search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village Administrative Officer in"

    • கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாத் பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளார்.
    • அவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

    நம்பியூர்:

    ஈேராடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத் (26). இவர் நம்பியூர் அருகே உள்ள வேம்பாண்டம்பா–ளையம் மற்றும் லாகம்பாளையம் ஆகிய இடங்களில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் துலுக்கன்தோட்டம் என்ற பகுதியை சேர்ந்த கார்த்திக் (36) என்பவர் தனது அரை ஏக்கர் நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டி விண்ணப்பித்தார். மேலும் இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாத்தை சந்தித்தார்.

    அப்போது கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாத் பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் 20 கார்த்திக்கிடம் கொடுத்து அனுப்பினர். அவர் நேற்று மாலை கொட்டக்காட்டுபாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து அருண்பிரசாத்திடம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அருண்பிரசாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

    இவர் பணியில் சேர்ந்து 2 ஆண்டுகள் இன்னும் நிறைவடையாத நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கி உள்ளார்.

    ×