என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "The maximum recorded"
- ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் 2.30 மணி முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
- சாலைகளிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. திடீரென பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. ஆனால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் 2.30 மணி முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மதியம் இடியுடன் கூடிய கன மழை பெய்து தொடங்கியது. சுமார் 45 நிமிடம் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.
சாலைகளிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. திடீரென பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. பின்னர் தொடர்ந்து மாலை வரை சாரல் மழை பெய்து.
இதுபோல் கொடுமுடி மட்டும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 27.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதே போல் சென்னிமலை, பெருந்துறை, கொடிவேரி, குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், கோபி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
மொடக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அவல்பூந்துறை, அரச்சலூர், 46 புதூர், நஞ்சை ஊத்துக்குளி, லக்காபுரம் போன்ற பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கியது.
வெண்டிபாளையம், சாவடிப்பாளையம், கேட்புதூர் உள்ளிட்ட ரெயில்வே நுழைவுப் பாலங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கொடுமுடி - 27.60, சென்னிமலை - 22, ஈரோடு - 14, பெருந்துறை - 12, மொடக்குறிச்சி - 10.20, கொடிவேரி - 9.20, குண்டேரி பள்ளம் - 9, கோபி - 6.20, பவானிசாகர் - 4.20, வரட்டு பள்ளம் - 3.60, கவுந்தப்பாடி - 2, பவானி -1.60