என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "taluka office"
- கடந்த 2019 ம் ஆண்டு பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டு ஜீப் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.
- ஊதியச்சான்று கிடைக்காததால் தற்போது பணியாற்றும் இடத்திலிருந்து சம்பளம் வாங்க முடியாமல் தவித்து வருகிறார்.
பல்லடம்:
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கயம்பாளையத்தை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது36). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர் கடந்த 2010 ம் ஆண்டு காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் ஜீப் ஓட்டுனராக அரசு பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டு ஜீப் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி திருப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இவர் பணி புரிந்த பல்லடம் தாலுகா அலுவலகத்தில் இருந்து முன் ஊதியச் சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் இன்னமும் ஊதியச்சான்று கிடைக்காததால் தற்போது பணியாற்றும் இடத்திலிருந்து சம்பளம் வாங்க முடியாமல் தவித்து வருகிறார். இதனால் பஸ்சில் செல்வதற்கு கூட பணம் இல்லாததால் தினமும் சூலூர் காங்கேயம் பாளையத்திலிருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம் வரை சுமார் 35 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று விட்டு இரவு மீண்டும் 35 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பிரயாணம் செய்து வீடு வந்து சேர்வதாக வேதனையுடன் அவர் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து பணியாற்றுகிறேன். அக்டோபர் மாதம் 17-ந் தேதி திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரின் ஜீப் டிரைவராக இடமாறுதல் செய்யப்பட்டேன். பணியில் சேரும்போது முன் ஊதியச் சான்று வழங்க வேண்டும். இதன்படி பல்லடம் தாலுகா அலுவலகத்தில் முன் ஊதியச் சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் கடந்த 83 நாட்களாகியும், எனக்கு இன்னும் முன் ஊதியச் சான்று கிடைக்கவில்லை.மேலும் அக்டோபர் 1-ல் இருந்து 17ந் தேதி வரை பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றியதற்கு சம்பளமும் வரவில்லை. இது குறித்து பலமுறை கேட்டும் இன்னும் எனக்கு முன் ஊதியச் சான்று தரப்படாததால் தற்போது பணியில் சேர்ந்த இடத்தில் சம்பளம் எனக்குத் தரப்படவில்லை. இதனால் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்படுகிறேன். தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி சமாளித்தேன். தற்போது பஸ்சுக்கு கூட பணம் இல்லாததால் சைக்கிளில் தினமும் காங்கேயம் பாளையத்திலிருந்து திருப்பூருக்கு வந்து செல்கிறேன். சுமார் 70 கிலோமீட்டர் பயணம் செய்வதால் கடும் உடல் வலி ஏற்படுகிறது. எனவே எனக்கு உடனடியாக பாக்கி சம்பளமும் முன் ஊதியச் சான்றும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் குடும்பத்துடன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பணத்தை வாங்கிக் கொண்டும் விவசாயிகளுக்கு முறையான நில அளவை மற்றும் பட்டா மாறுதல் செய்து தருவதில்லை.
- லஞ்சம் கொடுப்பது மட்டுமில்லாமல் விவசாயிகள் அதிக அளவில் அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.
தாராபுரம் :
தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் வருகிற 19-ந் தேதி நிலத்தை அளப்பதற்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்கும் நிலஅளவையரை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கொள்கை பரப்பு செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தாராபுரம் வட்டம் என்பது மிகப்பெரிய வட்டமாகும் இங்கு அதிக அளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அதில் சிறு, குறு விவசாயிகள் தான் அதிகம் .விவசாயிகள் தங்களுடைய நிலத்தை பாகப்பிரிவினை, செட்டில்மெண்ட், அல்லது கிரையம் தடம் பாத்தியம் எழுதுவது போன்ற பல்வேறு காரணங்களுக்காக தாலுகா நில அளவைத்–துறையை நாட வேண்டி உள்ளது.
விவசாயிகள் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பத்திரப்பதிவுத்துறைக்கு முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் முறையாக செலுத்தப்படுகிறது. பத்திரப்பதிவு முடிந்ததும் எஸ்.டி.ஆர். எனப்படும் இனங்களில் விவசாயிகளுடைய நிலத்தை அளந்துஉட்பிரிவு செய்து தருவதற்கு ஏக்கர் 1-க்கு ரூ.5ஆயிரம் வரை நில அளவைத்துறை லஞ்சம் வசூல் செய்கிறது.
விவசாயிகளும் எவ்வளவு நாள் அலைவது என்று பணத்தை கொடுத்து வரு–கிறார்கள். மேலும் ஆர்.டி–ஆர். என்ற முறையில் பட்டா மாறுதல் செய்யப்படுகிற இனங்களுக்கும் ஏக்கருக்கு இவ்வளவு என்று கணக்கு போட்டு வசூல் செய்து வருகின்றனர். மேலும் பணத்தை வாங்–கிக் கொண்டும் விவசாயிகளுக்கு முறையான நில அளவை மற்றும் பட்டா மாறுதல் செய்து தருவதில்லை.
ஆனால் ரியல் எஸ்டேட், சோலார் கம்பெனிகள் போன்றவர்கள் கூப்பிட்ட உடனே சென்று அவர்களுக்கு அளந்து கொடுப்பதும் விவசாயிகள் சென்றால் தகுந்த பதில் சொல்லாமல் அலைக்கழிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. மேலும் லஞ்சம் கொடுப்பது மட்டுமில்லாமல் விவசாயிகள் அதிக அளவில் அலைச்ச–லுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். ஆகையால் வரும் 19-ந் தேதி நடைபெறுகின்ற தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கள்ளக்குறிச்சியில் ரூ.3.06 கோடியில் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
- கூட்ட அறை, நில அளவை பிரிவு ஆகிய அறைகள் கட்டப்பட்டு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் தாசில்தார் அலுவலகம் மிக வும்பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் புதிய வட்டா ட்சியர் அலுவலகம் கட்ட ரூ. 3 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி தரைதளத்தில் காத்திருப்போர் கூடம், வருவாய் வட்டாட்சியர் (சமூக நலம்), அலுவலக அறை, தபால் வாங்குதல் மற்றும் அனுப்புதல் அறை, கணினி அறை, கழிவறை ஆகியஅறைகளும், முதல் தளத்தில் வருவாய் வட்டாட்சியர் அறை, வட்டாட்சியர்கள் ஆதிதி ராவிடம் மற்றும் வட்ட வழ ங்கல் அறை, அலுவலக அறை ஆகியவைகளும், 2-வது தளத்தில் பதிவறை, அலுவலக அறை, கூட்ட அறை, நில அளவை பிரிவு ஆகிய அறைகள் கட்டப்பட்டு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை யிலிருந்து காணொளி காட்சி மூலம் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன்படி கள்ளக்குறிச்சி தாசில்தார் அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வந்தது. இதைதொடர்ந்து கள்ளக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்குமார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, தாசில்தார் விஜய பிரபாகரன், குடிமை பொருள் தாசில்தார் வெங்கடேசன், ஆதிதிராவிட தனி தாசில்தார் நடராஜன், பாதுகாப்பு தனி தாசில்தார் மணிகண்டன், ரயில்வே தனி தாசில்தார் கமலம், வருவாய் ஆய்வாளர்கள் பாலு, சுகன்யா, ராமசாமி, ஜெயந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
- சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்வக்குமார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
- சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் சுமூக முடிவு மேற்கொள்வதற்காக கூட்டம் நடைபெற்றது.
சிவகிரி:
சிவகிரி அருகே ராயகிரி நகர பஞ்சாயத்தை சேர்ந்த வடுகபட்டியில் உள்ள ஆதிதிராவிடர் காலணியின் கீழ்புறம் மந்தை புறம்போக்கு இடத்தில் அமைந்துள்ள எரிமேடையால் இப்பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை சார்ந்த மக்களுக்கு ஏற்படும் சவுகரியங்களை கருத்திற்கொண்டு வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கும் வகையிலும்,
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் சுமூக முடிவு மேற்கொள்வதற்காகவும், சிவகிரி தாசில்தார் செல்வக்குமார் தலைமையில் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் மனோகரன், மண்டல துணைத் தாசில்தார் மைதீன் பாட்ஷா, வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், ராயகிரி நகர பஞ்சாயத்து இளநிலை உதவியாளர் பத்திரகாளி, கிராம நிர்வாக அலுவலர் ராமலட்சுமி, உதவியாளர் மலைக்கனி, ஆகியோர் உள்பட ஒரு சமூகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், சிவனுப்பாண்டி, பாண்டி ஆகியோரும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த தமிழன், முனியாண்டி, மாரியப்பன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வடுகபட்டியில் ஆதிதிராவிடர் காலனியின் கீழ்புறம் மந்தை புறம்போக்கு இடத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் பயன்படுத்திவரும் எரிமேடையால் மற்றொரு சமுதாயத்தினரின் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், சுகாதார கேடுகளையும் கருத்திற்கொண்டு,
தற்போது எரிமேடையை பயன்படுத்தி வருகின்ற சமுதாயத்தினர் இதற்கு முன்பு ஏற்கனவே பயன்படுத்தி வந்த பழைய எரிமேடையை ராயகிரி நகர பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் சீரமைக்கும் பட்சத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள எரிமேடையை அப்பறப்படுத்திக் கொள்வது எனவும் ஒப்புக் கொண்டனர். இதனை மற்றொரு சமுதாயத்தினரும் ஏற்றுக்கொண்டனர்.
பழைய எரிமேடையை உடனடியாக சீரமைக்கவும், சீரமைத்த பின்னர் தற்போது உள்ள எரிமேடையை அகற்றவும் ராயகிரி நகர பஞ்சாயத்து மூலம் விரைந்து செயல் படுத்துவது எனவும், ராயகிரி நகரப பஞ்சாயத்து நிர்வாகத்தினர் ஒப்புக் கொண்டனர்.
மேலும் மயானம் எரிமேடைகள் அமைந்துள்ள நிலத்தில் தனிநபர் ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது எனவும், மேற்படி பகுதியில் அமைந்துள்ள அடிபம்பினை அவ்வப்போது பழுது பார்த்து தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும் எனவும்,
இவற்றிற்காக ராயகிரி நகர பஞ்சாயத்து நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டனர். பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்