என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tiger movement"
- கடந்த சில நாட்களுக்கு முன் புலி இரவில் வந்து ஆடு மற்றும் பசு மாட்டை கடித்து குதறியது.
- தோட்ட தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண ஏற்பாடு செய்தார்கள்.
திருவட்டார்:
பேச்சிப்பாறை-சிற்றாறு வனப்பகுதியில் புலி நடமாடுவதாக அந்த பகுதி மக்கள் கூறியதையெடுத்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புலி இரவில் வந்து ஆடு மற்றும் பசு மாட்டை கடித்து குதறியது.
இதனால் மேலும் அச்சம் அடைந்த வனப்பகுதி மக்கள் தோட்ட தொழிலாளர்கள் ஆகியோர் இடையே மீண்டும் அதிகாலை வேலைக்கு செல்வதற்கு மக்கள் மத்தியில் புலியின் நடமாட்டத்தை அறிந்து பெரும் அச்சம் அடைத்தனர். வனத்துறை ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆலோசனைப்படி சுமார் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி புலியின் நடமாட்டத்தை தீவிரமாக இரவு பகலாக கண்காணித்து வந்தனர். புலியின் உருவம் கேமராவில் பதியவில்லை. இதையடுத்து வனத்துறையினர் மோப்ப நாயை வரவழைத்து புலியை தேடினார்கள். ஆனால் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை.
அரசு ரப்பர் கழகத்தில் வேலைக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்கள் புலியை பிடித்தால் தான், அதிகாலையில் ரப்பர் பால் வடிப்பு தொழிலுக்கு செல்ல முடியும், இல்லை என்றால் வேலைக்கு செல்ல மாட்டோம் என்று ஆண்களும், பெண்களும் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.
இதனால் அரசுக்கு தினமும் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து தோட்ட தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண ஏற்பாடு செய்தார்கள். தோட்ட தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில் வனத்துறையினர் பல்வேறு விழிப்புணர்வை தோட்ட தொழிலாளர்களிடம் ஏற்படுத்தினார்கள்.
அரசு ரப்பர் கழக தோட்ட தொழிலாளர்களிடம் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அதிகாலையில் பால் வடிப்பு தொழிலுக்கு தோட்ட தொழிலாளர்கள் செல்வதற்கு முன், வனத்துறை ஊழியர்கள் புலியின் நடமாட்டத்தை பார்த்து சென்ற பிறகு தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்வது என்றும், அதிகாலை வேலைக்கு செல்வதை தவிர்த்து சற்று தாமதமாக பணிக்கு செல்வது என்றும், தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு அருகில் அதிக மின் விளக்குகள் மாட்டுவது என்றும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் ஆனது. அதன் பிறகு இன்று பால் வடிப்பு தொழிலுக்கு தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு சென்றார்கள். அதேவேளையில் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் இரவு பகலாக தீவிர கண்காணித்து வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- 10 நிமிடத்திற்கும் மேலாக புலி ஒன்று அப்பகுதியில் உலா வந்த வண்ணம் இருந்துள்ளது.
- புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியை ஒட்டிய வனப்பகுதி தமிழ்நாடு கர்நாடகாவை இணைக்கும் ஒரு முக்கிய வனப்பகுதியாக உள்ளது.
இந்த வனப்பகுதியில் அதிகப்படியான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன.
காட்டு எருமை, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் அடிக்கடி சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவது வாடிக்கையான ஒன்று.
ஆனால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டும் வாழக்கூடிய புலியின் நடமாட்டம் கோத்தகிரி கோடநாடு வனப்பகுதியில் தற்போது தென்பட்டுள்ளது.
நேற்று மாலை அப்பகுதியில் நிலஅளவை பணிசெய்து கொண்டிருந்த ஊழியர்கள் பணிமுடிந்து வரும் போது சுமார் 10 நிமிடத்திற்கும் மேலாக புலி ஒன்று அப்பகுதியில் உலா வந்த வண்ணம் இருந்துள்ளது.
இதனை ஊழியர் ஒருவர் தனது செல்போன் காமிராவில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ அந்த பகுதியில் பரவி வருகிறது. புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் தொடா்ந்து புலி நடமாடுகிறது.
- புலி சுவரில் ஏறி உள்ளே குதித்து வளாகத்துக்குள் செல்வது கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.
ஊட்டி
தமிழக எல்லையான பாட்டவயலை அடுத்து கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்துக்கு உட்பட்ட சீரால் குடுக்கி கிராமத்தில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் தொடா்ந்து புலி நடமாடுவதாக அந்த பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனா்.
இதை உறுதி செய்யும் வகையில், வனபகுதியில் இருந்து இரவு வந்த புலி சாலையை கடந்து அங்குள்ள வணிக நிறுவனத்தின் மதில் சுவரில் ஏறி உள்ளே குதித்து வளாகத்துக்குள் செல்வது அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் புலியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என்றும், தங்களுக்கு வன விலங்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினா்.
- ஊட்டி ஹில் மௌண்ட் பகுதியில் 2 பசு மாடுகளை வனவிலங்கு தாக்கியதில் படுகாயம் அடைந்தது.
- வனவிலங்குகளை கண்காணிக்கவும், பொதுமக்களின் நலன்கருதியும் இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் மார்லி மந்து ஏரி பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்ட அந்த பகுதி மக்கள் அவர்களுடைய செல்போனில் வீடியோ எடுத்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் ஊட்டி வடக்கு வனச்சரக உட்கோட்டம் வனச்சரகர்கள் மார்லி மந்துஅணை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட்டனர்
அதனைத் தொடர்ந்து ஊட்டி ரோஸ் மௌண்ட் அருகில் ஹில் மௌண்ட் பகுதியில் நேற்று இரண்டு பசு மாடுகளை வனவிலங்கு தாக்கியதில் படுகாயம் அடைந்தது.
அதனை கண்டறியும் விதமாக ஊட்டி வடக்கு வனச்சரக உட்கோட்டம் வனச்சரகர் ரமேஷ் தலைமையில் இன்று 02 கண்காணிப்பு கேமராக்களை அந்தப் பகுதியில் பொருத்தினர்...
மேலும் வனவிலங்குகளை கண்காணிக்கவும், பொதுமக்களின் நலன் கருதியும் இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது .வனவிலங்குகள் அந்த பகுதியில் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டரியவும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து வனச்சரகர் தெரிவிக்கையில் மார்லி மந்து பகுதியில் தினமும் கண்காணிப்பு பணியில் வனத்துறை ஈடுபட்டு வருவதாகவும் கால்நடைகளை அணைப்பகுதியில் மேய்க்க வேண்டாம் என கேட்டு கொண்டார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்