவை இருந்தால் அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தில், 2 கோடியே 67 லட்சம் மின்சார நுகர்வோர்களில், இதுவரை 1 கோடியே 20 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் (வருகிற 31-ந் தேதி) மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. மின் கட்டண உயர்வால் வருவாயை ஆண்டுக்கு ரூ.19 ஆயிரம் கோடி அளவில் உயர்த்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் செலவுகளை குறைத்தபோது மாதம் ரூ.1,000 கோடி மட்டுமே கூடுதல் வருவாய் வந்துள்ளது. தற்போது ஏற்பட்ட புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது.
தற்போது 2 மாதத்திற்கு ஒரு முறை மின்சாரம் கணக்கு எடுக்கும் அளவில்தான் பணியாளர்கள் உள்ளனர். எனவே, வீடு வாரியாக கணக்கெடுக்கும் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளது. தொடர்ந்து 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்துவதற்காக விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். 1½ ஆண்டுகளில் 80 சதவீதத்திற்கு மேல் முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார்.
மின்சார வாரியத்தை பொறுத்தவரையில், 20 ஆயிரம் மெகாவாட் கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் உள்ளது. மின்சார வாரியம் தொடங்கியதில் இருந்து 2021-ம் ஆண்டு வரை 32 ஆயிரத்து 500 மெகாவாட் தான் உற்பத்தி நிலை உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 2030-ம் ஆண்டுக்குள் 65 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் அதாவது தற்போது இருப்பதைவிட இரட்டிப்பாக்கும் நிலையில் உற்பத்தி நிலையை உயர்த்துவதற்கான திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மின்சார வாரியத்தில் கடன் நிலை, நிதி சுமை உள்ளதை மேம்படுத்தப்பட வேண்டி உள்ளது.
கடந்த ஆட்சியில் மாதம் ரூ.7 கோடிதான் வருவாய் வந்தது. சராசரியாக ஆண்டுக்கு ரூ.70 கோடி முதல் 77 கோடிதான் வருவாய் வந்தது. தற்போது ரூ.80 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. மாதம் ரூ.7 கோடி வந்த இடத்தில் தற்போது ரூ.13 கோடியே 71 லட்சம் வருவாய் வருகிறது.
வட்டியை பொறுத்தவரையில் 13 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வட்டி மாதம் ரூ.84 கோடி குறைக்கப்பட்டு உள்ளது. செலவை குறைத்து வருவாயை பெருக்க மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளில் வருவாயும், செலவும் சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 67 லட்சம் பேர் இணைக்க வேண்டும்.
- இதுவரை 50 சதவீதத்துக்கும் மேல் இணைத்து உள்ளனர்.
கோவை
கோவை கொடிசியா மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இதற்காக மேடை அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் வரை நடைபெறும் 3 அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலில் நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு செய்துவிட்டு பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அதன்பின்னர் கொடிசியா மைதானத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பின்னர் முடிவுற்ற பணிகளை அவர் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது அமைச்சரிடம் மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து கூறியதாவது:-
தமிழகத்தில் மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க முகாம் நடந்து வருகிறது. இதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 67 லட்சம் பேர் இணைக்க வேண்டும். அதில் இதுவரை 50 சதவீதத்துக்கும் மேல் இணைத்து உள்ளனர்.
வருகிற 31-ந் தேதி முடிந்த பின்னர் எத்தனை பேர் இணைத்து உள்ளனர் என்ற பட்டியலை கணக்கில் எடுத்துவிட்டு தேதியை நீட்டிப்பது தொடர்பாக முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்.
மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக சிலர் அரசியலுக்காக சில தவறான கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். எனவே அந்த தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கீழ்கட்டளை அஸ்தினாபுரம் பகுதியில் துணை மின் நிலையங்கள் அமைக்க இடம் கையகப்படுத்தபட்டது.
- நிலம் கண்டறியப்பட்டு, வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதிப்பிடும் பணி செய்ததும் பணிகள் தொடங்கும் .
சென்னை:
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் இ.கருணாநிதி பேசும்போது, அனகாபுத்தூர், பொழிச்சலூர் பம்மல் பகுதிக்கு 33 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் ரூ. 48 கோடியில் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் கீழ்கட்டளை அஸ்தினாபுரம் பகுதியில் துணை மின் நிலையங்கள் அமைக்க இடம் கையகப்படுத்தபட்டது. அங்கு டெண்டர் விட்டு எப்போது பணிகள் தொடங்கப்படும் என்று கேட்டார்.
இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளிக்கையில், அங்கு நிலம் கண்டறியப்பட்டு, வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதிப்பிடும் பணி செய்ததும் பணிகள் தொடங்கும் .
மேலும் பல்லாவரம் தொகுதிக்கு முதல்வர் 3 துணை மின் நிலையங்கள் அமைக்க அனுமதி தந்திருக்கிறார் என்ற தகவலையும் தெரிவி்த்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவர்கள் படிப்பதால் உடனடியாக மின்மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
- ஒரு வாரத்திற்குள் புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
சென்னை:
கோவளம் அரசு மேல் நிலைப்பள்ளியில் சீரான மின்சார விநியோகம் குறித்து ஆய்வு செய்து ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கோவளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரான மின்சாரம் விநியோகம் செய்யப்படுவது இல்லை என்றும், மாணவர்கள் படிப்பதால் உடனடியாக மின்மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா எனவும் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவளம் அரசு மேல்நிலைப்பள்ளி மின்சார வினியோகம் குறித்து துறை அலுவலர்களை நேரடியாக அனுப்பி ஆய்வு செய்து பிரச்சனை இருக்கும் பட்சத்தில் ஒரு வாரத்திற்குள் புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
- ஒரு வெகுமதியை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கிறார் அண்ணாமலை.
- அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் எதுவுமே இல்லை.
கோவை :
அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது கையில் கட்டி உள்ள வாட்சிற்கான பில் காண்பித்ததை மனசாட்சி இருக்கும் யாருமே அதை பில்லாக ஏற்று கொள்ளமாட்டார்கள். இந்த எக்ஸ்.எல். சீட் தயாரிக்கவா 4 மாதம் ஆனது?. எனக்கு எதுவுமே கிடையாது. எல்லாமே எனது நண்பர்கள் தான் கொடுக்கின்றனர் என அண்ணாமலை தெரிவிக்கிறார்.
அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் ரூ.3¾ லட்சம் ஆகும். மாதம், மாதம் இந்த வாடகையை யார் கொடுக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பணம் அனைத்தும் வெளியில் இருந்து வருகிறது என்றால், பணம் எங்கே வார் ரூம்மில் இருந்து வருகிறதா? வார் ரூமில் செய்யப்படும் வசூல் தான் அவரது நண்பரா?, யார் செலவு செய்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.
அண்ணாமலை கூறிய நபர் வாட்ச் வாங்கினது ரூ.4½ லட்சம் எனவும், அதை ரூ.3 லட்சத்துக்கு தனக்கு கொடுத்ததாகவும் அண்ணாமலை கூறுகிறார். கிடைக்காத அரிய பொருளின் மதிப்பு கூடுமே தவிர குறையாது, வாட்ச் நம்பரையும் அண்ணாமலை மாற்றி மாற்றி சொல்கிறார், அதில் இருக்கும் தகவல்களை மாற்றி சொல்கிறார். ஒரு வெகுமதியை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கிறார் அண்ணாமலை. பரிசாக கொடுத்தார்கள் என சொல்வதில் அண்ணாமலைக்கு என்ன தயக்கம்?
அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் எதுவுமே இல்லை. தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கும் சொத்து ஆவணங்களை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். ஒரு ஆதாரம், ஒரு அடையாளம் ஒன்றும் அண்ணாமலை வெளியிட்டதில் இல்லை. தூய்மையாக இருக்கிறீர்கள் என்றால் ஏன் அடுத்தவன் சொத்தில் வாழ்கிறீர்கள்.
என்னை பற்றியும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி பெற்று நானே கோர்ட்டில் அண்ணாமலை மீது வழக்கு தொடர இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.