என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Veterinary treatment"
- தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் நாமக்கல் ஆவின் சார்பாக இலவச சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- இதில் இருக்கூர் கிரா மத்தை சேர்ந்த கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து தேவையான சிகிச்சைகளை பெற்று சென்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா இருக்கூர் பகுதியில் தமிழக அரசின் கால்நடை பரா மரிப்புத் துறை மற்றும் நாமக்கல் ஆவின் சார்பாக இலவச சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில் இருக்கூர் கிரா மத்தை சேர்ந்த கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து தேவையான சிகிச்சைகளை பெற்று சென்றனர். மொத்தம் 315 கால்நடைகள் பயனடைந்தன.
இம்முகாமில் கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், சினை பருவத்தில் உள்ள பசு, எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்ட்ல கள் செய்யப்பட்டன.
சினை பிடிக்காத கால் நடைகளுக்கான சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட் டது. 49 கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன.
மேலும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை நாமக்கல் மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் நடராஜன், திருச்செங்கோடு கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் அருண் பாலாஜி, கால்நடை நோய் புலனாய்வுத் துறை உதவி இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், ஆவின் உதவி மேலாண் இயக்குனர்கள் டாக்டர் சின்னுசாமி மற்றும் டாக்டர் முருகுசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் கபிலர்மலை கால்நடை மருந்தக கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் தனவேல், மணிவேல், செந்தில்குமார், சையது அஸ்லாம், ரமேஷ், ராஜ்குமார், சசிக்குமார் கால்நடை ஆய்வாளர் பொன்னம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சுரேஷ் மற்றும் துரைசாமி, செயற்கை முறை கருவூட்டல் பணியாளர் சதீஷ் குமார் உள்ளிட்ட கால்நடை மருத்து வக் குழுவினர் சிகிச்சை பணிகளை மேற்கொண்ட னர்.
முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை இருக்கூர் பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்க செயலர் பழனி வேல், ராமசாமி மற்றும் இருக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி உள்ளிட் டோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்