search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirthavari"

    • பன்னீராயிரம் திருப்பணி யாரங்கள் சமர்ப்பிக்கப்படும்.
    • நம்மாழ்வார் பரமபதம் செல்லும் ஒரு முக்தன் வேடத்தில் இருப்பார்.

    திருவாய்மொழியின் கடைசி பதிகத்தில், நம்மாழ்வார் மோட்சத்துக்கு செல்லும் வழியையும், அங்கே தமக்குக் கிடைத்த வரவேற்பையும் பாடியிருக்கிறார். இந்த உற்சவத்தை நம்மாழ்வார் மோட்ச உற்சவம் என்பார்கள். அன்று பெருமாள் வழக்கம்போல் புறப்பட்டு வந்து சந்திர புஷ்கரணியில் தீர்த்தம் சாதித்து, தீர்த்தவாரி நடத்தி, திருமாமணி மண்டபம் சேர்வார். பிறகு திருமஞ்சனம் கண்டருள்வார். அன்று அவருக்கு பன்னீராயிரம் திருப்பணி யாரங்கள் சமர்ப்பிக்கப்படும்.

    நம்மாழ்வார் பரமபதம் செல்லும் ஒரு முக்தன் வேடத்தில் இருப்பார். கிரீடம் முதலான திருவாபரணங்கள் இல்லாமல், பட்டு பீதாம்பரம் இல்லாமல், வெள்ளை உடுத்தி, பன்னிரு திருநாமம் சாற்றி, துளசி மாலையும் தரித்து, சேவை சாதிப்பார். இரண்டு அர்ச்சகர்கள், தங்கள் சரீரத்தைப் போர்வையால் போர்த்திக் கொண்டு ஆழ்வாரை திருக் கரங்களில் எழுந்தருளப் பண்ணிக் கொள்வார்கள்.

    சத்ர சாமரங்கள் அவருக்குப் பிடிக்கப்படும். மோட்சத்துக்கு செல்லும் அர்ச்சிராதி மார்க்கத்தை (ஒளி வழியை) விவரிக்கும், "சூழ் விசும்பு'' என்ற ஒன்பதாம் திருவாய்மொழி சேவிக்கப்படும். நம்மாழ்வார் திருமேனியை எடுத்துச் சென்று பெருமாளின் திருவடியில் வைப்பார்கள்.

    அங்கே, திருவாய் மொழியின் கடைசி பதிகமான `முனியே நான்முகனே முக்கண்ணப்பா' என்ற பதிகம் பாடப்படும். ஆழ்வாரின் மீது திருத்துழாய் (துளசி) வைத்துக்கொண்டே இருப்பார்கள். ஆழ்வாரை துளசியால் மூடிவிடுவார்கள். இந்தப் பதிகம் பூர்த்தியானவுடன், பெருமாள் ஆழ்வாருக்கு தம்முடைய கஸ்தூரி திருமண்காப்பையும் மாலையையும் அருளுவார்.

    அதற்கு பிறகு, ''எங்களுக்கு ஆழ்வாரை கொடுத்தருள வேண்டும்'' என்று பிரார்த்தனை செய்ய, மூடியிருந்த துளசியை நீக்கிவிட்டு, மறுபடியும் ஆழ்வாரை யதாஸ்தானம் செய்ய, கைகளில் ஏந்திக் கொள்வார்கள். மதுரகவிகளின் கண்ணி நுண்சிறுத்தாம்பு என்கின்ற பாசுரம் சேவையாகும்.

    பெருமாள் திருமாமணி மண்டபத்தில் இருந்து சன்னதிக்குப் புறப்படும்போது பனிக்காக போர்வை சாத்திக்கொண்டு விலாமிச்சை வேர் சப்பரத்தில் எழுந் தருளுவார். மல்லாரி என்கின்ற ராகம் வாசிக்கப்படும். ஒய்யார நடைபோடுவார். அப்பொழுது பலவிதமான வாத்தியங்கள் இசைக்கப்படும். கடைசியாக வாசிக்கப்படுவது வீணை. இந்த வாத்தியத்துடன் நாழி கேட்டான் வாசலில் இருந்து படியேற்றம் ஆகி சன்னதிக்குச் செல்வார்.

    • தை அமாவாசையை முன்னிட்டு கடல் தீர்த்தவாரி நடந்தது. புதுவை கடற்கரையில் குடியரசு தினவிழாவுக்காக மேடைகள், தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தை அமாவாசையையொட்டி புதுவை கடற்கரையில் பொது மக்கள் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    தை அமாவாசையை முன்னிட்டு கடல் தீர்த்தவாரி நடந்தது.

    புதுவை கடற்கரையில் குடியரசு தினவிழாவுக்காக மேடைகள், தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு தை அமாவாசை தீர்த்தவாரி தலைமை செயலகம் எதிரே நடந்தது.

    வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், லாஸ்பேட்டை சிவ சுப்பிரமணியர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன், சுந்தர சபரீஸ்வரர் கோவில், மணக்குளவிநாயகர், காமாட்சி அம்மன், சுந்தரவினாயகர், கவுசிக பாலசுப்பிரமணியர், தண்டுமுத்துமாரியம்மன், முல்லை நகர் உலகநாயகி அம்மன் உட்பட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டன.

    அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தை அமாவாசையையொட்டி புதுவை கடற்கரையில் பொது மக்கள் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்றிலும் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    • வில்வ இலை, விபூதி உள்ளிட்ட 32 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்.
    • தீர்த்தவாரி நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி ப.கொந்தகையில் உள்ள பெரியநாயகி அம்பாள் உடனுறை பஞ்சவனநாதர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆனந்த நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்மையாருக்கு வில்வ இலை,விபூதி,திரவிய பொடி,மஞ்சள்,அரிசி மாவு உள்ளிட்ட 32 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக, ஆனந்த நடராஜ மூர்த்தி,சிவகாமி அம்மையாருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    இதேபோல், திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோவில், திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில், சியாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.

    • மானாமதுரை வைகை ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் சுவாமி, அம்பாள் உற்சவர் தனிபல்லக்கில் கொண்டு வரப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றுகரையில் பிரசித்தி பெற்ற ஆனந்த வல்லி சோமநாதஸ்வாமி கோவில் உள்ளது.

    மற்றொரு கரையில் வீர அழகர் கோவில் உள்ளது. 2 கோவில்களில் ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது.நேற்று ஆடிவிழாவில் முக்கிய விழாவான ஆடித்தபசுகாட்சி நடந்தது. பல ஆண்டுகளுக்கு பின்பு ஆடிவிழாவில் கோவில் முன்பு உள்ள வைகைஆற்றில் தண்ணீர் சென்றதால் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சுவாமி, அம்பாள் உற்சவர் தனிபல்லக்கில் கொண்டு வரப்பட்டது. மஞ்சள், பால், வைகை தீர்த்தமிட்டு அபிஷேகம், தீர்த்தவாரி, தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    இதேபோல் வீர அழகர்கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு சுந்தரபுரம் கடை வீதி வியாபாரிகள் சார்பில் நடந்த விழாவில் சுந்தரராஜபெருமாள் பூபல்லக்கில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    ×