என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Waikai river"
- பரமக்குடி நகர் பகுதியில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.
- 30-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி.க்கள் மூலம் ஆற்றுப்பகுதியில் உள்ள நாணல்கள், குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
பரமக்குடி
பரமக்குடி நகர் தெளிச்சாத்தநல்லூர் முதல் காக்காதோப்பு வரை வைகை ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் தொடங்கி வைத்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன், முருகேசன் எம்.எல்.ஏ., பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது.கருணாநிதி, துணைத்தலைவர் குணா, பொதுப்பணித் துறை வருவாய்த்துறை ஊராட்சித்துறை நகராட்சி நிர்வாகம், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், பரமக்குடி வியாபாரிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர். 30-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி.க்கள் மூலம் ஆற்றுப்பகுதியில் உள்ள நாணல்கள், குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
- சித்திரை திருவிழாவையொட்டி மானாமதுரை வைகை ஆற்றில் சீரமைப்பு பணிகள் நடைபெறும்.
- இந்த தகவலை நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் மன்றக்கூட்டம் தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
10-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் முனியசாமி கடந்த ஒரு ஆண்டாக நகராட்சி நிர்வாகம் தனது வார்டில் வளர்ச்சி பணிகளை செய்யாமல் புறக்கணிப்பதாக புகார் கூறும் வாசகங்கள் கொண்ட பதாகையை ஏந்தி வாயில் கருப்புதுணி கட்டி வந்து கூட்டரங்கில் தரையில் அமர்ந்து மவுனமாக இருந்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கவுன்சி லர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. பெரும்பா லான கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் குடிநீர், கழிவுநீர், வடிகால் சாலை, தெருவிளக்கு அமைத்தல், பராமரித்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியு றுத்தினர். கவுன்சிலர் சண்முகப்பிரியா பேசுகையில், ஆனந்த வல்லி சோமநாதர் சுவாமி கோவிலை சுற்றி தேரோடும் வீதிகளில் அதிகரித்து வரும் இறைச்சி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் வீதிகளில் பழுதடையும் தெருவிளக்குகளை சரி செய்ய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து தலைவர் மாரியப்பன் கென்னடி பேசியதாவது:-
மானாமதுரை நகராட்சியில் கடந்த ஓராண்டில் ரூ.7கோடி மதிப்பில் பொதுமக்களுக்கான வளர்ச்சி திட்டபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் வீதிகளை சுத்தம் செய்வதில் ஏற்பட்டிருந்த தொய்வு தற்போது படிப்படியாக குறைந்து துப்புரவு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
வரும் காலங்களில் துப்புரவுப்பணி இன்னும் சிறப்பாக நடைபெறும். அனைத்து வீதிகளிலும் புதிய தெருவிளக்குகள் அமைத்து பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மானாமதுரையில் விரைவில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. இதற்காக ரூ.5லட்சம் மதிப்பீட்டில் திருவிழாவிற்காக பொதுமக்கள் கூடும் நகர் பகுதி, வைகை ஆற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வியாபாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நகராட்சியில் தொழில் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. எந்த வார்டும் புறக்கணிக்கவில்லை. தர்ணாவில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க. உறுப்பினரின் வார்டில் திட்டப்பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்