என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "villagers besieged"
- சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோசமிட்டனர்
- ஆத்தூர் ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலையில் வார்டு உறுப்பினர்கள் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் 100 நாள் வேலையில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக சில பகுதி மக்களுக்கு மட்டும் தொடர்ந்து வேலை வழங்கி வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனால் வேலை வழங்கப்படாத 1, 2, 3 வார்டு பகுதிகளைச் சேர்ந்த ஆத்தூர் மேற்கு தெரு, வடக்குத்தெரு, வெள்ளாளர் தெரு, நாயுடு தெரு, கள்ளர் தெரு, ஆலம்பட்டி, அக்ரஹாரம் தெரு, மாலம்பட்டி, பத்திர ஆபிஸ் தெரு, மாதா கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோசமிட்டனர். தகவல் அறிந்து ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, லாரன்ஸ் மற்றும் ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, முருகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆத்தூர் ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலையில் வார்டு உறுப்பினர்கள் தலையீடு அதிகமாக உள்ளது.
இதனால் 100 நாள் வேலையில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. பணிக்கு வராதவர்களுக்கு வேலைக்கு வந்ததாக வருகை பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. தங்களுக்கு வேண்டப்பட்ட சிலருக்கு மட்டும் தொடர்ந்து வேலை வழங்கப்பட்டு வருகிறது. 100 நாள் வேலை பணிகளில் வார்டு உறுப்பினர்கள் தலையீடு இருக்கக் கூடாது என அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக அரசு வெளியிட்ட அறிவி ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
- சட்ட மன்றத்தில் மட்டுமல்லாது மக்கள் மன்றத்திலும் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுப்பேன் என எம்.எல்.ஏ. கூறினார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே எம்.குரும்பபட்டி, முத்து க்காமன்பட்டி, கருத்தாண்டி பட்டி, சென்னஞ்செட்டி பட்டி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகை யிட்டு அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக அரசு வெளியிட்ட அறிவி ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
மேலும் தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ.விடம் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும் என கோஷமிட்டனர். சட்ட மன்றத்தில் மட்டுமல்லாது மக்கள் மன்றத்திலும் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுப்பேன் என்றார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். அப்போது நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினாநாயகம், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் யாகப்பன், ஆதிதமிழர் மக்கள் கட்சி தலைவர் ராமன் மற்றும் கவுன்சிலர்கள் அங்கி ருந்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தான்குளத்திலிருந்து விஜயராமபுரம், அடப்புவிளை, சாமிதோப்பு, திருப்பூர் மற்றும் தட்டார்மடம் வழியாக திசையன்விளைக்கு செல்லும் மெயின்ரோடு பழுதுபட்டதால் வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.
பழுதான இந்த ரோட்டினை சீரமைக்கக்கோரி அப்பகுதி கிராமமக்களும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் தற்பொழுது நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் புதிதாக தார் ரோடு அமைத்துள்ளனர்.
விஜயராமபுரத்திலிருந்து போடப்பட்ட புதிய தார் ரோட்டின் இருபக்க வாட்டிலும் மணல் போட்டு நிரப்புவதால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சென்றால் இந்த பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதனால் இந்த கிராமங்கள் வழியாக கடந்த 3 மாத காலமாக பஸ்கள், வாகனங்கள் செல்லாமல் நிறுத்தப்பட்டது.
இதனால் இப்பகுதி கிராமமக்கள் வெளியூர் செல்ல போக்குவரத்து வசதியின்றி சிரமப்பட்டதால் உடனே போடப்பட்ட புதிய தார்ரோட்டின் இரு பக்க வாட்டில் உள்ள பள்ளத்தை மணலால் நிரப்ப கோரியும், விஜயராமபுரம் கிராமத்திற்கு குடிதண்ணீர் கிடைத்திட ரோட்டோரம் போர் போட கோரியும் கிராமமக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து விஜயராமபுரம், திருப்பூர் இதன் சுற்றுபுரத்திலுள்ள சுமார் 300-க்கு மேற்பட்ட கிராமமக்கள் சாத்தான் குளத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் செல்வராஜ், விஜயராமபுரம் சண்முகவேல் தலைமையில் முற்றுகையிட்ட ஆண்களும், பெண்களும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப், முன்னாள் யூனியன் கவுன்சிலர் செல்வராஜ் உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
தகவலறிந்த சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ் மற்றும் வருவாய்துறையினர் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணேசன் மற்றும் நிர்வாக பொறியாளர் உட்பட நெடுஞ்சாலைத்துறையினரும் கலந்து கொண்டனர்.
முடிவில் புதிதாக போடப்பட்ட ரோட்டின் இருபக்க வாட்டில் உள்ள பள்ளத்தை மூடியும், விஜயராமபுரம் கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க போர் போடுவது குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள், அரசியல் கட்சியினர் கலைந்து சென்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்