search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்வு"

    சேலம், நாமக்கல்லில் சி.பி.எஸ்.இ.10-ம் வகுப்பு பொது தேர்வு நாளையுடன் முடிவடைகிறது.
    சேலம்:

    இந்திய அரசு கல்வித்துறையின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) அனுமதி பெற்று சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகின்றன.  

    இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ.    10-ம் வகுப்பு  மாணவ- மாணவிகளுக்கு  பகுதி-2 பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, இன்று   (திங்கட்கிழமை) கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்திற்கான  தேர்வு நடைபெற்றது. 

    இந்த தேர்வு காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு  நாளை (24-ந்தேதி) தகவல்  தொழில்நுட்பம் பாடத் தேர்வுடன் முடிவடைகிறது.

    இந்த தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கி  11.30 மணி அளவில் நிறைவடைகிறது.
    ராமநாதபுரத்தில் 10-ம் வகுப்பு கணித தோ்வை 879 போ் எழுதவில்லை.
    ராமநாதபுரம்

    தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் 10-ம் வகுப்புக்கான அரசு பொதுத் தோ்வு நடந்து வருகிறது. நேற்று (24-ந்தேதி) கணித தோ்வு நடைபெற்றது. 

    இந்த தோ்வுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 17ஆயிரத்து 180 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 16 ஆயிரத்து 349 போ் தோ்வு எழுதினா். 831 போ் தோ்வு எழுதவில்லை. 

    தனித்தோ்வா்கள் 303 போ் கணித தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அவா்களில் 255 பேர் எழுதினா். 48 போ் தோ்வு எழுதவில்லை. 

    பள்ளி மாணவ, மாணவியா் மற்றும் தனித் தோ்வா்கள்  மொத்தம் 879 போ் கணித தோ்வு எழுதவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    தேர்வில் 1, 2 மதிப்பெண் வினாக்கள் எளிதாகவும், 5 மதிப்பெண் வினாக்களில் ஓரிரண்டு கடினமாக இருந்ததாகவும் மாணவ, மாணவிகள் கூறினா். அரசுப் பள்ளிகளில் பயில்வோா் தோ்ச்சி பெற்றாலும் கூடுதல் மதிப்பெண் பெறுவது கடினம் என்று ஆசிரியா்கள் தெரிவித்தனர்.
    நாளை மறுநாள் பிளஸ்-2 தொழில் பாடம் தேர்வு (28-ந்தேதி) நடக்கிறது.
    சேலம்:

    தமிழகம் முழுவதும்  கடந்த (5-ந்தேதி) வியாழக்கிழமை  பிளஸ்-2 பொதுத்–தேர்வு  தொடங்கியது.  இந்த தேர்வு சேலம்  மாவட்டத்தில் 154 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 82 மையங்களிலும்  நடைபெற்று வருகின்றன. 

    கடந்த 23-ந்தேதி (திங்கட்கிழமை)  உயிரியல், தாவரவியல், வரலாறு,  வணிக கணிதம் மற்றும் புள்ளி விபரங்கள், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ராணிக்ஸ் என்ஜினீயரிங்,  அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங்,  டெக்ஸ்டைல்  டெக்னாலஜி, அலுவலக நிர்வாகம் மற்றும் செயலக பதவி உள்ளிட்ட 11 பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றன.

    இதனால்   12-ம் வகுப்பு ெதாழில் பாட பிரிவை தவிர மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் அன்றைய தேதியில்  தேர்வு முடிவடைந்து விட்டது .  இதனால் 12-ம்  வகுப்பு  மாணவ- மாணவிகள் 23-ந்தேதி அன்று மகிழ்ச்சியுடன் ஒருவருக்ெகாருவர் வாழ்த்து  ெதரிவித்தபடி வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (28-ந்தேதி) பிளஸ்-2  தொழில் பாட பிரிவுக்கு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுடன் பிளஸ்-2 பொதுத் தேர்வு நிறைவடைகிறது.
    சேலத்தில், நாளை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் தேர்வு நடைபெறும்.
    சேலம்:

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.  சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  182    மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட  மையங்களிலும் தேர்வு நடைபெற்று வருகின்றன.

    அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதி வருகின்றனர். 

    சமூக அறிவியல் தேர்வு இதனைதொடர்ந்து  நாளை (30-ந்தேதி) சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது.  மாணவ- மாணவிகள் சமூக அறிவியல் பாடத்தை  படிக்கும் விதமாக  கடந்த 27-ந்தேதி முதல்  இன்று வரை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    நாளை நடைபெற உள்ள சமூக அறிவியல் பாடத்துடன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைகின்றன.
    இலவச எல்.கே.ஜி. சேர்க்கை தொடர்பாக சேலம், நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் இன்று குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு, பெயர் பட்டியல் பலகையில் ஒட்டப்பட்டது.
    சேலம்:

    2022-2023-ம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 ன்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத  இடஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு 20.04.2022 முதல் 25.05.2022 வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

    இதனை தொடர்ந்து, அவற்றில் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் விவரம் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையில் கடந்த 28-ந்தேதி  ஒட்டப்பட்டது.

    தகுதியான விண்ணப்பங்கள் 25 சதவீத  இடஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக உள்ள பள்ளிகளில் இன்று (30-ந்தேதி) குலுக்கல் முறையில்    தெரிவு செய்து மாணவர் சேர்க்கை வழங்கப்படும் என கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

    குலுக்கல் மூலம் தேர்வு இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு குலுக்கல் நடைபெறும் நேரம் தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தையின் பிறந்த சான்றிதழ், சாதி சான்றிதழ், நலிவடைந்த பிரிவினருக்கான வருமான சான்று, ஆதார்  அட்டை, புகைப்படம், பெற்றோரின் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கூறப்பட்டது.

    அதன்படி இன்று காலை 9 மணிக்கு முன்பாக  பெற்றோர்கள் உரிய ஆவணங்களுடன் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளுக்கு வந்திருந்தனர்.  ஒரு இடத்திற்கு பலர் விண்ணப்பித்திருந்ததால்  பள்ளி கல்வித்துறை சார்பில்  பள்ளிகளில் குலுக்கல் முறையை கண்காணிக்க  ஆசிரியர் பயிற்றுநர், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

    காலை 10 மணி அளவில் வகுப்பறையில்  வைத்து மாணவ- மாணவிகளின் பெயர்கள் துண்டு சீட்டுக்களில் எழுதி அட்டை பெட்டிகளில் போடப்பட்டது. இதையடுத்து பெற்றோர், பள்ளி நிர்வாகம் முன்னிலையில் அரசு அதிகாரி மேற்பார்வையில்  அட்டை பெட்டி குலுக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு மாணவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    இன்று  பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு  மையமாக செயல்பட்ட பள்ளிகளில் மட்டும் தேர்வு முடிந்ததும் பிற்பகல் வேளையில்  குலுக்கல்  நடைபெற்றது.

    பெயர் பட்டியல் இந்த குலுக்கல் மற்றும் குலுக்கல் அல்லாத முறையில் தேர்வு   செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் அரசு அதிகாரியிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியது.  மேலும் இந்த தேர்வு  பட்டியலும் பள்ளி நோட்டீசு பலகையில்   ஒட்டப்பட்டது.  மேலும் உடனுக்குடன்  இந்த குழந்தைகளுக்கு இலவச எல்.கே.ஜி. சேர்க்கை   வழங்கப்பட்டது.
    சேலம், நாமக்கல் மாவட்ட பட்டதாரிகள் எழுதிய பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு முடிவு வெளியீடு மதிப்பெண் அட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
    சேலம்:

    இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை  பட்டதாரி  பயோடெக்னாலஜி திறன் தேர்வு (GAT - B) மற்றும்  பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு (BET) - 2022  அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கணினி வழி முறையில்  இந்தியா முழுவதும் 56 நகரங்களில் 23.04.2022 அன்று  தேர்வு நடத்தியது.  

     சமூக இடைவெளியை கடைபிடித்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு  தேர்வுகள் நடத்தப்பட்டன.

    பட்டதாரி பயோடெக்னாலஜி திறன் தேர்வுக்கு (GAT-B) 6359 பெண்களும், 3219 ஆண்களும்  என மொத்தம் 9578 பேர் விண்ணப்பித்தனர். இதில் 5722 பெண்கள்,  2955 ஆண்கள் என  8677 பேர் தேர்வு எழுதினர்.

    இதேபோல்  பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு (BET)  எழுத பெண்கள்- 9448, ஆண்கள்- 4251 என 13699 பேர்  பதிவு செய்தனர். இதில் பெண்கள்- 8013,  ஆண்கள்- 3758 என மொத்தம் 11771 பேர் தேர்வு எழுதினார்கள். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.

    இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள் தேர்வில் எடுத்த  மதிப்பெண்கள்  தேசிய தேர்வு முகமை இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப எண், பாஸ்வேர்டு கொடுத்து  பார்க்கலாம்.  மேலும் ரேங்க் கார்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தேர்ச்சி பெற்றவர்கள்  மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையில்  முதுகலை படிப்பில் சேர அட்மிஷன் வழங்கப்படுகிறது. இதைத்தவிர   பயோடெக்னாலஜி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பங்கேற்று ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பயோடெக்னாலஜி ஆராய்ச்சியைத் தொடர உதவிகளும் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    ×