search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Flow Increased"

    • உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
    • நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்றுமாலை வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்க வும் இன்று 4-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்ட ப்பட்டு போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அருவியில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவர்கள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கரையில் இருந்தவாறு நின்று ரசித்து பார்த்தனர்.

    மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையின் நீர்மட்டம் 92.60 அடியாக உள்ளது.

    சேலம்:

    கர்நாடக, தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    நேற்று மாலை வினாடிக்கு 8 ஆயிரத்து 268 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 12 ஆயிரத்து 713 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 92.60 அடியாக உள்ளது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் தற்போது 55.67 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 

    • கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது
    • இதனால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

    பெரும்பாறை:

    மேற்கு தொடர்ச்சி மலையில் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில், பெரும்பாறை, கானல்காடு, தடியன்குடிசை, பெரியூர், குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்கள் உள்ளன. கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது.

    இதன் எதிரொலியாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் நீரூற்றுகள் தோன்றியுள்ளன. மேலும் நீர்வீழ்ச்சிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    அதன்படி பெரும்பாறை அருகே இயற்கை எழில் மிகுந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளியல் போட சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    மேலும் இந்த தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது. கடந்த ஒரு வாரமாகவே நீர்வீழ்ச்சி பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து அருவிபோல் கொட்டுவதால் ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    திருப்பூர் மாவட்டம் நல்லாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #NallaruRiver #NallaruFlood
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி, பழங்கரை, ஆட்டையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் நல்லாற்றில் தண்ணீர்  பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து மழை பெய்ததால் பழமைவாய்ந்த தாமரை குளம், சங்கு மாங்குத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நல்லாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்வதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #NallaruRiver #NallaruFlood
    ×