search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "truck smuggling"

    • ரேசன்அரிசி கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லாரியில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே காட்டுஎடையார் கிராமத்தில் ரேசன்அரிசி கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரிஷிவந்தியம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் போலீசார் கோபி, பாலாஜி, இளையபெருமாள் ஆகியோர் காட்டுஎடையார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மினி லாரி டிரைவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் வடதொரசலூரை சேர்ந்த மணிகண்டன்(31) என்பதும் ரேஷன் அரிசி மூட்டைகளை வெளியூருக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண் டனை கைது செய்த போலீசார் , மினி லாரியுடன் ரேசன் அரிசி மூட்டைகளை ைகப்பற்றினர். பின்னர் அவை விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

    நெகமம் அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள தேங்காயுடன் கூடிய லாரியை கடத்தி சென்ற கும்பலை ஜி.பி.எஸ். கருவி மூலம் போலீசார் கைது செய்தனர்.
    நெகமம்:

    சென்னை போரூரை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 39). லாரி உரிமையாளர்.

    இவரிடம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மனோகர் (30) டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 11-ந் தேதி மனோகர் கோவைக்கு லோடு ஏற்ற லாரியில் வந்தார். பொள்ளாச்சியை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தில் இருந்து 10½ டன் தேங்காயை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டார்.

    இரவு 9.30 மணி அளவில் நெகமம் அருகே சென்ற போது ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் லாரியை வழி மறித்து ஆயுதங்களை காட்டி மனோகரனை மிரட்டினர்.

    பின்னர் மனோகரனை காரில் ஏற்றிக் கொண்டு லாரியை ஓட்டிச் சென்றனர். கார் பல்லடம்-திருச்சி ரோட்டில் சென்ற போது மனோகரனை கீழே தள்ளி விட்டு கும்பல் தப்பிச் சென்றது. அதிர்ச்சியடைந்த மனோகரன் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்று லாரி உரிமையாளர் பிரகாசை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறினார். அவர் போலீசில் புகார் செய்தார்.



    கடத்தி செல்லப்பட்ட லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருந்தது. அதன் மூலம் போலீசார் நடத்திய விசாரணையில் லாரி பல்லடம்-திருச்சி ரோட்டில் உள்ள ஒரு குடோனுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்ற போது அங்கு சிலர் லாரியில் இருந்து தேங்காய்களை இறக்கிக் கொண்டிருந்தனர்.

    அங்கிருந்த 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (25), ஹரிபிரசாத்(26), பொள்ளாச்சியை சேர்ந்த கோகுல் (25), மணிகண்டன் (23), அப்துல் ரகுமான் (23), சந்தோஷ்(20) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இதில் வெங்கடேஷ்குமார், ஹரிபிரசாத் ஆகியோர் டிரைவர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு பொள்ளாச்சி பகுதியில் இருந்து வெளிமாவட் டங்களுக்கு பொருட்கள் லோடு ஏற்றிச் செல்லும் விவரங்கள் தெரிந்துள்ளது.

    சமீபகாலமாக இவர்கள் வேலையில்லாமல் இருந்துள்ளனர். சம்பவத்தன்று வெங்கடேஷ்குமார் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, செலவுக்காக லாரியை கடத்தி தேங்காய்களை விற்று பணத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம் என கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து 6 பேரும் சேர்ந்து திட்டம் தீட்டி லாரியை கடத்தியதை ஒப்புக் கொண்டனர்.

    இவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள லாரி மற்றும் தேங்காய்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே லாரியை கடத்திய சென்ற கொள்ளையனை பொதுமக்கள் மற்றும் சக டிரைவர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே படவீட்டில் சிமெண்ட் ஆலை உள்ளது. இதன்அருகே ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    நேற்று இரவு இந்த லாரியை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி உரிமையாளர் ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் லாரி எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்காணித்தார்.

    அப்போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே அந்த லாரி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மற்றும் சகடிரைவர்கள் அங்கு விரைந்து சென்று லாரியை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்கள் லாரியை மீட்டு கொள்ளையனையும் குமாரபாளையத்திற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் போலீசில் அவரை ஒப்படைப்பதற்காக அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். இதைப்பற்றி கேள்விப்பட்ட டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு வந்து கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கொலையுண்ட கொள்ளையன் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×