search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The court staff"

    • இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது
    • பேச்சு வார்த்தை க்கு பிறகே பொருட்களை ஊழியர்கள் ஜப்தி செய்து எடுத்துச்செல்வார்களா? என்பது தெரியும்.

    கோவை, பிப். 7-

    சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது39). லேத் பட்டறை தொழிலாளி.

    இவர் கடந்த 5-8-2011-ம் ஆண்டு தனது சகோதரர் முரளி கிருஷ்ணன் (38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வால்பாறையில் உள்ள சோலையார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வனத்துறை வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில் முரளி கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

    இந்த விபத்து வழக்கில் உரிய இழப்பீடு வழங்க கோரி சத்தியமூர்த்தி மனைவி சுகந்தி சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் சத்தியமூர்த்திக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.20 லட்சத்து 40 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் ஒரு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

    இதேபோல் முரளி கிருஷ்ணனுக்கு ரூ.20 லட்சத்து 11 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என சேலம் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி அரசு தரப்பில் இருந்து 50 சதவீத இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

    மீதமுள்ள தொகையை வழங்க கோரி பாதிக்கப்ப ட்டவர்கள் சார்பில் கோவை மாவட்ட 4-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு 2020-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ 34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கோவை கோர்ட்டு அமீனா மருதையன், சேலம் கோர்ட் அமீனா சண்முகம் ஆகியோர் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தனர்.

    அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 1 கார், 3 ஜீப், 25 கம்ப்யூட்டர் போன்ற ரூ 34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்வ தற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். கோர்ட்டு ஊழி

    யர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடு

    பட்டனர். பேச்சு வார்த்தை க்கு பிறகே பொருட்களை ஊழியர்கள் ஜப்தி செய்து எடுத்துச்செல்வார்களா? என்பது தெரியும்.

    ×