என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "the Chief Minister"
- மிசாவையே தி.மு.க பார்த்துள்ளது.
- தி.மு.க கூட்டணியை ஆதரித்து பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
ஈரோடு:
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை ஈரோட்டுக்கு வந்தார்.
ஈரோடு மாவட்ட எல்லையான விஜய மங்கலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் சு.முத்துசாமி, அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி வெங்கடாசலம், வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், ஆகியோர் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதேப்போல் கலெக்டர் கிருஷ்ணனுண்ணியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றார்.
பின்னர் அமைச்சர் உதயநிதி பி.பி. அக்ரஹாரத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசா ரத்துக்கு வந்த போது 50 ஆயிரம் ஓட்டுக்கு மேல் வெற்றி பெற செய்தால் மாதம் ஒரு முறை ஈரோடு வந்து மக்களை சந்திப்பேன் என்றேன்.
சட்டசபை கூட்டத்தொடர் இருந்ததால் தாமதமாக வந்துள்ளேன். தேர்தல் வாக்குறுதியாக கூறியவற்றில் இதுவரை 90 சதவீதத்தை முதல்- அமைச்சர் நிறை வேற்றி உள்ளார்.
இன்னும் 3 ஆண்டுகள் காலம் உள்ளதால் முழுமையாக அனைத்து வாக்குறு திகளும் நிறைவேற்றப்பட்டு மேலும் புதிய திட்டங்களையும் நிறைவேற்றுவார்.
அ.தி.மு.க.வில் பல அணிகள் உள்ளன. அவர்களை வைத்து ஐ.பி.எல். போட்டி கூட நடத்தலாம். அவர்களால் மக்களுக்கான திட்டங்களை எப்போதும் கொண்டு வரவோ, பேசவோ முடி யாது.
பாராளுமன்ற த்தில் அதானி பற்றி ராகுல் பேசியதால் அவரது பதவியை பறித்தனர். முன்னாள் கவர்னர் சத்ய பால்சிங் மத்திய அரசை விமர்சித்ததால் அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடத்தினர்.
அதுபோல எங்களிடமும் வருமான வரி சோதனை நடத்தினர். இதற்காக அச்சப்படுவோர் நாங்கள் இல்லை. மிசாவையே தி.மு.க பார்த்துள்ளது.
இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணியை ஆதரித்தது போல் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க கூட்டணியை ஆதரித்து பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார் .
இதில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ், மேயர் நகரத்தினம், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி,
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம், மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜியாவுதீன், ஈரோடு தெற்கு மாவட்ட ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணி,
பெருந்துறை நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், பேரூர் செயலாளர் அக்ரம் பி.எஸ்.திருமூர்த்தி, தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எம்.தனசேகர்,
வி.எஸ்.சங்கர், கருங்கல்பாளையம் தி.மு.க. பிரமுகர் கேபிள் செந்தில்குமார், கவுன்சிலர் கீதாஞ்சலி செந்தில்குமார், ஈரோடு மாவட்ட ஆவின் இயக்குனர் என்.ஆர்.கோவிந்தராஜர்,
மருத்துவ அணி டாக்டர்.ஜி.யுவபால குமரன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஈரோடு மாவட்டத்தில் 96 பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
- பெற்றோர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் 28 பள்ளிகளில் 2,649 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப் பட்டு வருகிறது. திங்கட் கிழமை கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார்,
செவ்வாய்க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, புதன்கிழ மை வெண்பொங்கல் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சோள காய்கறி கிச்சடி ரவா கேசரி போன்றவை வழங்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று முதல் கூடுதலாக 32 பள்ளிகளில் 5,793 மாணவ- மாணவிகளுக்கு இந்த காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் தாளவாடி மலைப்பகுதியில் 32 பள்ளிகளில் 738 மாணவ-மாணவிகள் பயனைந்து வருகின்றனர். மொத்தமாக ஈரோடு மாவட்டத்தில் 96 பள்ளிகளை சேர்ந்த 9,180 மாணவ -மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
இன்று காலை ஆசிரியர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அமைச்சர் சு.முத்துசாமி விரிவுபடுத்தப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பல குழந்தைகள் காலையில் உணவருந்தாமல் பள்ளிக்கு வருகின்றனர். இது பல விளைவுகளை ஏற்படுத்தும். காலை உணவை கொடுத்து அனுப்பும் அளவிற்கு பல குடும்பங்கள் பணிச்சுமையின் காரணமாக முடியாமல் போகின்றன.
இதனால் குழந்தைகள் பள்ளிக்கு வராத நிலை உள்ளது. அவர்களது உடல்நிலை இதையெல்லாம் மனதில் வைத்து சில இடங்களில் முதல்-அமைச்சர் கவனத்திற்கு வந்தது. நேரடியாகவும் அவர் பார்த்தார்.
குழந்தைகளின் உடல் நிலை பாதுகாக்கவும் அவர்களின் குடும்பத்தாருக்கு சுமையை குறைப்பதற்காகவும் மாணவ-மாணவிகள் பள்ளியில் வருவதை அதிகரிப்ப தற்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்- அமைச்சர் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தமாக 2-ம் கட்டமாக இன்று இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அத்தனை பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
மாநகராட்சி எல்லைக்குள் இருக்கின்ற மாநகராட்சி அரசு பள்ளிகளில் இந்த திட்டம் 32 பள்ளிகளில் கூடுதலாக தொடங்கப்ப ட்டுள்ளது.
அதில் 5 ஆயிரத்து 793 மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள். இந்த வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் குழந்தை கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டு வதாக அமைந்திருக்கிறது.
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்படு த்தப்பட்டு வருகிறது.
மற்ற மாநிலங்களை சேர்ந்த முதல்-அமைச்சர் களும் இந்த திட்டம் பாராட்டும் அளவிற்கு அமைந்துள்ளது. பெற்றோ ர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் நல்ல வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சில பிரச்சனைகள் இருக்கின்றன. அவ ர்களுக்கு கை கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்ற காரண த்தினால் 6 முதல் 12 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உய ர்கல்வி வருகின்றபோது மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்ப தற்கான உதவித்தொகை திட்டத்தை முதல் - அமைச்சர் மாணவிகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
காலை உணவு திட்டம், ஆயிரம் ரூபாய் திட்டம் இதையெல்லாம் பார்க்கும் போது பள்ளிகளில் சேர்கி ன்ற மாணவர்களின் எண்ணிக்கை அரசு பள்ளி களின் படிப்பு, கல்லூரிக ளில் சேர்கின்ற மா ணவிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்து இருக்கின்றது.
இந்த திட்டம் நல்ல நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டி ருக்கிறது. மற்ற மாநிலங்க ளோடு தமிழ்நாடு போட்டி யிட்டு அதிகமான மாண வர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற சிவில் தேர்வுகளை வெற்றி பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.
இப்படி பல திட்டங்கள் மாணவர்களை நோக்கி கொண்டு வரப்ப ட்டுள்ளன. மகளிர்க்கான உரிமை தொகை ஒரு கோடி குடும்பத்திற்கு கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார்.
அதில் என்ன குறைபாடுகள் இருந்தாலும் அதை சரி செய்ய முதல்-அமைச்சர் தயாராக இருக்கின்றார். சேதமடைந்த அரசு பள்ளிகள் கட்டிடங்களை சீரமைக்க கணக்கெடுத்து வருகின்றோம்.
அத்திக்கடவு -அவிநாசி திட்டம் 106.8 கிலோமீட்டர் நீளத்திற்கு முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. 83 கிளைகள் இருக்கின்றன. 1045 குளங்களுக்கு இணைப்பு வழங்கப்ப ட்டுள்ளது.
அதற்கான சோதனை நடந்து வருகிறது. இந்த பணிகள் நடந்து வரும்போது தேதி விரைவில் அறிவிக்க ப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகிற 25, 26-ந் தேதி வருகிறார்.
- இதற்காக சரளையில் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஈரோடு:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகிற 25, 26-ந் தேதி வருகிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
வருகிற 25-ந் தேதி திருப்பூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டிக்கு வருகிறார்.
அங்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து ஈரோடு காலிங்கராயன் இல்லத்துக்கு வந்து இரவு ஓய்வு எடுக்கிறார்.
மறுநாள் 26-ந் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை சரளை அருகே நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் சோலார் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து கட்டி முடிக்கப்பட்ட கனிமார்க்கெட் ஜவுளி சந்தை வளாகம், காளை மாட்டு சிலை அருகே மாநகராட்சியின் வணிக வளாகம் உள்ளிட்ட முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார்.
விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இதற்காக சரளையில் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு விழா மேடை பயனாளிகள் அமரும் இடம் பொதுமக்கள் கட்சியினர் பங்கேற்கும் வளாகம், வாகன நிறுத்தம், முக்கிய பிரமுகர்கள் வாகன நிறுத்தம், சுகாதார வளாகங்கள் போன்றவை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளை அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, குறிஞ்சி. சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்