என் மலர்
நீங்கள் தேடியது "warning flag"
- 4 வழிச்சாலையாக விரி வாக்கம் செய்யப்பட உள்ளது.
- திடீரென வேகத்தை குறைத்து நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து அரியலூர் மாவட்டம் மதனத்தூர் வரையிலான 55 கிலோ மீட்டர் சாலை 4 வழிச்சாலையாக விரி வாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் விருத்தாசலம் புறவழிச்சாலையில் இருந்து ராஜேந்திரபட்டினம், ஆண்டிமடம், ஜெயங் கொண்டம் வழியாக சாலை அகலப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள பொன்னேரி 4 முனை சந்திப்பில் சாலையை அகலப்படுத்துவதற்காக, ஒரு புறத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணி நடை பெற்று வருகிறது. அப்பகு தியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒருபுறம் சாலை தோண்டப்பட்டுள்ள தால் அந்த இடத்தில் வாக னங்கள் ஒரு வழியில் மட்டுமே வந்து செல்கின்றன. ஆனால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் அந்த சாலை ஒருவழிச்சாலையாக மாற்றப்பட்டிருப்பது தெரியா ததால் வேகமாக வந்து 4 முனை சந்திப்பில் எதிரில் வரும் வாகனங்க ளுக்கு வழி விடுவதற்காக, குழப்பமடைந்து திடீரென வேகத்தை குறைத்து நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து நடை பெறும் அபாயம் உள்ளது. அந்த பகுதியில் பெரும் விபத்து நடைபெறுவதற்கு முன், நெடுஞ்சாலை துறை மற்றும் போலீசார் நடவடிக் கை எடுத்து இந்த பகுதியில் பேரிகார்டு, எச்சரிக்கை பதாகைகள், ரிப்ளக்டர்கள் வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.