என் மலர்
நீங்கள் தேடியது "vethaagama School"
- ஆறுமுகநேரி காமராஜபுரம் பிஷப் அசரியா வேதாகம பள்ளியின் ஆண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
- விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து 60 ஏழை சிறுவர், சிறுமிகளுக்கு புத்தாடைகளும், 100 பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி காமராஜபுரம் பிஷப் அசரியா வேதாகம பள்ளியின் ஆண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
பள்ளியின் இயக்குனர் அந்தோணி அடிகளார் தலைமை தாங்கினார். ஏரியா பொருளாளர் விக்டர் ராஜா முன்னிலை வகித்தார். நற்செய்தி குழு தலைவர் ஜோனோ பர்னபாஸ் ஆரம்ப ஜெபம் நடத்தினார். முன்னாள் பொருளாளர் பாலன் தாமஸ் சிறப்பு ஜெபம் நடத்தினார். தொழிலதிபர் ஞானராஜ் கோயில்பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்திய மிஷனரி இயக்க ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். அமைப்பின் தலைவர் பாஸ்கரன், அரசு வக்கீல் சாத்ராக் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து 60 ஏழை சிறுவர், சிறுமிகளுக்கு புத்தாடைகளும், 100 பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன. மேலும் தையல் எந்திரங்கள், சிறு தொழில் செய்வோருக்கான நிதி உதவி மற்றும் 3 பேருக்கு ஆடுகளும் வழங்கப்பட்டன. விழாவில் முள்ளக்காடு தொழிலதிபர் கிறிஸ்துதாஸ், போதகர்கள் வாட்சன், மோசஸ், ஜெயபாண்டி, கிறிஸ்தவ சபை நிர்வாகி சாக்ரடீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.