என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thirukalyana Utsavam"
- ஆண்டாள் கோவில் 108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.
- ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் சிறப்பு வாய்ந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந் துள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திரத்தன்று நடக்கும் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் சிறப்பு வாய்ந்தது.
பங்குனி உத்திர நாளன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு விசேஷ அலங்காரத்தில் ஆண்டாள் ரெங்க மன்னார் சன்னதியில் வீற்றியிருந்தனர். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு ரிஷப லக்னத்தில் கொடியேற்று விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் சுதர்சனம் பட்டர் கொடியேற்றி கொடிமரத்திற்கு அபிஷேகம் கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜைகளை நடத்தி வைத்தார்.
தொடர்ந்து பூஜையை உடனிருந்து செய்த ரங்கராஜ் என்ற ரமேஷ் பட்டர், சுதர் சன பட்டர், ஐகிரி வாசன் பட்டர், கோபி பட்டர், முத்து பட்டர் சிறப்பாக பூஜைகள் செய்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள், ரெங்க மன்னாரை தரிசித்தனர்.
இதனைத் தொடர்ந்து வருகிற 25-ந்தேதி இரவு 7 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் கோவில் முன்பு உள்ள பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் நடைபெறுகிறது .
திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு ஆண்டாளும் ரெங்கமன்னாரும் காலை மற்றும் இரவு வேலைகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தைப்பூச தேர் திருவிழா.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி காலை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு சுவாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27 -ந்தேதி பரிவேட்டை, 28-ந்தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சுவாமி உலா காட்சி நடைபெறும்.
29-ந்தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக காலை 7 மணிக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், சாமி ரத ஆரோகணமும், காலை 10 மணிக்கு மேல் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
அன்று இரவு மகா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். 30-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா உடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.
- திருத்தளிநாதர் கோவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
- தென்மாபட்டு சோழிய வெள்ளாளர் உறவின் முறையினர் செய்திருந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி பெருவிழா நடைபெற்று வருகிறது.
கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் நாள்தோறும் சுவாமி- அம்பாள் அன்னம், ரிஷபம், சிம்மம், குதிரை போன்ற பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வெள்ளி கடகத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
5-ம் நாள் திருவிழாவில் திருத்தளிநாதர் சுவாமிக்கும், சிவகாமி சுந்தரி அம்பா ளுக்கும் திருமண உற்சவம் நடைபெற்றது. சுவாமி சார்பில் சிவாச்சாரியார்கள் அம்பாளுக்கு திருமா ங்கல்யம் அணிவித்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருமணமான பெண்கள் புது தாலி மாற்றிக்கொண்டனர்.
இதில் குன்றக்குடி தம்பிரான் சுவாமிகள், தலைவர் நாகராஜன் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல் முதலிய பொருட்கள் வழங்கப்பட்டது.
விழா விற்கான ஏற்பாடுகளை 5-ம் நாள் மண்டகப்படி திருப்பத்தூர் தம்பிபட்டி தென்மாபட்டு சோழிய வெள்ளாளர் உறவின் முறையினர் செய்திருந்தனர்.
- கரூர் வெங்கடரமண சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது
- இதை தொடர்ந்து நாளை காலை தேர்த்திருவிழா நடக்க இருக்கிறது.
கரூர்:
கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாந்தோன்றி மலை வெங்கடரமண சுவாமி கோவிலில் கடந்த 24ந் தேதி தேர்த் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் வெள்ளி கருட சேவை, கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நாளை காலை தேர்த்திருவிழா நடக்க இருக்கிறது. அதனை தொடர்ந்து தெப்பத்தேர் உற்சவம், வெள்ளி கருடசேவை, வெங்கடரமண சுவாமி கோவிலில் பல்லாக்கு, ஊஞ்சல் உற்சவம் மற்றும் புஷ்ப யாகம் நடைபெற உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்