search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tenkasi district"

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
    • மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி சேர்வலாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 9 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்தது. பாபநாசம் அணையில் தற்போது 71.05 அடியும், சேர்வலாறில் 82.74 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    அணைகளுக்கு தற்போது 672 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை களில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக வினாடிக்கு 658 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கோடை மேலழகியான் மற்றும் நதியுண்ணி, கோடகன் கால்வாய் பாசன விவசாயிகள் நெல் பயிடும் பணியை உற்சாகமாக தொடங்கி உள்ளனர். முக்கூடல் சுற்று வட்டார பகுதிகளில் தாமிர பரணி ஆற்றை ஒட்டிய பகுதி களில் நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்குடி உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு இதமான காற்று வீசி வருகிறது.

    ஒரு சில இடங்களில் அவ்வப்போது சாரல் பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி தென்காசியில் அதிகபட்சமாக 6 மில்லி மீட்டர் மழை பெய்தது. அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி, குண்டாறு அணை பகுதிகளில் தலா 10 மில்லிமீட்டர் மழை கொட்டியது. கடனா மற்றும் ராமநதி அணைகளில் தலா 2 மில்லிமீட்டரும், அடவி நயினாரில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

    அதேபோல் குண்டாறு அணையில் நிரம்பி வழியும் நீரிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்கின்றனர்.

    • தென்காசி மாவட்டத்தில் மேலகரம், குருக்கள்பட்டி, வாசுதேவநல்லூர், ஊத்துமலை, சிவகிரி, வன்னிக்கோனேந்தல் கிராமங்களில் இருந்து செயல்பட்டு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டு உள்ளது.
    • இதனால் இரவு நேரங்க ளில் உயிருக்கும் போராடும் நோயாளிகளுக்கு தனியார் ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளது.

    சங்கரன்கோவில்,:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை, தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் மேலகரம், குருக்கள்பட்டி, வாசுதேவநல்லூர், ஊத்துமலை, சிவகிரி, வன்னிக்கோனேந்தல் கிராமங்களில் இருந்து செயல்பட்டு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் இரவு நேரங்க ளில் உயிருக்கும் போராடும் நோயாளிகளுக்கு தனியார் ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளது.

    இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து மேற்கண்ட கிராமங்களில் இயங்கி வரும் 108 ஆம்பு லன்ஸ் வாகனம் 24 மணி நேரமும் இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த சந்திப்பின் போது வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன்திருமலைகுமார் உடன் இருந்தார்.

    • தென்காசி மாவட்டத்தில் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கொள்ளை கும்பல் மற்றும் காற்றாலைகளில் வயர்களை திருடும் கும்பல்களால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.
    • குறிப்பாக டிசம்பர் மாதத்தில் தென்காசியில் உள்ள முக்கிய நகரங்களான ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை உள்ளிட்ட பகுதியில் அரங்கேறிய திருட்டு சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கொள்ளை கும்பல் மற்றும் காற்றாலைகளில் வயர்களை திருடும் கும்பல்களால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.

    அரங்கேறும் திருட்டு

    குறிப்பாக டிசம்பர் மாதத்தில் தென்காசியில் உள்ள முக்கிய நகரங்களான ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை உள்ளிட்ட பகுதியில் அரங்கேறிய திருட்டு சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் கொள்ளை நடந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் உடனடியாக கைது செய்யப்படாமல் இருந்து வருவது பொதுமக்கள் மத்தியில் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

    சமீபத்தில் ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம், சங்கரன்கோவில் பகுதியில் காற்றாலைகளில் வயர்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் கைது செய்தபோது அதில் பெரும்பாலானோர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு காற்றாலைகளை குறிவைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    தொடர் கொள்ளை

    அதேபோன்று பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் கிராமத்தை சேர்ந்த பணி ஓய்வு பெற்ற 2 ஆசிரியர்களை கட்டிப்போட்டு 100 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்க பணம் கொள்ளை நடந்த சம்பவம், அடைக்கல பட்டணம் அருகே இரும்பு வியாபாரி கோவில் திருவிழாவிற்கு சென்ற போது அவரின் வீட்டை நோட்டமிட்டு வீட்டில் வைத்திருந்த ரூ.30 லட்சத்தை கதவை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் ஆகியவை பரபரப்பை ஏற்படுத்தின.

    மேலும் பாவூர்சத்திரத்தில் கிறிஸ்துமஸ் தின விழாவிற்கு முந்தைய நாள் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் ஹாஸ்பல் நகரில் குடியிருந்து வரும் எல்.ஐ.சி. ஏஜெண்டான நேசமணி சிறப்பு பிரார்த்தனைக்காக குடும்பத்தினருடன் குருசாமிபுரத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்றபோது 20 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் கொள்ளை போனது.

    கைரேகை ஆய்வு

    அதே நாளில் ஆலங்குளத்தில் முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் வீரபுத்திரன் வீட்டில் கதவுகள் உடைக்கப்பட்டு சுமார் ரூ.4.25 லட்சம் மதிப்பிலான நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.அடுத்தடுத்து மேலும் 4 வீடுகளில் தொடர் கொள்ளை நடந்தது.அதே தெருவை சேர்ந்த முருகையா என்ற அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பணத்தை திருடி சென்றனர்.

    தொடர்ந்து அதே தெருவில் வசிக்கும் லாசர்(39) வீட்டின் உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.40 ஆயிரத்தை திருடி சென்றனர். இதே போல் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியில் அந்தோணி என்பவர் வீட்டில் கதவை கடப்பாரை கொண்டு உடைத்து உள்ளே சென்று ரூ.20 ஆயிரம் மற்றும் 3 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.கொள்ளை நடந்த அனைத்து வீடுகளிலும் கைரேகை நிபுணர் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    தொடர்திருட்டு:

    ஆலங்குளத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு காமராஜர் நகரில் தொடர்ச்சியாக 3 வீடுகளில் புகுந்த திருடர்கள் ரூ. 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்ற நிலையில் மீண்டும் கைவரிசை காட்டி இருப்பது பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    இரவு ரோந்து பணிக்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்:

    இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசாரின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவே உள்ளது.

    மேலும் திருவிழா உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் சந்தேகப்படும்படி இரவில் சுற்றும் நபர்களை கண்காணித்திட வேண்டும். அவர்களிடம் கைரேகை மற்றும் முகவரி, தொலைபேசி எண்ணை சேமிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும்.

    தென்காசியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி வழிபாட்டுத்தலங்கள், முக்கிய சாலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்டவற்றில் தனிக்கவனம் செலுத்தி சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும். ஏனெனில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிப்பதற்கு போலீசாருக்கு பெரும் உதவியாக இருந்து வருவது மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் இந்த கண்காணிப்பு காமிராக்கள் தான். எனவே அவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

    தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும் பொது மக்களிடையே விழிப்புணர்வு குறைந்த அளவே உள்ளது. வெளியூர்களுக்கு பயணிக்கும் பொதுமக்கள் அவர்களின் பயணம் குறித்த தகவலை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் கடிதமாக வழங்கி செல்லும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால் ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் அந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். இதனால் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.

    முக்கிய இடங்களில் போலீசாரின் புகார் பெட்டிகள் நிறுவுதல் :

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து நடைபெறும் குற்ற சம்பவங்களை தகவல்களாக போலீசாருக்கு தெரிவிக்கும் வண்ணம் புகார் பெட்டிகளை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தினர் ஏற்படுத்த வேண்டும். புகார் பெட்டிகள் நிறுவப்படும் பட்சத்தில் போதை மற்றும் பெண்கள் மீதான குற்றச்சம்பவங்கள் குறித்த உண்மை தகவல்கள் போலீசாருக்கு எளிதில் கிடைக்கும். அதன் அடிப்படையில் போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்தினால் பெரும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுக்கப்படும்.

    தென்காசி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் கொள்ளை சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் மாற்று வழிகளை கையாண்டு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை நீக்க முனைப்பு காட்டவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாரல் திருவிழா நடத்தப்படவில்லை.
    • 3-ம் நாளான 7-ந் தேதி பளுதூக்குதல், வலு தூக்குதல், ஆணழகன் போட்டி, யோகா போட்டிகளும், 8-ந் தேதி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள், படகு போட்டிகளும் நடத்தப்படுகிறது.

    தென்காசி:

    குற்றாலம் சீசனை யொட்டி ஒவ்வொரு ஆண்டும் சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை.

    பொதிகை திருவிழா

    கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தென்காசி தனி மாவட்டமாக உரு வானது. அதன்பிறகு முதல் முறையாக தற்போது சாரல் திருவிழா நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு சாரல் திருவிழா பொதிகை திருவிழாவாக நடத்தப்படுகிறது. நாளை 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை விழா நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு புத்தக திருவிழா 14-ந் தேதி வரை நடக்கிறது. குற்றாலம் கலைவாணர் அரங்கில் நாளை மாலை தொடங்கும் விழாவை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    பல்வேறு போட்டிகள்

    தொடர்ந்து விழா நடைபெறும் ஒவ்வொரு நாட்களும் பல்வேறு போட்டிகள் நடத்தப் படுகிறது. 2-ம் நாளான 6-ந் தேதி கொழு கொழு குழந்தைகள் போட்டிகளும், நாய்கள் கண்காட்சியும் நடத்தப்படுகிறது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் பரிசு வழங்குகிறார்.


    3-ம் நாளான 7-ந் தேதி பளுதூக்குதல், வலு தூக்குதல், ஆணழகன் போட்டி, யோகா போட்டிகளும், 8-ந் தேதி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள், படகு போட்டிகளும் நடத்தப்படுகிறது.

    9-ந் தேதி மாரத்தான், வில்வித்தை போட்டிகளும், 10-ந் தேதி கோலப் போட்டி, யோகா போட்டிகளும் நடத்தப்படுகிறது.

    11-ந் தேதி மகளிருக்கான மினி மாரத்தான், மேஜிக் விளக்கு அலங்கார போட்டி நடக்கிறது.

    நிறைவு நாளான 12-ந் தேதி பழைய கார்களின் அணிவகுப்புகளும், கல்லூரி மாணவ- மாணவிகளின் பரத நாட்டியம் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

    குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்காவில் நாளை மறுநாள் (சனிக்கிழமை)முதல் 8-ந் தேதி வரை நடைபெறும் தோட்டக்கலை திருவிழாவில் வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, மண்ணில்லா விவசாய மாதிரி அமைப்பு, செங்குத்து தோட்டம் மாதிரி அமைப்பு, தோட்டக்கலை விளை பொருட்கள் கண்காட்சி, மலர்களால் உருவாக்கப்பட்ட மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

    தொடர்ந்து ஜமீன் பங்களா வளாகத்தில் நடைபெறும் உணவு திருவிழாவில் தென்காசி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த உணவு தயாரிப்பு நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம் பெறுகிறது.

    ஏற்பாடுகள் தீவிரம்

    நெல்லையின் பிரசித்தி பெற்ற அல்வா முதல் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நாளை சாரல் திருவிழா தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது. கலைவாணர் அரங்கில் பல்வேறு அரங்கு அமைக்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டு ள்ளது. அதனை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    விழாவையொட்டி கலைவாணர் அரங்கு வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. அங்கு பார்வையாளர்கள் அமர் வதற்காக இருக்கைகளும் போடப்பட்டு வருகிறது.சாரல் விழாவை யொட்டி குற்றாலம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ×