search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tea shop owner"

    • சம்பவத்தன்று காலை முருகேசன் வீட்டின் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருந்தார்.
    • இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்னிவலசு சிவாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன் (34). இவர் பெருந்துறையில் டீ கடை வைத்துள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி (23). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் முருகேசன் ஒரு பெண்ணுடன் போனில் பேசியது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து சம்பவத்தன்று காலை முருகேசன் வீட்டின் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருந்தார்.

    இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முருகேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை அருகே புயலால் பாதித்த விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்த டீக்கடைக்காரர் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளார். #GajaCyclone
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் கிராமமானது செழிப்பான பகுதியாகும். இங்கு மலர்கள், காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் தென்னை, பலா, வாழை ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.

    கஜா புயலால் இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்தனர். விவசாயமும் பாதிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலர் உதவிகள் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். இதையடுத்து அவர் தனது கடையில் டீ குடித்ததற்காக நீண்ட நாட்களாக கடன் வைத்திருந்த விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கடன் தொகையை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதனை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கடை பலகையில் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.

    இது குறித்து சிவக்குமார் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக இந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறேன். புயலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பாக்கித்தொகையை அவர்களால் இப்போதைக்கு திருப்பி வழங்க முடியாது என்று நினைத்தேன்.

    அதனால் என்னால் இயன்ற உதவியை அவர்களுக்கு செய்யும் வகையில் ஒட்டுமொத்த கடன் பாக்கியையும் தள்ளுபடி செய்து விட்டேன் என்றார். விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கடனை தள்ளுபடி செய்த சிவக்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    விவசாயிகள் தங்களது பயிர்க்கடன் தள்ளுபடியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களின் டீ குடித்த கடனை கடைக்காரர் தானாகவே தள்ளுபடி செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #GajaCyclone
    பணத்தகராறில் டீக்கடை உரிமையாளரை உருட்டுகட்டையால் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருச்சி:

    திருச்சி டி.வி.எஸ்.டோல் கேட் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் கருப்பசாமி (28). இவர் தொழிலுக்காக திருச்சி தில்லை நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரிடம் பணம் வாங்கியுள்ளார். பின்னர் அந்த பணத்தை திருப்பி செலுத்த வில்லை. 

    இந்நிலையில் ரமேஷ்குமார் தனது உறவினர் சபரிசீனிவாசனுடன் டீக்கடைக்குசென்று கருப்பசாமியிடம் பணம் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ்குமார் உருட்டுகட்டையால் கருப்பசாமியை தாக்கினர். இதில் அவரின் மண்டை உடைந்தது. 

    இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குபதிவு செய்து ரமேஷ்குமார், சபரிசீனிவாசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    ×