search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம்
    X

    தாசில்தார் செல்வக்குமார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்ற காட்சி. 

    சிவகிரி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம்

    • சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்வக்குமார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
    • சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் சுமூக முடிவு மேற்கொள்வதற்காக கூட்டம் நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே ராயகிரி நகர பஞ்சாயத்தை சேர்ந்த வடுகபட்டியில் உள்ள ஆதிதிராவிடர் காலணியின் கீழ்புறம் மந்தை புறம்போக்கு இடத்தில் அமைந்துள்ள எரிமேடையால் இப்பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை சார்ந்த மக்களுக்கு ஏற்படும் சவுகரியங்களை கருத்திற்கொண்டு வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கும் வகையிலும்,

    சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் சுமூக முடிவு மேற்கொள்வதற்காகவும், சிவகிரி தாசில்தார் செல்வக்குமார் தலைமையில் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் மனோகரன், மண்டல துணைத் தாசில்தார் மைதீன் பாட்ஷா, வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், ராயகிரி நகர பஞ்சாயத்து இளநிலை உதவியாளர் பத்திரகாளி, கிராம நிர்வாக அலுவலர் ராமலட்சுமி, உதவியாளர் மலைக்கனி, ஆகியோர் உள்பட ஒரு சமூகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், சிவனுப்பாண்டி, பாண்டி ஆகியோரும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த தமிழன், முனியாண்டி, மாரியப்பன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வடுகபட்டியில் ஆதிதிராவிடர் காலனியின் கீழ்புறம் மந்தை புறம்போக்கு இடத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் பயன்படுத்திவரும் எரிமேடையால் மற்றொரு சமுதாயத்தினரின் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், சுகாதார கேடுகளையும் கருத்திற்கொண்டு,

    தற்போது எரிமேடையை பயன்படுத்தி வருகின்ற சமுதாயத்தினர் இதற்கு முன்பு ஏற்கனவே பயன்படுத்தி வந்த பழைய எரிமேடையை ராயகிரி நகர பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் சீரமைக்கும் பட்சத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள எரிமேடையை அப்பறப்படுத்திக் கொள்வது எனவும் ஒப்புக் கொண்டனர். இதனை மற்றொரு சமுதாயத்தினரும் ஏற்றுக்கொண்டனர்.

    பழைய எரிமேடையை உடனடியாக சீரமைக்கவும், சீரமைத்த பின்னர் தற்போது உள்ள எரிமேடையை அகற்றவும் ராயகிரி நகர பஞ்சாயத்து மூலம் விரைந்து செயல் படுத்துவது எனவும், ராயகிரி நகரப பஞ்சாயத்து நிர்வாகத்தினர் ஒப்புக் கொண்டனர்.

    மேலும் மயானம் எரிமேடைகள் அமைந்துள்ள நிலத்தில் தனிநபர் ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது எனவும், மேற்படி பகுதியில் அமைந்துள்ள அடிபம்பினை அவ்வப்போது பழுது பார்த்து தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும் எனவும்,

    இவற்றிற்காக ராயகிரி நகர பஞ்சாயத்து நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டனர். பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×