என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thada School irrigation area"
- முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
- இரு பாசனங்களிலும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணை வழியாக தடப்பள்ளி-அரக்க ன்கோட்டை வாய்க்கால் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் பாசனம் பெறுகி ன்றன.
விவசாயிகளின் கோரிக்கை ஏற்று கடந்த ஏப்ரல் 21-ந் தேதி முதல் ஆகஸ்ட் 18-ந் தேதி வரை 120 நாட்களுக்கு முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீரை கொண்டு இரு பாசனங்களிலும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
இது குறித்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசன சங்க தலைவர் சிபி தளபதி கூறியதாவது:
கொடிவேரி அணை பாசனங்களுக்கு சித்திரை முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் சித்திரையில் தண்ணீர் திறந்தாலும் வாய்க்கால் பராமரிப்பு பணியால் எதிர்பார்த்த மகசூல் இல்லை.
ஆனால் நடப்பு முதல் போகம் எந்த இடையூறும் இன்றி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ கத்தில் நெல் உற்பத்தியில் கொடிவேரி அணை பாசனங்கள் முன்னிலையில் உள்ளது.
நடப்பு போகத்தில் முறையான நீர் நிர்வாகத்தால் பருவத்தே பயிர் செய்ததால் ஏக்கருக்கு சராசரியாக 2500 கிலோ மகசூல் கிடைக்கும் என நம்பிக்கையுடன் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.