search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenager's murder"

    • இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.
    • கழுத்து அறுபட்டு கிடந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்,

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே அகரத்து மேடு கிராமத்தில் பில்லூர்-பஞ்சமாதேவி செல்லும் சாலை ஓரம் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்க ப்பட்டு இருந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். கழுத்து அறுபட்டு கிடந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வாலிபர் பிணமாக கிடந்த இடத்தில் எந்த ஒரு துளி ரத்தமும் இல்லை. எனவே மர்ம நபர்கள் அந்த வாலிபரை கடத்தி கொலை செய்து சாலை ஓரத்தில் வீசி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    கொலை செய்யப்பட்ட வாலிபரின் இடது மார்பில் தியாகு என்றும், இடது கையில் திவ்யா என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளது. எனவே அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அருகில் உள்ள கிராமங்களில் யாராவது காணாமல் போனார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரமேஷ் கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கு வந்தார்.
    • இன்று அதிகாலை ரமேஷ் வீட்டின் வாசலில் இரத்தம் சிந்திக் கடந்தது.

    கடலூர்:

    வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி ராதிகா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து இறந்தார். இதையடுத்து இவரது பிள்ளைகள் ராதிகாவின் பெற்றோரிடம் வளர்ந்து வருகின்றனர். சிங்கப்பூரில் பணி செய்து வந்த ரமேஷ் கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கு வந்தார். அது முதல் இங்கேயே தனியாக வசித்து வருகிறார்.

    இவரது தந்தை கருப்பையாவிற்கு 2 மனைவிகள், முதல் மனைவியின் மகன் ரமேஷ். தற்போது இவரது தந்தை 2-வது மனைவி, 2 பிள்ளைகளுடன் அதே ஊரில் தனியாக வசித்து வருகிறார். இதனால் ரமேஷ் தனியாக வசித்து வந்தார். இதனால் தனியாக வசித்து வரும் ரமேஷ், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல சில நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிவார் என்று தெரிகிறது. இவர் 2 முறை சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியில் சென்ற ரமேஷ், இரவு 10 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை ரமேஷ் வீட்டின் வாசலில் இரத்தம் சிந்திக் கடந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அதில் வீட்டினுள் இரத்த வெள்ளத்தில் ரமேஷ் கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்ற கிராம மக்கள் வேப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் ராமச்ச ந்திரன் தலைமையிலான போலீசார் வீட்டிற்குள் சென்று ரமேஷின் உடலை கைப்பற்றினர். அதில் ரமேஷின் மார்பு பகுதியிலும், தலையில் பலத்த காயங்கள் இருப்பதைக் கண்டனர்.

    மேலும், அவரின் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவு வரையில் இரத்தம் சிந்தி இருந்தது. இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களையும், கடலூரில் இருந்து மோப்ப நாயினையும் வரவழைத்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியாக வசித்து வந்த ரமேஷினை முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தனரா? சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    ×