என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » trending in twitter
நீங்கள் தேடியது "Trending In Twitter"
தமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியா கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் பெயர் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது. #BJP #TamilisaiSoundararajan #Sophia #சோபியா
சென்னை:
இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சோபியா கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கைது நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
பாசிச பாஜக_ஆட்சி ஒழிக, சோபியா, பாசிச பாஜக ஒழிக ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகின்றன. இந்த ஹேஷ்டேக்குகளில் பாஜகவுக்கு எதிராக ஏராளமானோர் டுவிட் செய்துள்ளனர். சோபியாவை அவசர அவசரமாக கைது செய்த போலீசார், பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எஸ்.வி.சேகரை நீதிமன்றம் உத்தரவிட்டும் கைது செய்யாதது ஏன்? என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் சோபியாவுக்குப் பின்னால் யாரோ இருந்து இயக்குவதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர். #BJP #TamilisaiSoundararajan #Sophia #சோபியா
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும் சோபியா என்ற பெண், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார். இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சோபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார். ஆனால் சோபியா மறுத்துவிட்டார்.
இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சோபியா கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கைது நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
பாசிச பாஜக_ஆட்சி ஒழிக, சோபியா, பாசிச பாஜக ஒழிக ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகின்றன. இந்த ஹேஷ்டேக்குகளில் பாஜகவுக்கு எதிராக ஏராளமானோர் டுவிட் செய்துள்ளனர். சோபியாவை அவசர அவசரமாக கைது செய்த போலீசார், பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எஸ்.வி.சேகரை நீதிமன்றம் உத்தரவிட்டும் கைது செய்யாதது ஏன்? என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் சோபியாவுக்குப் பின்னால் யாரோ இருந்து இயக்குவதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர். #BJP #TamilisaiSoundararajan #Sophia #சோபியா
×

X