search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Transport Change"

    • முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றப்படும்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    மதுரை

    மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூல கத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதை யொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி நாளை விழா நடைபெறும் நத்தம் சாலை யில் ஐ.ஓ.சி. ரவுண்டானா சந்திப்பு முதல் ஆத்திகுளம் சந்திப்பு வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகின்றது. இப்பகுதிக்கு ஐ.ஓ.சி. ரவுண்டானா, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு, தாமைரைத்தொட்டி, புதூர், மூன்றுமாவடி வழியாக ஐயர்பங்களா சந்திப்பு சென்று தங்கள் பகுதிக்கு செல்லலாம். அதுபோல நத்தம் ரோட்டிலிருந்து நகர் நோக்கி வரும் வாகனங்கள் மூன்று மாவடி, புதூர் வழியாக நகரின் உட்பகுதிக்கு செல்லலாம். காலை 9 மணி முதல் கப்பலூர் சந்திப்பி லிருந்து ரிங் ரோடு வழியாக நகர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கப்பலூர், தோப்பூர் வழியாக திண்டுக்கல் சாலைக்கு செல்லவேண்டும். காலை 9 மணி முதல் கப்பலூர் சந்திப்பிலிருந்து ரிங் ரோடு வழியாக நகர் நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம் வழியாக மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்கு செல்ல வேண்டும்.

    அருப்புக்கோட்டை, தூத்துக்குடி பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் வளையங்குளம், சாம நத்தம், பொட்ட பாளையம் மற்றும் கீழடி வழியாக ராமேசுவரம் சாலையினை மாட்டுத் தாவணி செல்லவேண்டும்.

    தூத்துக்குடி, அருப்புக் கோட்டை சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு கனரக வாகனங்களும் கப்பலூர் செல்லவேண்டும். சென்று திண்டுக்கல் சாலை வழியாக செல்லவேண்டும்.

    எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் வாகன கொள்ளப் படுகிறது.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரம் வரை எவ்வித போக்குவரத்து மாற்றம் செய்யப்படமாட்டாது.
    • அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது.

    சென்னை:

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களையொட்டி மாலை நேரத்தில் மெரினா கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு இன்று முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரம் வரை எவ்வித போக்குவரத்து மாற்றம் செய்யப்படமாட்டாது.

    கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு பாரதி சாலை-பெல்ஸ் ரோடு-வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கை அடையலாம். ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை-பாரதி சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் ரோடு சென்று அண்ணாசாலை அல்லது உழைப்பாளர் சிலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம். ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் நேராக கண்ணகி சிலைக்கு செல்ல அனுமதிக்கப்படாது.

    அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. (பெல்ஸ் சாலை ஓரு வழிப்பாதையாக மாற்றப்படும்)

    நேப்பியர் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாமல் நேராக கண்ணகி சிலை சென்று வலது புறம் திரும்பி பாரதி சாலை- பெல்ஸ் ரோடு-வாலாஜா சாலை வழியாக அண்ணா சாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.

    பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கவும், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. (விக்டோரியா சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அண்ணா சிலை அருகே, வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது.
    • தொழிலாளர் சிலையில், வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது.

    சென்னை பெருநகர போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (10-ந்தேதி), 14, 23, 24 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டி நடைபெறும் நாட்களில் போக்குவரத்தினை கட்டுப்படுத்த, போட்டி முடிவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    * போர் நினைவிடத்தில் இருந்து வெளிச்செல்லும் அனைத்து வாகனங்களும் வாலாஜா பாயின்ட் வழியாக கொடி மரச் சாலை வழியாக அவர்களது இலக்கை அடையலாம்.

    *காந்தி சிலையில் இருந்து உழைப்பாளர் சிலை நோக்கி உள்வரும் வாகனங்கள் அனைத்தும் காந்தி சிலை அருகே திருப்பி விடப்பட்டு ஆர்.கே.சாலை வழியாக சென்று அவர்களது இலக்கை அடையலாம்.

    * தொழிலாளர் சிலையில், வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. மாறாக கண்ணகி சிலையை நோக்கி திருப்பி விடப்படும்.

    * அண்ணா சிலை அருகே, வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது, வெலிங்டன் பாயின்ட் மற்றும் பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும்.

    * பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில், வாகனங்கள் பெல்ஸ் சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது மற்றும் கண்ணகி சிலை (அல்லது) ரத்னா கபே சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும்.

    * பேட்டா பாயிண்டில், வெளிச்செல்லும் வாகனங்கள் "யு" திருப்பம் செய்ய அனுமதியில்லை, அதற்கு பதிலாக, வாகனங்கள் வெலிங்டன் பாயிண்ட் வரை செல்ல அனுமதிக்கப்படும், அங்கிருந்து வாகனங்கள் வலதுபுறம் டேம்ஸ் ரோடு சாலையை நோக்கி ஸ்பென்சர்ஸ் சந்திப்பு நோக்கி நேராக செல்லலாம். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×