என் மலர்
நீங்கள் தேடியது "ரோகித்சர்மா"
- முதல் 2 ஆட்டங்களில் வென்றதால் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
- நாங்கள் எதை நோக்கி செல்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்.
ராஜ்கோட்:
ராஜ்கோட்டில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி யில் இந்தியா தோல்வி அடைந்தது. முதல் 2 ஆட்டங்களில் வென்றதால் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இப்போட்டிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
நான் பார்முக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 8 ஒரு நாள் போட்டிகளில் வெவ்வேறு சூழ்நிலைகளில் நாங்கள் நன்றாக விளையாடினோம். வெவ்வேறு சமயங்களில் சவாலுக்கு ஆளானோம். அந்த சவாலை ஏற்றுக் கொண்டு விளையாடினோம். துரதிஷ்டவசமாக நாங்கள் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த ஆட்டத்தை அதிகம் பார்க்க போவதில்லை.
உலக கோப்பைக்காக 15 பேர் கொண்ட அணியை பற்றி பேசும்போது, எங்களுக்கு என்ன தேவை, யார் சரியாக இருப்பார்கள் என்பதில் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் குழப்பமடையவில்லை. நாங்கள் எதை நோக்கி செல்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்" என்றார்.
- 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.
- இந்த ஆடுகளத்தில் விளையாடுவது சவாலானது.
நியூயார்க்:
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 'ஏ'பிரிவில் இடம் பெற்று உள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது.
இந்திய அணி 2-வது போட்டியில் பாகிஸ்தானை இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நியூயார்க்கில் உள்ள நசாவு ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது. பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.
இந்தப் போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறிய தாவது:-
7 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டியில் விளையாடினோம். தற்போது 20 ஓவர் உலக கோப்பையில் விளையாட இருக்கிறோம். பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை.
அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆட்டத்தின் சூழ் நிலைகளுக்கு ஏற்றவாறு விளையாட விரும்புகிறேன். நியூயார்க் ஆடுகளங்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் விளையாடுவது சவாலானது.
ஆடுகளங்களை சீரமைப்பவர்களும் ஆடுகளம் குறித்து புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள். ஆடுகளங்கள் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
- 1983-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான 50 ஓவர் உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
இந்திய அணிக்கு முதல் முறையாக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் கபில்தேவ். 1983-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான 50 ஓவர் உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது முறையாக 50 ஓவர் உலக கோப்பையை வென்று கொடுத்தார். 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
முன்னதாக டோனி தலை மையில் இந்திய அணி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 20 ஓவர் உலக கோப்பையை வென்றது. தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியுள்ளார். கபில்தேவ், டோனி வரிசையில் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.
டோனி 3 ஐ.சி.சி. கோப்பை யையும் (2007 இருபது ஓவர் உலக கோப்பை, 2011 ஒரு நாள் போட்டி உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி), கபில்தேவ் (1983 ஒருநாள் போட்டி உலக கோப்பை), ரோகித் சர்மா (2024 இருபது ஓவர் உலக கோப்பை தலா ஒரு ஐ.சி.சி. கோப்பையை யும் பெற்றுக் கொடுத்தனர்.
சாம்பியன் பட்டம் இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு தெண் டுல்கர், டோனி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.