என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "vegetable vendor"
- போலீஸ் வாகனத்தை பார்த்ததும் காய்கறி கடை நடத்தி வந்த சல்மான் கான் பயந்துள்ளார்.
- சல்மானை கட்டிப்பிடித்து DSP சந்தோஷ் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் 14 வருடங்களுக்கு பிறகு காய்கறி வியாபாரம் செய்யும் தனது நண்பரை சந்தித்தது குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் படேல் வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சந்தோஷ் படேல் தனது போலீஸ் வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென ஒரு காய்கறி கடையில் வாகனத்தை நிறுத்த சொல்லியுள்ளார்.
போலீஸ் வாகனத்தை பார்த்ததும் காய்கறி கடை நடத்தி வந்த சல்மான் கான் பயந்துள்ளார். அப்போது என்னை நியாபகம் இருக்கிறதா என்று சந்தோஷ் சல்மானை பார்த்து கேட்டுள்ளார். அதற்கு தலையை அசைத்த சல்மான் உங்களை என்னால் மறக்கமுடியாது என்று தெரிவித்துள்ளார். உடனே சல்மானை சந்தோஷ் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
सलमान ख़ान से भोपाल में इंजीनियरिंग की पढ़ाई के समय मुलाक़ात हुई थी। ये हमारी भावनाओं को समझकर फ्री में सब्ज़ी दे दिया करते थे।14 साल बाद जब अचानक मिले तो दोनों बहुत खुश हुए।बुरे समय में साथ निभाने वाले को भूल जाना किसी पाप से कम नहीं।बंदे में एक दोष न हो, बंदा ऐहसान फ़रामोश न हो pic.twitter.com/FMTdOW5cBH
— Santosh Patel DSP (@Santoshpateldsp) November 10, 2024
இது தொடர்பான வீடியோவை சந்தோஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், "நான் போபாலில் பொறியியல் படிக்கும் போது கையில் காசில்லாமல் இரவு உணவு கூட வாங்க முடியாத நிலையில் இருந்தேன். அந்த சமயத்தில் தான் காய்கறி கடை நடத்தி வரும் சல்மான் கானை சந்தித்தேன். என்னுடைய நிலையை உணர்ந்து அவர் எனக்கு இலவசமாக காய்கறிகளை கொடுத்தார். ஒவ்வொரு இரவும் கத்தரிக்காயையும் தக்காளியையும் எனக்கு கொடுத்தார். அதனை சமைத்து எனது பசியை நான் போக்கிக்கொண்டேன்.
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாங்கள் எதிர்பாராத விதமாக சந்தித்தோம். இதனால் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியடைந்தோம். நம்முடைய கடினமான காலங்களில் துணை நின்ற ஒருவரை மறப்பது பாவமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.
- சிவகாசி அருகே காய்கறி வியாபாரி வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை போனது.
- இதுகுறித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சாமிநத்தம் ஜெம்நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 36). இவர் அண்ணாநகர் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கடைக்கு சென்று விட்டார். 2 மகள்கள் பள்ளிக்கு சென்று விட, மனைவியும் வீட்டை கூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மறுமணம் அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் பின்னர் பீரோவில் இருந்த 16 பவுன் நகை திருடிக்கொண்டு தப்பினர்.
வியாபாரம் முடித்து மாலையில் வீடு திரும்பிய கோவிந்தன் கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- பணம் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்ற மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்றார்.
- முனிபாண்டி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டக்குளத்தை சேர்ந்தவர் தங்கரத்தினம் (43), காய்கறி வியாபாரி. இவர் சிவகாசி பழனியாண்டவர் தியேட்டர் பகுதியில் வியாபாரம் செய்ய சென்றார். அப்போது வசந்தாதேவி (73) என்ற மூதாட்டி இவரிடம் மொச்சைக்கடலை வாங்கி உள்ளார்.
பணம் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றபோது தங்கரத்தினமும் அவர் பின்னால் சென்று நகையை பறிக்க முயன்றார். அப்போது வசந்தாதேவி, ''திருடன் திருடன்'' என்று கூச்சலிட்டார். கூச்சல் சத்தத்தை கேட்ட உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வெளிகதவை பூட்டிவிட்டனர்.
இதனால் தங்கரத்தினம் வசமாக சிக்கி கொண்டார். பின்னர் அவரை சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் ஒப்படைத்தனர். இந்த நிலையில் சிவகாசி கிழக்கு போலீஸ்காரர்கள் முனிபாண்டி மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கோர்ட்டு அழைத்து சென்று போலீஸ் நிலையத்திற்கு மீண்டும் அழைத்து வந்தனர்.
சிவகாசி-களத்தூர் சாலையில் அவர்கள் வந்த போது தங்கரத்தினம் தப்பிப்பதற்காக முனிபாண்டியின் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே சுதாரித்து கொண்ட போலீஸ்காரர் முனிபாண்டி மற்றும் பின்னால் வேறொரு இருசக்கர வாகனத்தில் வந்த மணிவண்ணன் ஆகியோர் தங்கரத்தினத்தை பிடித்தனர். உடலில் காயங்களுடன் இருந்த தங்கரத்தினம் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீஸ்காரர் முனிபாண்டி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- புதுவை தவளக்குப்பம் பூரணாங்குப்பம் மெயின் ரோடு குளக்கரை பகுதியை சேர்ந்தவர் தரணிசிங்கு.
- அதிவேகமாக ஏறி இறங்கிய போது எதிர்பாராத விதமாக கல்யாணி தவறி கீழே விழுந்தார்.
புதுச்சேரி:
வேக தடையில் ஏறி இறங்கிய போது மினி வேனில் இருந்து தவறி விழுந்த பெண் காய்கறி வியாபாரி பலியானார்.
புதுவை தவளக்குப்பம் பூரணாங்குப்பம் மெயின் ரோடு குளக்கரை பகுதியை சேர்ந்தவர் தரணிசிங்கு. இவரது மனைவி கல்யாணி (வயது65). இவர் தவளக்குப்பத்தில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தார். இவர் மினிவேனில் புதுவை உழவர் சந்தைக்கு சென்று மொத்தமாக காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம்.
அதுபோல் கல்யாணி காய்கறி வாங்க உழவர் சந்தைக்கு மினிவேனில் வந்தார். புதுவை-கடலூர் சாலையில் கோர்ட்டு வளாகம் எதிரே உள்ள வேகதடையில் மினிவேன் அதிவேகமாக ஏறி இறங்கிய போது எதிர்பாராத விதமாக கல்யாணி தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கல்யாணியை மினிவேன் டிரைவர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கல்யாணி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் புதுவை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்