search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The farmer died"

    • வேம்பத்தி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு ஆண் பிணம் கிடந்தது.
    • பிணமாக கிடப்பது தேவேந்திரன் என தெரிந்தது.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி மலைக்கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 45). விவசாயம் செய்து வந்தார்.

    இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் அவர் சில நேரங்களில் கீழே விழுந்து கிடப்பார் எனவும் கூறப்ப டுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவேந்திரன் வழக்கம் போல் ேவலைக்கு சென்றார். இதையடுத்து அவரது மனைவி கலாமணி அவருக்கு உணவு கொடுத்து விட்டு வந்தார்.

    இரவு நீண்ட நேரமாகியும் தேவே ந்திரன் வீட்டுக்கு வர வில்லை. இதை தொடர்ந்து நேற்றும் அவர் வீட்டுக்கு வரவில்லை.

    இதையடுத்து அவரது மனைவி கலாமணி மற்றும் அவரது உறவினர்கள் அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் கலாமணி அங்கு சென்று பார்த்தார். அப்போது பிணமாக கிடப்பது அவரது கணவர் தேவேந்திரன் என தெரிந்தது.

    இது குறித்து போலீ சாருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    இதை தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் தேவேந்தி ரன் வேம்பத்தி ஏரியில் மீன் பிடித்து கொண்டு இருந்த போது தண்ணீரில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பழனிசாமி தோட்டத்து கிணற்றில் கால் தவறி விழுந்தார்.
    • தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஓட்டக்குட்டை ரோடு கோழிக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (43). விவசாயி. இவரது தோட்டத்தில் 50 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.

    இந்நிலையில் பழனிசாமி தோட்டத்து கிணற்றில் மோட்டார் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது கால் தவறி அவர் கிணற்றில் விழுந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 4 மணி நேரமாக போராடி கயிறு கட்டி பழனிசாமியை பிணமாக மீட்டனர்.

    இறந்த பழனிசாமிக்கு ரேவதி என்ற மனைவியும், 7 வயதில் மகனும் உள்ளனர். இதனையடுத்து சத்தியமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் முன்பு இருந்த மாமரத்தின் கிளைகள் அதிகளவில் படர்ந்து இருந்ததை பார்த்தார்.
    • திடீரென எதிர்பாராத விதமாக கிருஷ்ணசாமி மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    கோவை,

    மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 42). விவசாயி.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டின் முன்பு இருந்த மாமரத்தின் கிளைகள் அதிகளவில் படர்ந்து இருந்ததை பார்த்தார். அவற்றை வெட்ட முடிவு செய்தார்.உடனே மரத்தின் மீது ஏறி மரகிளைகளை வெட்டினார்.

    அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கிருஷ்ணசாமி மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கிருஷ்ணசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

    ×