என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "VEGETABLE WASTE"
- மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட் ,பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.
- உழவர் சந்தையில் சேகரமாகும் காய்கறி கழிவுகள் முறையாக அகற்றப்படவில்லை.
உடுமலை :
உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மை துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது.இந்த சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள்,பழங்கள்,இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட் ,பீன்ஸ், பட்டாணி, மேராக்காய்,உருளை மற்றும் சேனைக்கிழங்கு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.இவை அனைத்தும் புத்தம் புதிதாய் கிடைப்பதால் பொதுமக்களும் நாள்தோறும் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
இந்த சூழலில் உழவர் சந்தையில் சேகரமாகும் காய்கறி கழிவுகள் முறையாக அகற்றப்படவில்லை.அதன் வளாகத்திலேயே மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.இதனால் இட நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள்,விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.தற்போது மழை தொடங்கி உள்ளதால் கழிவுகள் தேங்காமல் தடுக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமையாகும்.எனவே உழவர் சந்தையில் தேங்கி வருகின்ற காய்கறி கழிவுகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- தினசரி காய்கறி சந்தையில் இருந்து காய்கறி கழிவுகளை எடுத்து வந்து உணவாக அளித்து வருகிறார்.
- குமார் நகர் பகுதியில் வசிக்கும் தனிநபர் ஒருவர் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
உடுமலை:
உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி ஊராட்சி உள்ளது. இந்தப் பகுதிக்கு உட்பட்ட சேகர் புரம்,குமார் நகர்,சித் தாண்டீஸ்வரர் லே-அவுட், பெதப்பம்பட்டி ரோடு,ஏரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தனிநபர் ஒருவர் காய்கறி கழிவுகளை கொட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் புகார் அனுப்பி உள்ளனர்.அதில் கூறியுள்ளதாவது:- குமார் நகர் பகுதியில் வசிக்கும் தனிநபர் ஒருவர் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வருகின்ற கால்நடைகளுக்கு உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ராஜேந்திர சாலையில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் இருந்து காய்கறி கழிவுகளை எடுத்து வந்து உணவாக அளித்து வருகிறார். அதில் இருந்து எழும் துர்நாற்றம் சுற்றுப்புற வீடுகளில் வசித்து வரும் பொது மக்கள் குழந்தைகளுக்கு உடல் ஒவ்வாமைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட நபரிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் சின்ன வீரம்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே சின்ன வீரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குமார் நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் நபர்மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
- காந்தி மார்க்கெட்டிலிருந்து தினசரி அதிக அளவு கழிவுகள் வெளியேறுகிறது.
- கழிவுகள் கொட்டப்படும் இடம் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடான நிலைக்கு மாறிவருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் காந்திமார்க்கெட் முக்கிய சந்தையாக உள்ளது. இங்கு பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
வியாபாரிகளால் வாங்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் உள்ளூர் கடைக்காரர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டிலிருந்து தினசரி அதிக அளவு கழிவுகள் வெளியேறுகிறது. ஆனால் இந்த கழிவுகள் கொட்டப்படுவதற்கு முறையான இடம் இல்லாததாலும், உடனுக்குடன் அகற்றப்படாததாலும் கோட்டைக்குளம் சாலை, தாலுகா அலுவலக சாலைகளில் ஆங்காங்கே கொட்டப்படுகிறது.
நகரில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் சாலையில் கொட்டப்படும் காய்கறி கழிவுகளில் கால்நடைகள், பன்றிகள் உணவுக்காக அதனை கிளறி சாலையின் மையப்பகுதி வரை கொண்டுவந்து விடுகிறது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கழிவுகள் கொட்டப்படும் இடம் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடான நிலைக்கு மாறிவருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிழக்கு புலிவார் ரோடு பகுதியில் வாழைக்காய் மண்டியான ஏலம் மையமும் இயங்கி வருகின்றது.
- சாலை ஆக்கிரமிப்புகளால் குறுகிப் போய் உள்ள மேற்கண்ட சாலையில் கழிவுகள் கொட்டப்படுவதால் மேலும் போக்குவரத்துக்கு கடுமையான இடையூறு ஏற்படுகிறது.
திருச்சி :
திருச்சி மாநகரின் மையப்பகுதியில் காந்தி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு காய்கறி மொத்த மற்றும் சில்லறை விற்பனை நடந்து வருகிறது. மத்திய மாவட்டங்களுக்கு இந்த மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் அருகாமையில் கிழக்கு புலிவார் ரோடு பகுதியில் வாழைக்காய் மண்டியான ஏலம் மையமும் இயங்கி வருகின்றது.
இந்த காய்கறி மார்க்கெட் மற்றும் வாழைக்காய் ஏலம் மையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தஞ்சாவூர் மெயின் ரோடு தர்பார் மேடு பகுதியில் கொட்டப்படுகிறது. ஏற்கனவே சாலை ஆக்கிரமிப்புகளால் குறுகிப் போய் உள்ள மேற்கண்ட சாலையில் கழிவுகள் கொட்டப்படுவதால் மேலும் போக்குவரத்துக்கு கடுமையான இடையூறு ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் குடிநீர் குழாய்களையும் சாலையில் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.
இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் கூறும் போது, திருச்சி காந்தி மார்க்கெட் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தினமும் 20 முதல் 30 டன் காய்கறி கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதனை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தடை இன்றி மறுசுழற்சி செய்து அப்புறப்படுத்த எடுக்க வேண்டும்.
அதிக அளவில் குப்பை வெளியேறும் பகுதியில் சிறிய அளவிலான குப்பைத் தொட்டிகள் வைப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. சிறிது நேரத்திலேயே இந்த குப்பைத்தொட்டிகள் நிரம்பி விடுவதால் திறந்த வெளியில் கழிவுகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் சாலைகளை பெரிதும் ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என தெரிவித்தார்.
மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, மறுசுழற்சி செய்ய கழிவுகளை துண்டாக்கும் எந்திரம் பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்ய கொடுத்திருக்கின்றோம். இதனால் காய்கறி கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த கூடுதல் வாகனங்கள் இயக்கப்படுகிறது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்