என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "unorganized workers"
- 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
- ஆதரவும் இல்லாத அவர்களுக்கு தமிழக அரசு தான் துணையாக இருக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தீபஒளி திருநாளுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்களும், அவர்களுக்கும் கீழாக உள்ள தொழிலாளர்களும் தீப ஒளித் திருநாளைக் கொண்டாட கையில் பணமில்லாமல் தடுமாறுவது வருத்தமளிக்கிறது.
தீப ஒளிக்காக ஊக்கத்தொகை மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் விடுத்த வேண்டுகோள்கள் அரசின் செவிகளில் விழாதது ஏமாற்றமளிக்கிறது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வாரத்தில் அதிகபட்சமாக 3 அல்லது 4 நாட்கள் மட்டும் தான் வேலை கிடைக்கிறது. அதைக் கொண்டு தான் அவர்கள் வாரம் முழுவதும் வாழ்க்கை நடத்த வேண்டும்.
அதற்கே அவர்களுக்கு வருமானம் போதாது எனும் நிலையில், அவர்களால் தீப ஒளிக்காக புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வாங்குவதென்பது சாத்தியமற்ற ஒன்று. எந்த ஆதரவும் இல்லாத அவர்களுக்கு தமிழக அரசு தான் துணையாக இருக்க வேண்டும்.
புதுவையில் தீப ஒளி திருநாளையொட்டி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா 5000 ரூபாயும், அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்திருக்கிறார்.
அனைத்து செலவுகளுக்கும் மத்திய அரசை நம்பியிருக்கும் புதுவை அரசால் இதைச் செய்ய முடியும் போது தமிழக அரசால் ஏன் செய்ய முடியாது? என்ற வினா எழுகிறது. அந்த வினா மிகவும் நியாயமானது தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அமைப்பு சாராத் தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தீப ஒளி திருநாளைக் கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.
அதை நிறைவேற்றும் வகையில், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் வாயிலாக அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 வீதம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து துரைசாமி, ஆதிமூலம் கருத்துரை வழங்கினர்.
- நலவாரியத்தில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
முக்கூடல்:
முக்கூடலில் உள்ள பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய பொறுப்பாளர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மாலதி வரவேற்றார்.
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் பார்வதி, மனோன்மணி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து துரைசாமி, ஆதிமூலம் கருத்துரை வழங்கினர்.
பொறுப்பாளர்களின் கடமைகள் மற்றும் பணிகள் குறித்து வான்முகில் ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் பேசினார். பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஒருங்கிணைப்பாளர் மாரியம்மாள் பேசினார்.
இம்முகாமில் பொறுப்பாளர் தேர்வு நடைபெற்றது. நலவாரியத்தில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. பயிற்சியின் இறுதியில் ஒருங்கிணைப்பாளர் மதியழகன் நன்றி கூறினார். தொழிலாளர்கள் பலர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
- பலர் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளனர்.
- தொழிலாளர்கள் பதிவு செய்யாமல் நலத்திட்ட பயனாளிகளாக தேர்வாகாமல் உள்ளனர்.
உடுமலை:
மத்திய, மாநில அரசின் திட்டங்கள் சென்றடையச்செய்யும் வகையில் 26 வகை அமைப்புசாரா தொழிலாளர்கள் வரையறுக்கப்பட்டுள்ளனர். சிறு குறு விவசாயிகள், விவசாய கூலிகள், கட்டுமான தொழிலாளர்கள், நெசவாளர்கள், செய்தித்தாள்கள் வினியோகிப்போர் உள்ளிட்ட பலர் இதில் அடங்குவர்.
தேசிய அமைப்புசாரா தொழிலாளர் திட்டங்களில் சேர பதிவு முகாம்கள், பொது சேவை மையங்கள் வாயிலாக பலர் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளனர்.இருப்பினும்சில தொழிலாளர்கள் பதிவு செய்யாமல் நலத்திட்ட பயனாளிகளாக தேர்வாகாமல் உள்ளனர்.பதிவு செய்யாத தொழிலாளர்கள், தங்களது முழுவிபரங்களை அருகில் உள்ள பொது சேவை மையங்களில் அளித்து தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல அடையாள அட்டை பெறலாம்.
அதன் ஒரு பகுதியாக உடுமலை ஒன்றியம் ஆண்டியக்கவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்காடு பகுதியில் தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகளுக்கு நலவாரிய அட்டை வழங்கும் முகாம் நடந்தது.ஊராட்சித்தலைவர் மோகனவல்லி, துணைத்தலைவர் விஜயகுமார், ஊராட்சி செயலர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். அரசாணைக்கு பின், பிற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
- மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி. அமைப்பு சாரா தொழி லாளர்களின் தேசிய தரவுதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
- ஆதார் அடை யாள அட்டை, வங்கிக ணக்குபுத்தகம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகிய ஆவணங்கள் பதிவு செய்ய தேவைப்படும்.
கோவை:
அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவுதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கோவை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) காயத்திரி தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி. அமைப்பு சாரா தொழி லாளர்களின் தேசிய தரவுதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதற்காக www.eshram.ov.in என்ற வலைத்தளத்தின் மூலம் கட்டுமான, புலம் பெயர்ந்த, விவசாய தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், தச்சுவேலை செய்பவர்கள், கல்குவாரி, முடி திருத்துவோர். தெரு வியாபாரிகள், சிறுவியா பாரிகள், ஊரகவேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், நெசவாளர் பதிவுகள், மீனவ மற்றும் செங்கல் சூளை, தையல், சாயப்பட்டறை, பட்டு வளர்ப்பு தொழிலாளர்கள், ஓட்டுனர்கள் உள்பட 156 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை அனைத்து பொதுசேவை மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
மாநில அரசின் பல்வேறு வகையான நலவாரியங்க ளின் கீழ் பதிவு செய்து உள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் கட்டாயம் இந்த தரவு தளத்தின் கீழும் பதிவு செய்ய வேண்டும். இதில் பதிவு செய்து கொள்ள 18 வயது முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும். வருமானவரி செலுத்துபவராகவும், இ.எஸ்.ஐ., வருங் கால வைப்புநிதி பிடித்தம் செய்யும் பணியாளர்களாக வும் இருக்கக்கூடாது.
ஆதார் அடை யாள அட்டை, வங்கிக ணக்குபுத்தகம், ஆதார் எண்ணுடன் இணை க்கப்பட்ட செல்போன் எண் ஆகிய ஆவணங்கள் பதிவு செய்ய தேவைப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் தரவு தளத்துக்கு சென்று தாங்களாகவே சுயபதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பின்னர் 12 இலக்கு எண் கொண்ட அடையாள அட்டை வழங் கப்படும். இந்த அடையாள அட்டை மூலம் வேலை மற்றும் வேறு ஏதாவது காரணங்களுக்காக புலம் பெயர இருந்தாலும் அரசிடம் இருந்து பெற வேண்டிய சலுகைகளை பெற உதவியாக இருக்கும்.
மேலும் அடையாள அட்டை பெறுபவர்களுக்கு விபத்து காப்பீடு இலவசமாக செய்யப்பட்டு விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது முழு உடல் ஊனம் ஏற்பட்டாலோ ரூ.2 லட்சமும், பகுதியளவு உடல் ஊனத்துக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும். அத்துடன் மத்திய அர சால் செயல்படுத்தப்படும் தொழிலாளர் பங்களி ப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டங்கள் மூலமும் பயன்பெறலாம்.
அத்துடன் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய வேலைவாய்ப்பு இணையதளம் இந்த வலைத்தளத்தில் இணை க்கப்படுவதால் அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கு மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் வேலைவாய்ப்பை எளிதில் பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்